Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிமார்க்கமும் புரட்சியும்!, மே 18

    அவன் பிரதியுத்தரமாக: “உன் தேவாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தனையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்று எழுதியிருக்கிறது” என்றான். -லூக்கா 10:27.Mar 275.1

    வாலிபர்கள் உலகத்திற்குச் செல்லும்பொழுது, பணத்தைச் சேர்க்கவேண்டுமென்ற இச்சை, கேளிக்கைகள், இன்பத் தோய்வுகளில் மூழ்கியிருத்தல் மற்றும் தோற்றப் பகட்டுகள், உயர் இன்ப வாழ்க்கை, ஆடம்பரச் செலவுகள், தந்திரமான வழிமுறைகளைக் கையாளுதல், மோசடி, பொருளாதாரச் சீரழிவு, கொள்ளையடிப்பு ஆகிய பாவங்களுக்கு இட்டுச்செல்லும் கவர்ச்சிகளோடு போராடவேண்டியதிருக்கிறது; அங்கே சந்திக்கவேண்டிய போதனைகள் யாவை?Mar 275.2

    ஆவிமார்க்கமானது, மனிதர் விழுந்துபோகாத அவரை தெய்வங்கள் என்றும், “ஒவ்வொரு உள்ளமும் தன்னைத்தானே நியாயந் தீர்த்துக்கொள்ளும்” என்றும், உண்மையான அறிவானது சட்டங்களுக்குமேலாக மனிதனை வைக்கிறது என்றும் “செய்யப்படும் பாவங்கள் அனைத்துமே குற்றமற்றவை” என்றும், ஏனெனில், “என்ன காரியமானாலும் அது சரியானதே” என்றும், மேலும் “தேவன் கண்டனஞ்செய்கிறதில்லை” என்றும், உறுதியாகக் கூறுகின்றது. இழிவான மானிடர்களுங்கூட மேன்மையான உயர்த்தப் பட்ட நிலையில் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்று ஆவி மார்க்கம் கூறுகின்றது; இவ்வாறாக, நீங்கள் என்ன செய்தாலும் அதைப்பற்றி பிரச்சனையில்லை. ‘நீங்கள் விரும்புகிறபடியே வாழுங்கள், பரலோகம் உங்களுடையது’ என்று அனைத்து மனிதர்களும் உறுதியாக ஆவிமார்க்கம் அறிவிக்கிறது. மனதின் விருப்பமே மிக உயர்வான சட்டமென்றும், முழு உரிமையும் பெற்றுள்ள நிலையே சுதந்தரம் என்றும், மனிதன் தனக்குமாத்திரமே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்றும், திரளான மக்கள் நம்பும்படியாக இவ்வாறு வழிநடத்தப்படுகிறார்கள்.Mar 275.3

    வாழ்வின் அந்தத் துவக்க நாட்களில் இத்தகைய போதனை கொடுக்கப்படும்பொழுது, உந்துவேகமானது மிகவும் வலிமையோ டிருக்கும்பொழுது, சுயக்கட்டுப்பாட்டிற்கும் தூய்மைக்குமான தேவையானது மிகவும் உடனடியாகச் சந்திக்கப்படவேண்டியதாக இருக்கும்பொழுது, ஒழுக்கத்திற்கான பாதுகாவலர்கள் எங்கேயிருக்கின்றன? உலகம் ஒரு இரண்டாவது சோதோமாக ஆகிவிடாதபடித் தடுப்பதற்கு எது இருக்கிறது?Mar 275.4

    அதேசமயத்தில், குழப்பமானது அனைத்துச் சட்டங்களையும் அதாவது தெய்வீகச் சட்டங்களை மாத்திரமல்ல, மானிடச் சட்டங்களையும் அடித்துக்கொண்டுபோக முயற்சிசெய்கிறது. செல்வமும் அதிகாரமும் ஓர் இடத்தில் குவிதல், அநேகரை நஷ்டப்படுத்தி ஒரு சிலர் செல்வம் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்படும் மிகப் பெரிய செயற்கூட்டுறவுகள், ஏழை வகுப்புகளைச் சேர்ந்த அநேகர் தங்களுடைய ஆதாய நோக்கங்கள் இணைதல், பிரெஞ்சுப் புரட்சிக்கு இட்டுச்சென்ற அதே போதனைகளை உலகம் முழுவதும் பரப்புதல், ஆகிய போராட்டத்தைப்போலவே, முழு உலகத்தையும் சிக்கவைக்கும்படியாக நடத்திச்செல்கிறது. இன்றைய வாலிபர்கள் இத்தகைய மோசமான விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கின்றது. இப்படிப்பட்ட பொங்கியெழும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இப்பொழுது வாலிபர்கள் தங்களது குணத்திற்கான அடித்தளத்தைப் போடவேண்டும். அனைத்துத் தலைமுறைகளிலும் அனைத்து நாடுகளிலும் குணக்கட்டுமானத்திற்கான உண்மையான அடித்தளமும் மாதிரியும் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்… அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (லுக். 10:27) என்பது தெய்வீகப் பிரமாணமாகும். இந்த மாபெரும் கொள்கையே, நமது மீட்பரின் குணத்திலும் வாழ்விலும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. இதுவே ஒரே பாதுகாப்பான அடித்தளமும், ஒரே நிச்சயமான வழிகாட்டியுமாகும்.⋆Mar 276.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 276.2

    “நீட்டித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.” - சங்கீதம் 91:16.Mar 276.3