Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வுநாளிற்கு எதிராக ஞாயிறு ஆசாரிப்பின் காரியமும் இணைந்துவிடுகிறது!, ஜூன் 13

    “அவர்களுக்கு பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத்தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.” - வெளிப்படுத்துதல் 14:9,10.Mar 327.1

    இதுவரை மூன்றாம் தூதனின் தூதைப் பிரசங்கித்தவர்கள் அடிக்கடி வீணாக பீதியைப் பரப்புகிறவர்கள் என்று கருதப்பட்டனர். அமெரிக்க ஐக்கிய (U.S.A) நாட்டில் மார்க்கசம்பந்தமான காரியங்களில் பொறுக்கக்கூடாத மனநிலை மீண்டும் உருவெடுத்து அடக்கியாளும். சபையும் அரசாங்கமும் இணைந்து, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களை உபத்திரவப்படுத்தும் என்று அவர்களால் முன்னுரைக்கப்பட்ட காரியங்கள் அடிப்படையற்றது; நகைப்பிற்கு இடமானதென்று தீர்மானமாகக் கூறப்பட்டது; ஆனால், ஞாயிறு ஆசரிப்பு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற காரியமானது, பரவலாக கிளர்ச்சியைத் தூண்டும்போது, இவ்வுளவு காலமும் சந்தேகத்திற்கு இடமானதாகவும் நம்பக்கூடாததாகவும் இருந்த மேற்கூறப்பட்ட இந்தக் காரியங்கள், நெருங்கிவருவதைக் காணலாம். இதற்குமுன் நடைபெறக்கூடாதிருந்த விளைவுகளை, இந்த மூன்றாம் தூதனின் தூது உண்டாக்கும்...Mar 327.2

    விசுவாசமும் ஜெபமும் நிறைந்த மனிதர் பரிசுத்த ஆர்வத்தோடு வலுக்கட்டாய நிலையில் புறப்பட்டுச்சென்று, தேவன் தங்களுக்குக் கொடுக்கின்ற வார்த்தைகளைக் கூறியறிவிப்பார்கள். பாபிலோனின் பாவங்கள் வெளியரங்கமாக்கப்படும். சபையின் ஆசரிப்புகளை உள்நாட்டு அரசாங்க அதிகாரத்தின்மூலம் செயல்படுத்துதல், ஆவிமார்க்கத்தின் ஆக்கிரமிப்பு, பாப்பானவரது வல்லமையின் துரிதமான-மறைவான-முன்னேற்றம் ஆகியவைகளால் ஏற்படும். ஆபத்தான விளைவுகள் அம்பலப்படுத்தப்படும். இத்தகைய பக்தி விநயமான எச்சரிப்புகளால் மக்கள் கலக்கமடைவார்கள். தங்களுக்கு முன்பு போதித்த போதகர்களிடம் ஆர்வத்தோடு, “காரியங்கள் இப்படி இருக்கின்றனவா?” என்று மக்கள் சென்று கேட்கும் போது, போதகர்கள் கட்டுக்கதைகளையும் இன்பமயமான காரியங்களையும் சொல்லி, அவர்களது வெளிப்படையான மனசாட்சியையும் அவர்களது பயங்களையும் நயவசனிப்பினால், மாற்ற முயற்சிப்பார்கள். வெறும் மனித அதிகாரத்தினால் கூறப்படும் காரியங்களால் அநேகர் திருப்தியடையாமல், “இவ்வாறு ஆண்டவர் கூறுகிறார்” என்பதற்கு விளக்கம்கேட்டு கோரிக்கைவைக்கும்பொழுது, முன்னாளிலிருந்த பரிசேயரைப்போல தங்களுடைய அதிகாரத்திற்கு கேள்வி எழுப்பப்படுவதினிமித்தம் கோபம் நிறைந்தவர்களாகி, இந்தத் தூதானது சாத்தானால் கொண்டுவரப்பட்டது என்று பழித்துரைத்து, பாவத்தை விரும்புகின்ற திரள்கூட்டமான மக்களைத் தூண்டி-இத்தூதைக் கொடுப்பவர்களை உபத்திரவிக்கும்படி எழுப்பிவிடுவார்கள்.Mar 327.3

    இந்தப் போராட்டம் பல புதிய பணித்தளங்களுக்குப் பரவும்பொழுது, காலால் மிதிக்கப்பட்டுப்போன தேவனுடைய பிரமாணத்தை கவனிக்கத்தக்கதாக, மக்களது மனங்கள் ஏவப்படும். ஏறக்குறைய மானிட சக்திக்கும் அப்பாற்பட்ட அளவிற்கு, குருமார்கள் தங்களது மந்தைக்கு இந்த வெளிச்சம் பிரகாசித்துவிடக்கூடாதே என்று அதை அணைத்துப்போட, அனைத்து முயற்சிகளையும் செயற்படுத்துவார்கள். இந்த முக்கியமான கேள்விகள்குறித்த விவாதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தங்களது அதிகாரத்திற்குக்கீழ் இருக்கும் எல்லா வழிவகைகளிலும் முயற்சிசெய்வார்கள். சபையானது அரசாங்க அதிகாரத்தின் பலத்த புயத்தின் உதவிக்காக வேண்டுகோள் விடுக்கும். இந்த வேளையிலே பாப்புமார்க்கத்தாரும் புரோட்டஸ்டாண்டு சபைகளும் இணைந்து செயல்படுவார்கள்.⋆Mar 328.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 328.2

    “கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.” - சங்கீதம் 25:8.Mar 328.3