Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    செயலில் காட்டப்படும் விசுவாசம்!, பிப்ரவரி 19

    “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகயால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.” - 1 பேதுரு 4:7.Mar 99.1

    அனைத்துக் காரியங்களுக்கும் முடிவு சமீபமாயிருக்கிறது; வரலாற்றின் எல்லாக்காட்சிகளும் சீக்கிரம் முடியப்போகின்றன என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியிருந்தால், உங்கள் விசுவாசத்தை உங்கள் கிரியைகளின்மூலம் வெளிப்படுத்துங்கள். ஒரு மனிதன் தான் கொண்டுள்ள எல்லா விசுவாசத்தையும் வெளிப்படுத்துவான். சிலர் தங்களிடம் அதிக விசுவாசம் உள்ளதாக எண்ணிக்கொள்கின்றனர்; அப்படியே இருக்கும்பட்சத்தில், அது செத்ததாகவே இருக்கிறது; ஏனெனில், அது கிரியைகளினாலே நிலை நிறுத்தப்படவில்லை. “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும்.” ஆத்துமாவை சுத்துகரிக்கும் அன்பினால் கிரியை செய்யும் உண்மையான விசுவாசத்தை மிகச்சிலரே கொண்டுள்ளனர். நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளப் பொருத்தமானவர்கள் என்று கூறப்படுபவர்கள், அதற்க்கு ஒரு ஆன்மீகத் தகுதியைப் பெற்றிருக்கவேண்டும். “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது, அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” இதுவே உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பணியாகும்...Mar 99.2

    நீங்கள் சுயத்திர்க்கு மரித்து, தேவனுக்கென்று பிழைத்திருக்கும் அனுபவத்தை பெறவேண்டும். “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.” சுயத்தைக்கொண்டு நாம் முடிவெடுக்கக்கூடது. பெருமை, சுயத்தின் மீதான பற்று, தன்னலம், பேராசை, இச்சை, உலக ஆசை, வெறுப்பு, சந்தேகம், பொறாமை, தீய சிந்தை ஆகிய அனைத்தும் அடக்கப்பட்டு, என்றைக்குமாக, தியாகஞ்செய்யப்பட வேண்டும். கிறிஸ்து தோன்றும்போது, இந்த பாவக்காரியங்களெல்லாம் திருத்தப்பட்டு, நாம் தகுதிப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. இந்த ஆயத்தங்களெல்லாம் அவரது வருகைக்கு முன்னதாகவே முடிந்திருக்கவேண்டும். “இரட்சிக்கப்பட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?” தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களாகக் காணப்பட, நமது நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்பவைகளையே நாம் சிந்தித்து-படித்து-ஆராய்ந்துகொண்டிருக்கவேண்டும்.Mar 99.3

    முறுமுறுக்கும்படியாக — கண்டனஞ்செய்யும்படியாக - எரிச்சலடையும் படியாக - உங்கள் சுற்றத்தாருக்கு தீங்கு விளைவிக்கும்படியாகவும், அதன்மூலம் உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவித்துக்கொள்ளும்படியாகவும் சோதனைவரும்போது, நீங்கள் ஆழ்ந்த உண்மையுடனும் ஏக்கத்துடனும் உங்கள் ஆத்துமாவிடம்: “நான் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமற்றவனாக நிற்பேனா?” என்று கேளுங்கள். குற்றமற்றவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள். பூமியின் குப்பைகளால், இதையம் நிறைந்திருக்கும்பொழுது, அப்படிப்பட்ட ஒருவரும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள். நமது குணங்களில் காணப்படுகிற ஒவ்வொரு குறையும் பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு கறையும் கிறிஸ்துவின் சுத்துகரிக்கும் இரத்தத்தால் அகற்றப்பட்டு, விரும்பப்படத்தக்கதாக குனங்கள் எல்லாம் மேற்ககொள்ளப்பட வேண்டும்.⋆Mar 100.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 100.2

    இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” - ஏசாயா 65:17Mar 100.3