Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நவம்பர்

    சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்குமான சிறைவாசம்!, நவம்பர் 1

    “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்த்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.” - யூதா 1:6.Mar 609.1

    பூமி பாழடைந்த ஒரு வனாந்தரம் போல் காட்சியளித்தது. நில நடுக்கங்களினால் தகர்ந்துபோன பட்டணங்களும் கிராமங்களும் குவியலாகக் கிடந்தன. மலைகள் அவைகளின் இடங்களை விட்டு விலகி, மிகப் பெரிய ஆழமான பள்ளங்களை விட்டுச்சென்றிருந்தன. கடலினின்று வீசியெறியப்பட்ட அல்லது பூமியினின்று தெறிப்புண்டு விழுந்த கரடுமுரடான கற்பாறைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதும் சிதறிக்கிடந்தன. மிகப்பெரிய மரங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்டு நிலப்பரப்பின்மீது கிடந்தன. இங்கு தான் (பூமி) சாத்தானுக்கும் அவனது தீய தூதர்களுக்கும் ஓராயிரம் ஆண்டுகளுக்கான குடியிருப்பு அமைந்திருக்கும்.Mar 609.2

    பூமியின் மேற்ப்பரப்பிலுள்ள உடைவுகளின்மீது மேலும் கீழுமாக அலைந்துதிரிந்து, தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்க்கு எதிராக அவன் நடத்திய கலகத்தின் விளைவுகளை காணும்படியாக சாத்தான் இங்கு சிறைபடுத்தப்பட்டிருப்பான். அவனது பொல்லாங்கினால் ஏற்பட்ட சாபத்தின் விளைவுகளை, இந்த ஓராயிரம் ஆண்டுகளாக அவன் அனுபவிக்க வேண்டும். மற்றுமுள்ள வேறு உலகங்களிலும் உலாவித் திரிந்து, அங்குள்ள-பாவத்தில் விழுந்துபோகாத மக்களை சோதித்துத் தொல்லைகொடுக்காதபடி, அங்கு செல்லும் உரிமையை ஏற்கனவே இழந்தவனாய், இந்தபூமியில் மாத்திரமே இருக்கத்தக்கதாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பான். கடுந்துன்பம் அனுபவிக்கிறான். அவன் விழுகையின் நாளிலிருந்து தனது தீய குணங்களை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருந்தான்; இப்பொழுதோ, அவனுடைய வல்லமை அவனிடமிருந்து பிடுங்கப்படும் நிலையில், தனது விழுகையின் நாளிலிருந்து தான் இதுவரை செய்துவந்த செய்கைகளின் விளைவையும் சிந்திக்கத்தக்கதாக விடப்பட்டிருந்தான். பயத்தோடும் நடுக்கத்தோடும் பயங்கரமான தன்னுடைய எதிர்காலத்தை நோக்கிப்பார்த்தவனாயிருந்தான். அவன் இதுவரை செய்த அனைத்துத் தீமைகளுக்காகவும் துன்பம் அனுபவித்து, மற்றவர்களை செய்யத்தூண்டிய அனைத்துப் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்படுவான்.Mar 609.3

    அவனுடைய சமூகத்தினின்றும் அவனது சோதனைகளினின்றும் மற்ற உலகங்களிலுள்ள குடிமக்கள் விடுதலைபெற்றிருந்தார்கள் என்றும், அறிந்திருந்த மீட்கப்பட்ட பரிசுத்தவான்களும் தூதர்களும் முழங்கிய வெற்றி முழக்கம் பதினாயிரம் இசைக்கருவிகளைக் கொண்டு, இசைவாக இசைக்கப்பட்ட கீதத்தைப்போல் இருந்ததை நான் கேட்டேன்.Mar 610.1

    ஆண்டவருடைய மக்களுக்கு சாத்தானின் சிறையிருப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். “கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கு, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே, நீ பாபிலோன் ராஜாவின் மேல் (இங்கே சாத்தானைப்பற்றி) சொல்லும் வாக்கியமாவது: ஒருக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்து போயிற்றே! கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்” (ஏசாயா 14:2-6) என்று ஏசாயா தீர்க்கன் கூறுகிறார்.⋆Mar 610.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 610.3

    “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” - 1 பேதுரு 1:7.Mar 610.4