Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நலவியல் வாழ்வை முன்னேறமடையச் செய்யுங்கள்! , ஏப்ரல் 21

    “அப்படியிருக்க, சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” - ரோமர் 12:1.Mar 221.1

    உடலின், மனிதன், ஒழுக்கத்தின் ஆற்றலை இழக்கச் செய்கின்ற பழக்கங்களை தொடர்ந்து அநுபவித்துக்கொண்டே, ஒரு மனிதன் தனது உடலை தேவனுக்குப் பிரியமான பரிசுத்த ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதென்பது கூடாத செயலாகும். மீண்டும் அப்போஸ்தலனாகிய பவுல்: ” நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இனனதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2) என்று கூறுகிறார்.Mar 221.2

    குணத்தின் நீதிக்கும் அல்லது தூய்மைக்கும் குறிப்பாக கிருபையில் வளர்வதற்கும் எதிர்த்துநிற்கின்ற உலகில் நாமிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் சீர்கேட்டையும், ஊழலையும் இழிவான முடமாகிப்போன நிலையையும் பாவத்தையும் நாம் பார்க்கிறோம்.Mar 221.3

    சாவாமை என்னும் ஈவைப் பெற்றுக்கொள்வதற்காக சற்று முன்பாக, நம்மிலே நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டிய வேலைக்கு இவையெல்லாம் எவ்வளவு எதிராகக் காணப்படுகிறது! இந்தக் கடைசி நாட்களிலே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சுற்றிலும் காணப்படும் களங்கங்களுக்கு மத்தியில் கறைப்படுத்தப்படாதவர்களாக திடமாக நிற்கவேண்டும்; அவர்களது சரீரங்கள் பரிசுத்தமாககப்பட வேண்டும்; அவர்களது குணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்; இந்த வேலை நிறைவேற்றப்பட வேண்டுமானால், இக்காரியமானது ஊக்கத்தோடும், புரிந்துகொள்ளுதலோடும் உடனடியாகச் செய்யபபட வேண்டும். தேவனுடைய ஆவியானவரின் முழுமையான கட்டுப்பாடு இருக்கவேண்டும். ஒவ்வொரு செயலும் அவரது செல்வாக்கினால் இயக்கப்பட வேண்டும்.Mar 221.4

    ஆண்டவரது வருகைக்கு ஒரு கூட்டம் மக்களை தகுதிப் படுத்துவதற்காக, ஒரு மாபெரும் ஊழியஞ்செய்யப்பட்ட வேண்டியதிருக்கிறது. சுகாதார சீர்த்திருத்தம் அந்த ஊழியத்தின் ஒரு கிளையாகும். மிகவும்கேடான இன்சுவை கவர்ச்சிகளிலும், சிற்றின்பம் சார்ந்த இச்சைகளிலும் திளைப்பதின்மூலம் தேவனுடைய பிரமாணத்தை மீறாமல், ஆண்களும் பெண்களும் இயற்கைப் பிரமாணத்தை மீறமுடியாது. அவர் நமது உயிர்த்துடிப்பான உடலிலே நிலைநாட்டி வைத்திருக்கும் பிரமாணங்களை மீறுவதினால், ஏற்படும் பாவநிலையை தெளிவாகப் புரிந்துகொள்ளத்தக்கதாக. சுகாதார சீர்திருத்தத்தின் ஒளியானது நம்மீது பிரகாசிக்கும்படி அவர் அனுமதித்திருக்கிறார்…Mar 222.1

    இயற்கையின் பிரமாணத்தை எளிதாக்குவதற்கும், அதற்கு கீழ்ப்படியும்படித் தூண்டுவதற்கும், இந்தப் பணியானது மூன்றாம் தூதனின் தூதுடன் இணைந்துசெல்கிறது. இந்தப் பொருளானது, கிளர்ச்சியை உண்டுபண்ணி, அது என்ன என்று நுட்பமாக விசாரிப்பதற்காக, பொதுமக்களின் மனமானது ஆழமாக அசைக்கப்பட வேண்டுமென்று தேவன் திட்டமிடுகிறார். பாவம் நிறைந்த — உடல் நலத்தை அழிக்கின்ற — மூளையை வலுவிழக்கச்செய்கின்ற பழக்கங்களின் வல்லமைக்கடியில் இருக்கும்போது, ஆண்களும் பெண்களும் பரிசுத்த சத்தியங்களை சரியாக மதிப்பீடுசெய்ய முடியாது…Mar 222.2

    தேவன் ஒரு நபருக்குக் கொடுத்த சுகாதார சீர்திருத்தம் பற்றிய வெளிச்சத்தை, அந்த நபர் நெஞ்சார நேசிப்பாரானால். நித்தியவாழ்விற்குத் தகுதியாகும்படி, சத்தியத்தின்மூலமாக, பரிசுத்தமாகுதலின் பணிக்கு அந்த உடல்நலவியல் சீர்திருத்தம், ஒரு முக்கியமான உதவியாக அமைகிறது.⋆Mar 222.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 222.4

    “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிற படியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.” - உபாகமம் 4:31.Mar 222.5