Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவன் தமது பாதுகாப்பை விலக்கிக்கொள்ளும்பொழுது நியாயத்தீர்ப்புகள் வரும்

    தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் கர்த்தரிடமிருந்து நேரடியாக வருவதில்லை. மாறாக, எந்தவிதமாக அவர்கள்மீது வரும் என்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. அதாவது, மக்கள் தங்களை தேவனுடைய பாதுகாப்பிற்கு அப்பால் வைத்திக்கொள்கின்றனர். அப்பொழுது ஆண்டவர் அவர்களை எச்சரிக்கின்றார்- திருத்துகின்றார்- கடிந்துகொள்கின்றார் — பாதுகாப்பான ஒரே வழியைச் சுட்டிக்காண்பிக்கின்றார். ஆண்டவர் இவ்வளவையும் செய்த பின்பு, அவரது விசேஷ கவனத்தின் இலக்காக இருக்கின்றவர்கள், திரும்பத் திரும்ப எச்சரிப்புகள் கொடுக்கப்பட்ட பின்னும், தேவ ஆவியானவரைச் சார்ந்திராமல் தங்களது சொந்த வழியிலேயே சென்று, தங்களது சொந்த வழியையே பிடிவாதமாய்த் தெரிந்தெடுப்பார்களானால், அதன் பின்பு அவர்கள் மீதான சாத்தானுடைய தீர்மானமான தாக்குதல்களைத் தடுக்கும்படியாக தமது தூதர்களுக்கு அவர் அதிகாரம் அளிக்கமாட்டார்…கச 177.1

    சமுத்திரத்திலும் நிலத்திலும் நாசமோசம் மற்றும் வருத்தத்தைக் கொண்டுவருவதும், திரளான ஜனங்களைத் துடைத்தழித்துகொண்டிருப்பதுமான இந்த நிகழ்வுகள், சாத்தானுடைய இரையென்று உறுதிப்படுத்தக்கூடயவகையில், அவனது வல்லமை கிரியை செய்துகொண்டிருக்கின்றது. — 14MR 3 (1883).கச 177.2

    தங்களது சொந்த அழிவின் வழிகளையே பின்பற்றினவர்களின் மூலமாக, தேவனுடைய சத்தியம் தவறாகக் காண்பிக்கப்பட்டு, தவறாக நிதானிக்கப்பட்டு அவமதிக்கப்படுவதனால், அவர்களைத் தண்டிப்பதற்கு தேவன் தமது சத்துருக்களைக் கருவிகளாக உபயோகிப்பார். — PC 136 (1894).கச 177.3

    ஏற்கெனவே தேவ ஆவியானவர் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவதனால், அவர் பூமியிலிருந்து திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார். எவ்வளவு சீக்கிரமாய் தேவ ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்படுகின்றாரோ, அவ்வளவு சீக்கிரமாய் சாத்தானின் கொடூரமான வேலை நிலத்திலும் கடலிலும் நடப்பிக்கப்படும். — 1MS 34, 1898.கச 177.4

    துன்மார்க்கர் தங்களது கிருபையின் காலத்தின் எல்லையைக் கடந்துவிட்டனர். இதுவரை தொடர்ந்து பிடிவாதமாய் எதிர்க்கப்பட்ட தேவ ஆவியானவர், கடைசியாக எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் தெய்வீகக் கிருபையினால் பாதுகாக்கப்படாதிருப்பதால், பொல்லாங்கனிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. — MR 614 (1911).கச 177.5

    சில வேளைகளில் பரிசுத்த தூதர்கள் அழிவின் வல்லமையை நடப்பிப்பர். 1பாவிக்கென்று அளந்து பங்கிட்டு அளிக்கப்பட்டிருக்கின்ற தண்டனைக்கு அவனே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆண்டவர் ஒருவனையும் அழிப்பதில்லை. பாவி தன்னுடைய சொந்தத் தவறிலிருந்து மனந்திரும்பாததால் தன்னைத்தான் அழித்துக்கொள்கின்றான் என்று எலன் உவைட் குறிப்பிடுகின்றார். — 5T 120; GCPP. 25-37.கச 177.6

    எரிகோவிற்கு எதிராக தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எழுப்பப்பட்டன. அது ஒரு அரணிப்பான பட்டணமாகும். ஆனால் அப்பட்டணத்திற்கு எதிராக யுத்தம் செய்யும்படிக்கு, பரலோகத்தின் சேனைகளைவழிநடத்தி கர்த்தருடைய சேனையின் அதிபதிதாமே பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். தேவதூதர்கள் அந்த மாபெரும் சுவர்களைத் தகர்ந்து தரையில் விழித்தள்ளினார்கள். — 3T 264 (1873).கச 177.7

    தேவனுக்குக் கட்டுப்பட்ட நிலையில் உள்ள தூதர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள். ஒரு சமயத்தில் அவர்கள் கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அசீரியரின் சேனையிலிருந்த ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேரை ஒரே இராத்திரியிலே கொன்றுபோட்டார்கள். — DA 700 (1898).கச 178.1

    ராஜரீக பிராகாரங்களிலிருந்து பேதுருவை மீட்கத்தக்கதாக வந்த அதே தூதன்தான், ஏரோதிற்குக் கோபாக்கினையையும் நியாயத்தீர்ப்பபையும் கொண்டுவந்தவன். நித்திரையிலிருந்து பேதுருவை எழுப்பும்படியாக அந்த தேவதூதன் அவனைத் தட்டினான். ஆனால், துன்மார்க்கமான அரசனின் அகந்தை, தாழ விழவும், சர்வல்லவருடைய தண்டனையைக் கொண்டுவரவும், ஏரோதுவை அவன் வேறுவிதமாகத் தட்டினான். தேவ கோபத்தினாலுண்டான நியாயத்தீர்ப்பின் கீழ், ஏரோது மிகுந்த மன வேதனையுடனும் உடல் வேதனையுடனும் மரித்தான். — AA152 (1911).கச 178.2

    அன்று எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் அனைவரையும் சங்கரித்து. அந்நாட்டையே துக்கத்தால் நிரப்பினது ஒரு தூதன்தான். தாவீது ஜனங்களைத் தொகைபார்த்தபோது, தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினால் அவனது பாவம் தண்டிக்கப்படும்படியாக, பயங்கரமான அழிவை உண்டாக்கியது ஒரே ஒரு தேவதூதன்தான். தேவன் கட்டளையிடும்பொழுது இப்படிப்பட்ட பெரும் அழிவுகளை உண்டாக்கப் பரிசுத்த தூதர்களால் பயன்படுத்தப்படும் அதே அழிக்கும் வல்லமை, அவர் அனுமதிக்கும்பொழுது தீய தூதர்களாலும் பயன்படுத்தப்படும். எவ்விடத்திலும் பாழ்க்கடிப்பை உண்டாக்கும்படி தேவ அனுமதிக்காக, பிசாசுகளின் அந்த வல்லமைகள் இப்போதும் ஆயத்தமாக இருக்கின்றன. — GC 614 (1911).கச 178.3