Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தின் மேன்மைகளைக்குறித்து சிந்தியுங்கள்!, நவம்பர் 19

    “...இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” - வெளிப்படுத்தல் 7:14.Mar 645.1

    வெள்ளை அங்கிகளை தரித்திருந்த ஒரு கூட்டத்தாரை யோவான் தரிசனத்தில் பார்க்கிறார்...அவர்கள் தேவனுடைய ஆலயத்திலே இருந்தார்கள். கிறிஸ்துவின் புண்ணியங்களைப் பற்றிக்கொண்டு, தங்கள் அங்கிகளை அவருடைய இரத்தத்தினாலே தோய்த்து வெளுத்த அனைவரும் பெறக்கூடிய பயன் இதுவே. கிறிஸ்துவோடு அவருடைய சிங்காசனத்தில் அமரத்தக்கதான எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டாயிற்று; ஆனால், அதை அடைய, தேவனுடைய பிரமாணத்தோடு இசைந்திருக்கவேண்டும் என்பதே நிபந்தனையாகும்...Mar 645.2

    நாம் பரலோகத்தை இழந்துபோகக்கூடாது. பரலோகக் காரியங்களைக்குறித்தே நமது உரையாடல்கள் நிச்சயமாக அமைந்திருக்க வேண்டும். அங்கே மரணமும் வேதனையுமில்லை; அப்படியிருக்க இக்காரியங்களைக்குறித்துப் பேச நாம் ஏன் தயங்குகிறோம்? ஏன் பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே பேசிக்கொண்டிருக்கிறோம்? பரலோகத்தோடு தொடர்புவைத்திருக்க வேண்டுமென்று பவுலார் அறிவுரை கூறுகிறார்: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” - பிலிப்பியர் 3:20... ஆயத்தமாயிருக்கிறவர்களைத் தமது மகிமையுள்ள தேசத்திற்கு அழைத்துக்கொண்டுபோகும்படி கிறிஸ்து சீக்கிரம் வருவார். “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்துதீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” - எபிரெயர் 9:28.Mar 645.3

    இந்த சம்பவத்தைக்குறித்து சிந்திக்க நாம் விரும்புகிறோமா?... இயேசுவைக்குறித்து எவ்வளவிற்கதிகமாகப் பேசுகிறோமோ அவ்வளவிற்கதிகமாக அவரது தெய்வீக சாயலைக்குறித்து மனதிலே தியானிப்போம். அவரை நோக்கிப்பார்த்து, நாம் மாற்றமடைகின்றோம். நமது ஆவிக்குரிய அனுபவத்திற்குள் கிறிஸ்துவை நாம் கொண்டிருப்பது அவசியமாகும். நீங்கள் ஒன்றாகக் கூடிவரும் பொழுது, கிரிஸ்துவைக்குறித்தும் அவரது இரட்சிப்பைக்குறித்தும் உங்களது உரையாடல் அமைந்திருக்கட்டும். இயேசுவைக்குறித்து எந்த அளவிற்கு அதிகமாக அவரது ஈடுஇணையற்ற அழகை நோக்கிப்பார்ப்போம்.Mar 646.1

    அவரைக்குறித்து தியானிப்பதிலும், பேசுவதிலும் மகிழ்ச்சி பெறாதவர்கள், ஆண்டவர் தமது மக்களின் நடுவே என்றைக்கும் வசிக்கிற அந்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கமுடியாது; ஆனால், ஆண்டவரை தியானிக்க விரும்புகிற பிள்ளைகள், இங்கேயே பரலோகக் காற்றைச் சுவாசிக்கிறார்கள். இந்த பூமியிலே பரலோகத்தைக்குறித்த நினைவை நேசிக்கிறவர்கள், அதுபற்றிய பரிசுத்த தோழமையிலும் மகிழ்ச்சியிலும் சந்தோஷமடைவார்கள், “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமூகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” வெளிப்படுத்தல் 22:3,4.⋆Mar 646.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 646.3

    “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” - 1 யோவான் 1:9.Mar 646.4