Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அவரைக் குத்தினவர்களின் எதிர்ச்செயல்

    கிறிஸ்துவை மறுதலித்து, அவரது சிலுவை மரணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர்கள், அவர் இருக்கின்றவண்ணமாகவே அவரைத் தரிசிக்கத்தக்கதாக எழும்புவார்கள். கிறிஸ்துவைப் புறக்கணித்தவர்கள், பரிசுத்தவான்கள் மகிமையடைவதைக் காணும்படியாக எழும்புவார்கள். அந்த நேரத்தில் பரிசுத்தவான்கள் ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமடைந்து, தங்களது கர்த்தரைச் சந்திப்பதற்கு, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ப்படுவார்கள். அன்று அவர்மீது சிவப்பங்கியை போட்டவர்களும், அவரது சிரசின்மீது முள்முடியை வைத்தவர்களும், அவரது சுரங்களிலும் கால்களிலும் ஆணியடித்தவர்களுமாகிய அந்த மனிதர்கள் அவரை பார்த்து புலம்புவார்கள். — 9MR 252 (1886).கச 202.1

    அவரது அன்பு எப்படியெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது, அவரது மனதுருக்கம் எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்கப்பட்டது என்பதெல்லாம் அவர்கள் நினைவிற்கு வரும். திருடனும் கொள்ளைக்காரனுமாய் இருந்த பரபாஸ், எப்படி கிறிஸ்துவுக்குப் பதிலாக விடுவிக்கப்படும்படி தெரிந்துகொள்ளப்பட்டான் என்பதையும், அவர் எப்படி முள்முடி சூட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும், சிலுவையின் மீது அவர் பட்ட வேதனையின் கடுந்துயர மணித்துளிகளில் எப்படி ஆசாரியர்களும் அதிகாரிகளும் “மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம்” என்று கடினமாக நிந்தனை செய்தார்கள் என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். கிறிஸ்துவிற்குக் காட்டப்பட்ட எல்லா அவமரியாதையும் வெறுப்பும், அவரது சீஷர்களுக்கு அளிக்கப்பட்ட எல்லா உபத்திரவமுமாகிய இப்படிப்பட்ட சாத்தானிய செய்கைகள் அன்றைக்குச் செய்யப்பட்டபோது எப்படிப் பசுமையாக நினைவில் இருந்ததோ, அப்படியே மீண்டும் அவர்களது நினைவிற்கு வரும்.கச 202.2

    அடிக்கடி அவர்களைப் பரிவோடு கெஞ்சி வருந்தியழைத்த அந்த சத்தம், அவர்களது காதுகளில் மீண்டும் தொனிக்கும். ஜெப ஆலயங்களிலும் தெருக்களிலும் இரட்சகர் பேசின கிருபையான வேண்டுதல்மிக்க ஒவ்வொரு தொனியும், மிகத் துல்லியமாக அவர்களது காதுகளில் எதிரொலிக்கும். அப்போது அவரைக் குத்தினவர்கள் பர்வதங்களையும் மலைகளையும் பார்த்து, தங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்துக்கும் தங்களை மறைத்துக் கொள்ளும்படி கெஞ்சுவார்கள். — Letter 131, 1900.கச 202.3