Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க மனதைப் பயிற்றுவித்தல்

    தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்து, தேவனுடைய வார்த்தையைக் குறித்து தாராளமாக கேள்வி கேட்பவர்களும், நம்பாமலிப்பதற்கு ஏதாகிலும் சந்தர்ப்பம் எங்காவது இருக்கின்றதா என்று அனைத்தையும் சந்தேகிப்பவர்களும், உபத்திரவம் வரும்பொழுது விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு பயங்கரமான போராட்டம் அவசியமாக இருக்கும் என்பதை கண்டுகொள்வார்கள். அவிசுவாசத்தின் வழியினிலே பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் மனதைக் கட்டியிருக்கின்ற செல்வாக்கை மேற்கொள்வது ஏறக்குறைய இயலாததொன்றாகும். ஏனெனில், இப்படிப்பட்ட வழியினைப் பின்பற்றியதன் மூலம், ஆத்துமா சாத்தானுடைய கண்ணியிலே கட்டப்பட்டிருந்து, ஆத்துமாவைச் சுற்றிலும் மிகமிக நெருக்கமாக பின்னப்பட்டிருக்கும் பயங்கரமான வலையைத் தறித்துப்போடுவதற்கு வல்லமையற்றதாக மாறிவிடும்.கச 49.1

    மனிதன் சந்தேகத்தின் ஒரு மனப்பாங்கை எடுத்துக்கொள்ளும்போது, சாத்தானது ஏதுகரங்களை தனது உதவிக்கு அழைக்கின்றான். அவிசுவாசத்தின் வழியிலே பயிற்றுவிக்கப்பட்ட ஒருவனின் ஒரே நம்பிக்கை, அந்தகாரத்தினின்று கிறிஸ்துவின் ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கும்படியாக தனது சித்தத்தையும் தனது வழியையும் கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, அனைத்து உதவிகளும் அற்றவனாக ஒரு குழந்தையைப் போன்று இரட்சகரின்மீது விழுவதே ஆகும். சாத்தானுடைய கண்ணியிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்வதற்குரிய வல்லமை மனிதனுக்குக் கிடையாது. கேள்வி, சந்தேகம் மற்றும் குற்றம் கண்டுபிடித்தல் என்ற வழியினில் தன்னைத்தானே பயிற்றுவிக்கும் ஒருவன், உன்மையற்ற தன்மையில். தன்னத்தானே உறுதிப்படுத்திக் கொள்கின்றான். - Ms 3, 1895.கச 49.2