Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒழுக்கக்கேட்டினால் ஏற்படும் இழிநிலை!, மே 25

    “…பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.” - எபேசியர் 5:3.Mar 289.1

    தற்காலத்தில் ஒரு அபாயகரமான-கீழ்த்தரமான-தன்மை உரையாடல்களில் காணப்படுகிறது. இது சிந்தனைகளிலும் ஒழுக்க நிலையிலும் ஒரு மட்டமான நிலையிருப்பதைக் காட்டுகிறது. குணத்தின் உண்மையான மதிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. உண்மையான தன்னடக்கத்தையும் சொல்லடக்கத்தையும் காண்பது மிகவும் கடினம். வெகு சிலரே பரிசுத்தமாகவும் தூய்மை கெடாமலும் இருக்கின்றனர்…Mar 289.2

    கேடடைந்த சிந்தனைகளுக்கு இடங்கொடுக்கும்பொழுது, அது பழக்கமாக மாறிவிடுகிறது. ஆத்துமாவில் வடுவை ஏற்படுத்தி கறைப்படுத்திவிடுகிறது. தவறான ஒரு செயலை ஒருமுறை செய்யும்பொழுது, அங்கே ஒரு கறைபடிந்துவிடுகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தைத்தவிர வேறு எதுவும் அதைக் அகற்றிவிட முடியாது. திடமான தீர்மானத்தோடு அந்தப் பழக்கத்தினின்று திரும்பாவிட்டால், அந்த ஆத்துமா கெட்டுப்போகிறது. அத்தகைய அழுக்கான ஊற்றிலிருந்து புறப்பட்டுவருகின்ற நீரொழுக்குகள் மற்றவர்களையும் கறைப்படுத்திவிடுகிறது.Mar 289.3

    சோதனைகளை வரவேற்கின்ற ஆண்களும் பெண்களும் இருக்கின்றார்கள். தாங்கள் சோதிக்கப்படுகிற நிலையில் தங்களை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் சோதிக்கப் படுவதைத்தவிர வேறு வழியில்லை. எல்லாச் சமயங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளுக்கு அடியிலும், தகுதியான முக்கியத்துவத்தோடு பழகுவதே பாவத்தினின்று பாதுகாத்துக்கொள்ளத்தக்கதான சிறந்த வழியாகும். ஒருபோதும் திடீர் உணர்வினால் முயற்சி செய்யவோ அல்லது செயல்படவோ கூடாது. எப்பொழுதும் தேவனைப்பற்றிய பயம் உங்களது இதயத்தில் இருக்கட்டும். அப்பொழுது, சரியாகச் செயல்படுகிறீர்கள் என்பதைக்குறித்து நீங்கள் உறுதியாக இருக்கலாம்.Mar 289.4

    ஒழுக்க நிலையில் காணப்படும் ஆபத்துகளில் அனைத்து வாலிபரும் வயதுடையோரும் பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டு இருப்பது தினமும் பெருகிவருகிறது. படுமோசமான இயல்பு என்று நாம் அழைக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகளை கிரியைசெய்வதற்கு ஏராளமாக இடம் இருக்கின்றது. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிற ஆண்கள், பெண்கள் மற்றும் வாலிபர்கள் இழக்கின்ற ஒரு செல்வாக்கானது, இழிந்த நிலையுடையதாகவும் சிற்றின்ப வாழ்வில் தோய்ந்ததாகவும் பேய்த்தன்மையுடையதாகவும் இருக்கிறது.Mar 290.1

    சத்தியத்தைக் கற்றுக்கொண்டவரிடத்தில், அவர்கள் கொண்டு இருக்கும் விசுவாசத்திற்கு ஏற்ற கிரியைகள் காணப்படாவிட்டால், சாத்தானின் சோதனைகளுக்கு ஆட்பட்டவராகின்றனர். அவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், ஆபத்தை எதிர்த்துப் போராடவேண்டியதிருக்கிறது. தீமையோடு தொடர்புகொள்ளத்தக்கதாக கொண்டுவரப்படுகிறார்கள். தங்களது கட்டுக்கடங்காத இச்சைகளை விழிப்படையச்செய்யத் தக்கதாக, அதற்கேற்ற காட்சிகளைப் பார்க்கின்றார்கள், தொனிகளைக் கேட்கின்றார்கள். நன்மையானதைவிட தீமையானவற்றையே தெரிந்துகொள்ளத்தக்கதாக, நடத்திச்செல்லுகின்ற செல்வாக்குகளுக்கு ஆட்படுகிறார்கள்; ஏனெனில், அவர்கள் இருதயத்தில் உரமுடையவர்களாக இல்லை…Mar 290.2

    வாலிப ஆண்களும் பெண்களும் அனைத்துக் கறைகளினின்றும், அனைத்து ஒழுக்கக்கேடான அழுக்கினின்றும் தங்களது ஆத்துமாக்களை சுத்திகரித்துக்கொள்ளத்தக்கதான-ஆயத்தஞ் செய்வதற்கு-அவசியமான பயிற்சியைவிட, இப்பொழுது வேறு எந்தப் பயிற்சியும் அதிகமாகத் தேவையில்லை.⋆Mar 290.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 290.4

    “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்: இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.” - ஏசாயா 43:21.Mar 290.5