Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முன்மாரியும், பின்மாரியும்!, ஜூலை 30

    “சீயோனின் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்துகளிகூறுங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியாகக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.” — யோவேல் 2:23.Mar 421.1

    சபைகளிலே தேவனுடைய வல்லமையின் அதிசயமான வெளிப்படுத்தல்கள் இருக்கும்: ஆனால், கர்த்தருக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தாதவர்களிடத்திலும் பாவ அறிக்கையினாலும் மனந்திரும்புதலினாலும் தங்களது இதயக் கதவைத் திறக்காதவர்களிடத்திலும் ஆவியானவர் அசைவாடமாட்டார். தேவ மகிமையினால் பூமியைப் பிரகாசிப்பிக்கின்ற அந்த வல்லமையின் வெளிப்படுத்தல்களிலே, தங்களது குருட்டுத்தனத்திலே, தாங்கள் ஆபத்தென்று நினைக்கிற காரியத்தை மாத்திரமே பார்க்கிறார்கள், அது அவர்கள் பயத்தை மாத்திரமே விழிப்படையச் செய்கிறது; எனவே, அதை எதிர்ப்பதற்காக தங்களைப் பலப்படுத்திக்கொள்ளுகிறார்கள். தங்களது இலட்சியதின்படியும் எதிர்பார்ப்புகளின் படியும் ஆண்டவர் கிரியைசெய்யாதிருக்கிறபடியால், அவர்கள் ஊழியத்தை எதிர்க்கிறார்கள். “நீண்ட காலமாக நாங்கள் இந்த வேலையில் இருந்துகொண்டிருக்கிறபடியால், ஏன் நாங்கள் தேவனுடைய ஆவியானவரை அறிந்திருக்க முடியாதா?” என்று அவர்கள் வினவுகிறார்கள். ஊழியத்தை எதிர்ப்பவர்கள் அவர்கள் எச்சரிப்புகளுக்குச் செவிசாய்க்காததினால், “நான் ஐசுவரியவான் என்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை” என்றும் விடாப்பிடியாகத் தொடர்ந்து சொல்லுகிறார்கள்.Mar 421.2

    தங்களை நீதியின் சூரியனுடைய பிரகாசமான ஒளிக்கதிர்களின் அடியில் வைத்தவர்களாக-ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களாக-தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக-பரிசுத்த ஆவியின் அருட்கொடையினால் ஆயத்தமாக்கப்பட்டாலொழிய, நீண்ட அனுபவமும் திறமையும் இருந்துவிட்டால் மாத்திரமே அது அவர்களை ஒளியின் வாய்க்கால்களாக மாற்றாது. பரிசுத்த காரியங்களை ஏற்று நடத்துகிறவர்கள், தேவனுடைய மகா வல்லமையுடைய கரத்திற்கடியில் தங்களைத் தாழ்த்தும்பொழுது, ஆண்டவர் அவர்களை உயர்த்துவார். காரியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறவர்களாக. தேவன் அவர்களை மாற்றுவார். அவரது ஆவியானவரின் கிருபையின் ஐசுவரியம் நிறைந்தவர்களாக மாற்றுவார். உலகத்தின் ஒளியாக இருக்கிறவரிநின்று வருகிற வெளிச்சத்திலே, அவர்களது குணத்தில் காணப்படும் வலுவான தன்னலக்கூறுகளும் பிடிவாதமான போக்கும் வெளியரங்கமாகக் காணப்படும். “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சதில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்” — வெளி. 2:15; “நீங்கள் முழுமனதோடும் ஆண்டவரைத் தேடினீர்களானால், அவர் உங்களுக்குக் காணப்படுவார்.”Mar 421.3

    முன்மாரியினால் சுட்டிக்காட்டப்பட்ட கிருபையை அசட்டை செய்யக்கூடாது. தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தின்படி நடக்கிறவர்கள் மாத்திரமே, மேலான அதிக வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வார்கள். செயல்திறமுடைய கிறிஸ்துவ ஒழுக்கங்களின் எடுத்துக்காட்டுதல்மூலமாக, நாம் ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டிருந்தாலொழிய, பின்மாரியில் உண்டாகும் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களை நாம் கண்டு உணர முடியாது. நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களது இதயங்களிலே பின்மாரி பெய்துகொண்டிருக்கலாம். நாம் அதைத் தெளிவாக அறிந்துகொள்ளாமலோ-பெற்றுக்கொள்ளாமலோ இருப்போம்.⋆Mar 422.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 422.2

    “...விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி எனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.” — ஏசாயா 58:8.Mar 422.3