Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தின் சமாதானமான அன்பான சூழல்

    பரலோக மன்றங்களின் சமாதானமும் ஒத்திசைவும், முரட்டுத்தன மானவர்கள் அல்லது இரக்கமற்றவர்களின் பிரசன்னத்தினால் களங்கமடையாது. - 8T 140 (1904)கச 216.5

    பரலோகத்தில் இருக்கின்ற அனைத்தும் மேன்மையாயும் உயர்த்தப் பட்டதாயும் இருக்கின்றது. அங்கிருக்கின்ற அனைவரும் மற்றவர்களது சந்தோஷத்தையும் அக்கறையையுமே நாடுவார்கள். சுயத்தைக் கவனிக்கவோ, சுயத்திற்கு அக்கறை காட்டவோ ஒருவரும் தங்களை ஒப்படைக்கமாட்டார்கள். தங்களைச் சுற்றிலும் இருப்பவர்களுடைய சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் காண்பது மாத்திரமே, பரிசுத்தவான்களனைவருடைய பிரதான மகிழ்ச்சியாயிருக்கும். -2T 239 (1869).கச 217.1

    எங்கும் சமாதானமாயிருந்ததும், பூமியின் புயல்போன்ற போராட்டங்கள் ஒருபோதும் வராததுமான அந்த இடத்திலே நான் இருந்ததாக உணர்ந்தேன். பரலோகம் — அது பரிசுத்தமும், தூய்மையுமான, ஆசீர்வதிக்கப்பட்டோர் கூடுகின்ற ஒரு நீதியின் ராஜ்யமாகும். அங்கே ஆயிரமாயிரம்பேரும், கோடாகோடிபேரும், மகிழ்ச்சியான பரிசுத்த நெருக்கத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற தேவனையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதித்துக்கொண்டிருந்தனர்.கச 217.2

    அவர்களுடைய குரல்கள் ஒன்றோடொன்று பூரண இசைவுடனிருந்தன. அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் தீங்கு இழைத்துக்கொள்ளவில்லை. இந்த வல்லமையான ராஜ்யத்தின் அதிகாரிகளாகிய பரலோகத்தின் இளவரசர்களாகிய அவர்கள், ஒருவருக்கொருவர் மற்றவரின் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நாடி, நன்மைக்கு மட்டுமே போட்டியாளர்களாக இருக்கின்றனர். பெரியவர் அங்கே சுயமதிப்பில் சிறியவராகவும், சிறியவர் தமது நன்றியுணர்விலும், அன்பின் நிறைவிலும் பெரியவராகவும் இருப்பர்.கச 217.3

    ஞானவான்களின் ஞானத்தை மங்கச் செய்கின்ற தவறான காரியங்கள் அங்கே இருக்காது. தெளிவான, பலமான, பூரணமான சத்தியமும் அறிவும் எல்லாவித சந்தேகத்தையும் துரத்திவிடும். எனவே எவ்வித சந்தேகத்தின் மேகமும், அதன் மகிழ்ச்சியான குடிகள்மீது தனது கேடு விளைவிக்கும் காரியத்தை நிழலிடச் செய்யாது, பரலோகத்தின் பூரண சமாதானத்தையும் இனிமையையும், எந்த ஒரு வாக்குவாதக் குரல்களும் கெடுக்காது. அதன் குடிகள் வருத்தத்தையும், கவலையையும், கண்ணீரையும் அறியமாட்டார்கள். அனைத்தும் பரிபூரண ஒழுங்கோடும், பரிபூரண மகிழ்ச்சியோடும் இருக்கும்...கச 217.4

    அனுதாபம் ஒவ்வொரு இருதயத்திலும் உயிருள்ளதாயும், ஒவ்வொரு பார்வையிலும் வெளிப்படக்கூடியதாயும் இருக்கின்ற ஒரு இல்லமே பரலோகமாகும். அன்பு அங்கே ஆளுகை செய்யும். கெடுதல் செய்கின்ற மூலக்கூறுகளும் அங்கிருக்காது; பிரிவினைகளோ அல்லது வாக்குவாதங்களோ அல்லது போராட்டத்திற்கேதுவான வார்த்தைகளோ அங்கே இருக்காது. — 9MR 104, 105 (1882).கச 217.5