Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆழமான — உயிர்த்துடிப்புள்ள ஓர் அனுபவம்! , மார்ச் 30

    “முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்… இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்”. - எபிரெயர் 2:3,4.Mar 177.1

    ஆண்டவனின் வருகையை நாம் தள்ளிபோட்டுக்கொண்டிருக்கக்கூடாது என்பதை நான் கண்டேன். “பூமியின்மீது வந்து கொண்டிருக்கிற காரியங்களுக்காக ஆயத்தமாகுங்கள், ஆயத்தமாகுங்கள், உங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி உங்களது செயல்கள் இருப்பதாக” என்று தூதன் சொன்னான். நமது மனம் தேவனில் நிலைத்திருக்க வேண்டும். நமது செல்வாக்கு தேவனுக்காகவும் அவரது சத்தியத்திற்காகவும் பேசுவதாக அமையவேண்டும் என்பதை நான் கண்டேன். நாம் கவனக்குறைவுடன் அக்கறையற்றவர்களாக இருந்துகொண்டு, தேவனை கனம்பண்ணமுடியாது… நமது மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களை இரட்சிப்பதற்கும், நாம் ஊக்கமுடையவர்களாக இருக்கவேண்டும். இதைத்தவிர, அனைத்துக் காரியங்களும் இரண்டாவது இடத்திற்கு கொண்டுவரப்படவேண்டும்.Mar 177.2

    பரலோகத்தின் அழகை நான் கண்டேன். தூதர்கள் இயேசுவிற்கு துதியையும் கனத்தையும் மகிமையையும் செலுத்தி, மகிழ்ச்சி பொங்க பாடுவதை நான் கேட்டேன்; அப்பொழுது, தேவகுமாரனின் ஆச்சரியமான அன்பைப்பற்றி ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது. அவர் பரலோகத்தில் தனக்கிருந்த அனைத்து மேன்மைகளையும் மகிமையையும் விட்டுவந்தார். அவர் நமது இரட்சிப்பிலே மிகுந்த எல்லா அவமானத்தையும் அவமதிப்பையும் பொறுமையோடு சகித்துக் கொண்டார். அவர் நமக்காக காயப்பட்டு, அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார். நாம் அவரது இரத்தத்தால் கழுவப்பட்டு, உயிர்த்தெழுதலைப்பெற்று, அவரோடு நமக்காக அவர் ஆயத்தஞ் செய்துகொண்டிருக்கிற மாளிகையிலே, பரலோகத்தின் மகிமையையும் ஒளியின் பிரகாசத்தையும் அனுபவிக்கவும், தூதர்களின் பாட்டைக் கேட்கவும், அவர்களோடு பாடவுந்தக்கதாக, நம்மை மரணித்தினின்று காப்பாற்றுவதற்காக, கடுந்துயரோடுகூடிய மரணத்தை அடையத்தக்கதாக, கல்வாரிச் சிலுவையிலே நமக்காக அடிக்கப்பட்டார்.Mar 177.3

    பரலோகம் முழுவதுமே நமது இரட்சிப்பில் ஆர்வங்கொண்டிருக்கிறது என்பதை நான் கண்டேன். நாம் அக்கறையற்றவர்களாக இருக்க முடியுமா? நாம் இரட்டிக்கப்படுவதும், அழிந்துபோவதும் ஏதோ ஒரு சிறிய அற்ப காரியம் என்பதுபோல் நினைத்து, நாம் கவலையற்று இருக்கலாமா? நமக்காகச் செய்யப்பட்டிருக்கிற அந்த தியாகத்தை நாம் அலட்சியப்படுத்தலாமா?...Mar 178.1

    இந்த இருண்ட உலகத்தின் ஆபத்துகளினூடாகச் சென்று, பரலோகத்தை அடையத்தக்கதாக, நமது பாதங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு, நமக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தேவனுடைய உக்கிர கோபத்திலிருந்து நாம் எப்படி தப்பலாம் என்று நமக்குச் சொல்கிறது; மேலும், கிறிஸ்து நமக்காக பட்டபாடுகளைப்பற்றியும், நாம் இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய சமூகத்தில் என்றென்றும் மகிழ்ச்சியை அனுபவிக்கத்தக்கதாக அவர் செய்த மாபெரும் தியாகத்தைப்பற்றியும் கூறுகிறது.Mar 178.2

    தேவ பக்தியின் ஒரு வேஷம் எவரையும் இரட்சிக்காது. அனைவரும் ஆழமான-ஜீவனுள்ள அனுபவமுடையவர்களாக இருக்க வேண்டும். இந்த அனுபவம் மாத்திரமே இக்கட்டுக்காலத்தில் அவர்களைக் காப்பாற்றும்; பின்னர், அவர்களது பணி எந்த வகையைச் சார்ந்தது என்று பரிசோதிக்கப்படும். அது பொன்னாகவோ-வெள்ளியாகவோ-விலையேற்றப்பட்ட கற்களாகவோ இருந்தால், தேவனுடைய கூடாரத்தின் மறைவிலே பாதுகாத்து வைக்கப்படும்.⋆Mar 178.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 178.4

    “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது.” - ஏசாயா 43:2.Mar 178.5