Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவன் நீதிபரர், அதேபோன்று இரக்கமுள்ளவர்

    இரக்கமுள்ளவராயும், பொறுமை நிறைந்தவராயும், அன்புள்ளவராயும், தயவுள்ளவராயும், சத்தியம் நிறைந்தவராயும் இருப்பதென்பது தேவனுடைய மகிமையாகும் (குணமாகும்). இருப்பினும், கர்த்தர் தமது இரக்கத்தை வெளிக்காட்டுவது அவரது மகிமையாக இருப்பது போலவே பாவியை தண்டிப்பதில் காட்டப்படுகிற நீதியும் மெய்யாகவே கர்த்தருடைய மகிமையாக இருக்கின்றது. — RH March 10, 1904.கச 175.3

    இஸ்ரவேலின் கர்த்தராகிய தேவன், எகிப்தின் தேவர்கள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியதுபோலவே, இந்த உலகத்தின் அனைத்து தேவர்கள்மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவிருக்கிறார். அவை அக்கினியாலும், வெள்ளத்தாலும், வாதைகளாலும், பூமியதிர்ச்சிகளாலும் பூமி முழுவதையும் சேதப்படுத்துவார். அப்போது மீட்கப்பட்ட மக்கள் அவரது நாமத்தை உயர்த்தி, இப்பூமியிலே அதை மகிமையுள்ளதாக்குவார்கள். இந்த பூமியினுடைய சரித்திரத்தின் கடைசி மீதமான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், தேவன் கற்றுக்கொடுத்த பாடங்களைக் குறித்து ஞானமடையமாட்டார்களா? — 10MR 240, 241 (1899).கச 175.4

    நமது பரிந்துரையாளராக நின்றுகொண்டிருக்கின்ற தேவன், எல்லாப்பாவ அறிக்கைகளையும் உருக்கமான ஜெபங்களையும் கேட்கின்ற கிருபை மற்றும் அன்பின் அடையாளமான வானவில்லை தமது தலையில் அணிந்தவராக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்ற தேவன், பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலே தமது வேலையை விரைவில் முடிக்கவிருக்கின்றார். அப்போது கிருபையும், இரக்கமும் அவரது சிங்காசனத்திலிருந்து இறங்கும், நியாயமும் நீதியும் அவைகளின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். யாருக்காக அவரது ஜனங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்களோ, அவரை முதன்மை நீதிபதியின் ஸ்தானத்திலேயே அவர்கள் காண்பார்கள். — RH Jan.1, 1889.கச 175.5

    வேதாகமம் முழுவதிலும் இரக்கம் நிறைந்த, தயை நிறைந்த ஒரு நபராக மாத்திரம் நம் தேவன் சுட்டிக்காட்டப்படவில்லை; கண்டிப்புள்ள, பட்சபாதமற்ற, நீதியுள்ள ஒரு தேவனாகவும் அவை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றார். — ST March 24, 1881.கச 176.1