Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவின் அன்பின் பரிசு!, டிசம்பர் 28

    “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்...” - தானியேல் 7:27.Mar 723.1

    கிறிஸ்துவிற்கு உரியதான இராஜ்யத்தின் அரசாங்கம், இப்பூமியின் அரசாங்கத்தைப்போன்று அல்ல. அந்த இராஜ்யத்திலுள்ள மக்களின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்... அவரது நியாயசனத்தில் பரிசுத்த அன்பு தலையாயதாக விளங்கும், அவருடைய அலுவலகங்களும் நியமனங்களும் அன்பின் வெளிப்பாட்டோடு கிருபை பொருந்தியதாக சிறப்பிக்கும். அவரது குணனலங்களைப் போன்றே அவரது ஊழியக்காரரும் தங்கள் அலுவல்களிலெல்லாம், அன்போடும், பரிவோடும், இரக்கத்தோடும் நடந்துகொள்ள வேண்டுமென்றே தேவன் அறிவுறுத்துகிறார்.Mar 723.2

    தேவனுடைய இரஜ்யத்தின் நல வாழ்வில் அவரோடு பங்குகொள்ளும் ஒவ்வொருவரின், இதயமும் சிந்தையும் அடைய வேண்டிய மாறுதலை கிறிஸ்துவின் வல்லமை மட்டுமே ஏற்படுத்த முடியும்... அவரை உண்மையாக சேவிக்கவேண்டுமென்றால், தெய்வீக ஆவியில் பிறந்தவர்களாக நாம் இருக்கவேண்டும். அது நம் இதயத்தைச் சுத்திகரிக்கும்; மனதைப் புதுப்பிக்கும்; தேவனை நேசிப்பதற்கும் அறிந்துகொள்லுவதற்கும் புதிய திறனை வழங்கும்; அவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படிய உதவிசெய்யும்; அதுவே மெய்யான தொழுகையாகும்.Mar 723.3

    “உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை. மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்...கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய இராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்... வியாதிப்பட்டிருக் கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாக இருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” - ஏசாயா 33:20-24.Mar 723.4

    “நான் சிருஷ்திக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின் மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனி கேட்கப்படுவதில்லை... வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்... என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” - ஏசாயா 65:18-25.⋆Mar 724.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 724.2

    “கர்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமானதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.” - சங்கீதம் 27:14.Mar 724.3