Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    துன்மார்க்கர் கொலைசெய்யப்படுவர்

    தங்களது சொந்த மூர்க்கமான உணர்ச்சிகளின் வெறித்தனமான சண்டையினாலும், தேவனுடைய கலப்பில்லாத உக்கிரகோபம் பயங்கரமாக ஊற்றப்படுவதாலும்- ஆசாரியர்களும், அதிகாரிகளும், மக்களில் உயர்ந்ததோரும், தாழ்ந்தோரும், ஐசுவரியவான்களும், ஏழைகளும் ஆகிய துன்மார்க்கமான பூமியின் குடிகள் அனைவரும் ஏகமாய் மடிகிறார்கள். “அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள். அவர்கள் புலம்பப்படாமலும், சேர்க்கப்படாமலும், அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்” ஏரே. 25:33.கச 204.6

    கிறிஸ்து வரும்போது, துன்மார்க்கர் பூமியின் மீதெங்கும் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள். அவரது நாசியின் சுவாசத்தினாலே சுட்டெரிக்கப்பட்டு, அவரது மகிமைப்பிரகாசத்தினாலே அழிந்துபோவார்கள். கிறிஸ்து தமது ஜனங்களை தேவனுடைய நகரத்திற்குக் கொண்டுசெல்வார். அதன் பின்பு பூமியானது அதனுடைய குடிகளின்றி வெறுமையாயிருக்கும். — GC 657 (1911).கச 205.1

    பாவம் எங்கு காணப்பட்டாலும் அங்கு ” நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய்” (எபி. 12:29) இருக்கிறார். அவரது வல்லமைக்கு ஒப்புக்கொடுக்கின்ற அனைவரிடமும் உள்ள பாவங்களை தேவ ஆவியானவர் சுட்டெரிப்பார். ஆனால் மனிதர்கள் பாவத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பார்களானால், அதனுடன் அடையாளமிடப்பட்டவர்களாக இருப்பார்கள். அதன் பின்பு பாவத்தை அழிக்கின்ற தேவனுடைய மகிமை அவர்களையும் அழித்துவிடும். — DA 107 (1898).கச 205.2

    நீதிமான்களுக்கு ஜீவனாயிருக்கும் தேவனுடைய முகத்தின் மகிமை, துன்மார்க்கருக்குப் பட்சிக்கும் அக்கினியாக இருக்கும். - DA 600 (1898).கச 205.3