Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தீர்க்கதரிசனத்தில் ஓட்டாமன் அரசு!, மே 24

    “…ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொரு பங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணி நேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.” -வெளிப்படுத்தல் 9:14,15.Mar 287.1

    ஒன்றன்பின் ஒன்றாக, ஜாதிகளின் வரலாறு அவைகளுக்குக் குறிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதின்பொருள் இன்னதென்று தங்களுக்குத் தாங்களே அறியாத சத்தியத்திற்கு, நம்மிடம் இந்த வரலாறு சாட்சிகூறுகின்றது. தேவன் தமது மாபெரும் திட்டத்திலே, இன்று வாழ்கின்ற ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும், ஒரு இடத்தை ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார். தவறுசெய்யாத ஒருவரது கரத்தில் இருக்கும் தூக்குநூலால், மனிதரும் நாடுகளும் அளவிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தங்களது சொந்தத் தெரிந்தெடுத்தலின்மூலம் தங்களது முடிவைத் தீர்மானித்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவன் தமது நோக்கங்களை நிறைவேற்றத்தக்கதாக அனைத்தையும் மேலாட்சிசெய்துகொண்டிருக்கிறார்…Mar 287.2

    நிகழ்காலம்வரை நிறைவேற்றிக்கொண்டிருக்கிற-முன்னுரைக்கப்பட்ட, தீர்க்கதரிசனங்கள் அனைத்தின் தடங்களும், வரலாற்றின் பக்கங்களிலே கண்டறியப்பட்டுள்ளன. இனியும் வரப்போகின்ற காரியங்களும், அதின் ஒழுங்கிலே நிறைவேறுதலை அடையும் என்பதைக்குறித்து நாம் நிச்சயத்தோடிருக்கலாம்.Mar 287.3

    1840-ம் ஆண்டில், மற்றுமொரு தீர்க்கதரிசனத்தின் குறிப்பிடத் தக்க நிறைவேறுதல் எங்கணும் பரவலாக ஆர்வத்தைத் தூண்டியது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டிருந்த முதன்மையான ஊழியர்களுள் ஒருவரான ஜோஷியா லிட்ச் என்பவர், வெளிப்படுத்தல் 9-ம் அதிகாரத்தைப்பற்றி ஒரு விளக்கம் எழுதி, பிரசுரித்திருந்தார். அதில் ஓட்டாமன் அரசின் (Ottoman Empire) விழுகையைக்குறித்து முன்னுரைத்திருந்தார். அவரது கணிப்பீட்டின் படியே, அந்த வல்லமையானது கி.பி. 1840-ம் ஆண்டில், ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விழுகையைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலிற்கு சில நாட்களுக்கு முன்னர் பின்வருமாறு எழுதினார்: “துருக்கியர்களின் உத்தரவைப் பெற்று டியாகோசஸ் (Diacozes) என்பவர் சிங்காசனம் ஏறுவதற்கு முன்னர், முதல்கட்டமான 150 ஆண்டுகள் சரியாக நிறைவேறியிருக்க வேண்டும் என்பதாக அனுமதிக்க வேண்டும். அதின் பின்னர் உள்ள 391 ஆண்டுகளும் 15 நாட்களும் முதல் கட்டம் முடிந்த பின்னர் ஆரம்பமாயிற்று. அந்த காலக்கட்டம் ஆகஸ்ட் 11-ம் நாள் 1840-ல் முடிந்த பின்னர் ஆரம்பமாயிற்று. அந்த காலக்கட்டம் ஆகஸ்ட் 11-ம் நாள் 1840-ல் முடிவடைகிறது. அச்சமயத்தில் கான்ஸ்டான்டிநோபிலிலுள்ள ஓட்டாமன் அரசானது சிதறிப் போகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய நிலையில்தான் இது காணப்படுமென்று நான் நம்புகிறேன்” — Josiah Litch, in Sings of the Times, and Expositor of Prophecy, Aug.1,1840.Mar 287.4

    சுட்டிக்காட்டப்பட்ட அந்த நேரத்தில்தானே, துருக்கி தனது தூதர்கள்மூலமாக, ஐரோப்பாவிலுள்ள நேச நாடுகளின் பாதுகாப்பில்,கிறிஸ்தவ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள், தன்னை வைத்துக்கொண்டது. இச்சம்பவம் முன்னுரைக்கப்பட்டபடி, சரியாக நிறைவேறுதலை அடைந்தது… இக்காரியமானது, அட்வெந்து இயக்கத்திற்கு ஒரு அற்புதமான உந்துவேகத்தைக் கொடுத்தது.⋆Mar 288.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 288.2

    “திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனைடைவான்.” - நீதிமொழிகள் 13:13.Mar 288.3