Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீங்களே உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்!, பிப்ரவரி 10

    “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்காளாயிருந்தால் அறியீர்கள்.” - 2 கொரிந்தியர் 13.5Mar 81.1

    பாவத்தின் ஏமாற்றும் தன்மையைக்காட்டிலும் மிகவும் வஞ்சனை நிறைந்தது வேறொன்றுமில்லை. வஞ்சித்து, குருடாக்கி, அழிவிற்கு வழி நடத்தக்கூடிய இவ்வுலகின் தேவன் அதுவே. சாத்தான் வெளிப்படையாகத் தனது சோதனைகளின் தொகுப்புகளோடு நுழைவது கிடையாது. அவன் சோதனைகளுக்கு நன்மைக்கொத்த வேஷந்தரித்துவிடுகிறான்.... அதின் கவர்ச்சியினால் ஏமாற்றப்பட்ட ஆத்துமாக்கள் ஒரு அடி எடுத்து வைத்து, பின்பு அடுத்ததற்கும் ஆயத்தமாகின்றன... ஆ! தனது கண்ணியில் இவ்வளவு சீக்கிரம் அகப்படுகிறதையும், தான் ஆயத்தப்படுத்திய வழியில் ஆத்துமாக்கள் நடப்பதையும் காண சாத்தான் எவ்வளவு கவனமாக உற்று நோக்கிக்கொண்டிருக்கிறான்!.......Mar 81.2

    மிகவும் நுணுக்கமான சுயபரிசோதனையானது மிக இன்றியமையாத்தாக இருக்கிறது. “எனது இருதயம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா அல்லது கெட்டுபோயிருக்கிறதா? நன் கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கப்பட்டிருக்கிறேனா அல்லது வெளியில் புதிய வஸ்திரம் தரித்துக்கொண்டு, இருதயத்தில் குற்றமுள்ளவனாயிருக்கிறேனா?” என தேவ வார்த்தையின் ஒளியிலே கவனமாக ஆராய்ந்திடவேண்டும். தேவனது நியாசனத்தின் முன்பாக உங்களை நிறுத்தி, அவரது ஒளியிலே உங்களிடம் ஏதேனும் இரகசிய பாவமோ, அநீதியோ, விக்கிரகமோ இன்னும் தியாகஞ்செய்யப்படாமல் இருக்கிறதா என்று பாருங்கள். சாத்தானது கருவிகளால் வஞ்சிக்கப் படாதபடிக்கும், உங்கள் ஆவி அக்கறையின்றி, அஜாக்கிரதையாக வீணாகிப்போகாதபடிக்கும் இதுவரை ஒருக்காலும் ஜெபித்திராத அளவிற்கு ஜெபியுங்கள்...Mar 81.3

    கடைசிக்கால அடையாளமாகிய ஒரு பாவம் என்னவென்றால், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் தேவனைவிட, சிற்றின்பத்தையே அதிகம் விரும்புகிறவர்களாயிருக்கிறார்கள். உங்கள் ஆத்துமாக்களுக்கு உண்மையுள்ளவர்களாக செயல்படுங்கள்; கவனமாக ஆராயுங்கள். உண்மையான சோதனைக்கு பிறகு பரத்தை நோக்கி, “...நான் தேவனை நேசிப்பதைவிட சிற்றின்பங்களை அதிகம் விரும்புபவன் அல்ல” என்று கூறக்கூடியவர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்! “நான் உலகத்திற்கு மரித்திருக்கிறேன்... எனது ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நானும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவேன்” என்று கூறக்கூடியவர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்!Mar 82.1

    ஆ! தேவனுடைய அன்பும்! கிருபையும் எத்தகையது! ஆ! மிகவும் அருமையான கிருபை! பசும்பொன்னிலும் மிகவும் மதிப்பு வாய்ந்தது! அது, ஆவியை மற்ற எல்லாக் கொள்கைகளுக்கும் மேலாக உயர்த்தி மேன்மைபடுத்துகிறது. அது, நமது இதயத்தையும் பாசங்களையும் பரத்தின்மீது நிலைப்படுத்துகிறது. நம்மைச்சுற்றியிருப்போர் வீணான இவ்வுலகக் காரியங்களிலும் சுகபோகத்தை நாடுவதிலும் அறிவற்ற செயல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுது, நமது உரையாடலோ, எந்த பரலோகத்தினின்று மீட்பர் வருவார் என்று எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறோமோ, அந்த பரலோகத்தைப் பற்றியதாகவே அமைந்திருக்கும். மன்னிப்பிற்காகவும், சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும், மெய்யான பரிசுத்தத்திற்காகவும் நமது ஆத்துமாவானது தேவனை நோக்கிச்சென்றுகொண்டிருக்கும். தேவனிடத்தில் உரையாடுவதும், பரத்திற்கான காரியத்தைப்பற்றி தியானஞ்செய்வதும், நமது ஆத்துமாவை கிறிஸ்துவைப்போன்ற சாயலில் மாறச்செய்யும்.⋆Mar 82.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 82.3

    “கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனசாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.” - 1 தீமாத்தேயு 1:5.Mar 82.4