Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மற்ற துன்மார்க்கமான பட்டணங்கள்

    உலக சரித்திரத்தின் முடிவை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, சான்பிரான்சிஸ்கோவினுடைய அழிவின் காட்சிகள் மற்ற இடங்களிலும் மீண்டுமாக நடைபெறும் என்பதை நாம் காணலாம்… நியாத்தீர்ப்பு நாள் சரியாக நம்மீது வந்திருக்கின்றது என்பதை நான் அறிந்திருப்பதால், இப்படிப்பட்ட காரியங்கள் என்னை மிகவும் பக்திவிநயமாக இருக்க வேண்டும் என்று உணரச்செய்கின்றது. இதுவரை ஏற்கனவே வந்த நியாயத்தீர்ப்புகள் ஒரு எச்சரிப்பாகும். ஆனால் அவை, துன்மார்க்கமான பட்டணங்களின்மீது வர இருக்கின்ற தண்டனையின் முடிவு அல்ல...கச 84.2

    ஆப. 2:1-20; செப். 1:1-3:20; 1:1-4:14; சக. 1:1-4:14; மல். 1:1-4 — இவ்வசனங்களின் தேளிவாக விளக்கப்பட்டிருக்கிறதுபோல, இந்தக் காட்சிகள் வெகு சீக்கிரத்தில் சாட்சியாக நிரூபணமாக்கப்படும். ஒவ்வொருவரையும் என் கருத்தில் கொண்டு, வேத வார்த்தையிலிருந்து இந்த அற்புதமான வாக்கியங்களை அளிக்கின்றேன். பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் கடைசி காலத்திற்கான கர்த்தருடைய வார்த்தையாகும். சான்பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்த அழிவை நாம் கண்டதுபோலவே, அத்தீர்க்கதரிசனங்களெல்லாம் நிச்சய மாகவே நிறைவேறும். — Letter 154, May 26, 1906.கச 84.3

    மீறுதலும் பாவமும் உச்சநிலைக்கு நிறைந்துபோன பட்டணங்கள் பூமியதிர்ச்சிகளாலும், அக்கினியாலும், வெள்ளத்தாலும் அழிக்கப்பட்டுப்போகும் என்ற தூதினை அறிவிக்கும்படியாக நான் கட்டளையிடப்பட்டேன். — Ev 27 (April 27, 1906).கச 84.4

    இந்த உலக சரித்திரத்தினுடைய முடிவில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக்குறித்த கிறிஸ்துவின் அனைத்து எச்சரிப்புகளும் இப்போது நமது பெரிய பட்டணங்களிலே நிறைவேறிக்தகொண்டிருக்கின்றன. கடந்தோடுகிறவன் வாசிக்கும்படி இவைகளெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டத்தக்கதாக தேவன் இவைகளை அனுமதித்திருக்கின்றார். முழு உலகமும் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு சான்பிரான்சிஸ்கோ பட்டணம் ஓர் உதாரணமாகும். துன்மார்க்கமாய் வாங்கப்படும் லஞ்சம், பணத்தை அல்லது பொருளை மோசடி செய்தல், குற்றமற்றவனைத் தண்டித்துக் குற்றவாளியை விடுவிப்பதற்கு அதிகாரம் பெற்ற மனிதர்கள் மத்தியில் காணப்படும் முறைகேடான ஆதாயத் தொழில் நடவடிக்கைகள்போன்ற இவையனைத்து அக்கிரமமும் பூமியிலுள்ள மற்ற பெறிய பட்டணங்களை நிறைத்து, ஜலப்பிரளயத்திற்கு முன்னான நாட்களிலிருந்துபோன்ற உலகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. — Letter 230, 1907.கச 84.5