Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நாம் இராஜரீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!, டிசம்பர் 7

    “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” -யோவான் 3:2.Mar 681.1

    தேவகுமாரர்களாக-பரலோக அரசனின் பிள்ளைகளாக-அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களாக-இருப்பதைப்போன்ற கனத்தையும், மகிமையையும், உலகத்திலுள்ள எந்தப் பதவி உயர்வும் மேன்மையும் வழங்க முடியுமா?... இவ்வுலகத்தில் மேன்மைப் படுத்தப்பட்டவர்கள் வெறும் மனிதர்களே; அவர்கள் மரித்து மண்ணுக்குத் திரும்புவர். அவர்கள் புகழ்ச்சியிலும் கனத்திலும் எவ்வித நீடித்தி திருப்தியும் கிடையாது; ஆனால், தேவனிடமிருந்து வரும் கனமும் மேன்மையும் என்றும், நிலைத்திருக்கும். தேவனுக்குச் சுதந்தரவாளிகள் என்பதும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரவாளிகள் என்பதும், தேடிக்கண்டுபிடிக்கமுடியாத ஐசுவரியத்திற்க்கு நாம் பாத்திரவாங்கள் என்பதும் எத்தனை மேன்மை! அந்த சிறந்த பொக்கிஷத்திற்கு முன் நமது தங்கம், வெள்ளி, இரத்தினங்கள், விலையேறப்பெற்ற கற்கள் ஆகியவைகள் அற்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன.Mar 681.2

    பிதாவோடும், அவரது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவோடுங்கூட நாம் தோழமையோடு உறவுகொள்ளத்தக்கதாக, மேன்மை அடையும்படி உயர்த்தப்படுவோம் என்பது எவ்வளவு பெரிய உன்னதமான நிலைமை! அந்தச் சொல்லிமுடியாத ஆனந்தத்திற்கும், மகிமைக்கும் நாம் பங்காளிகளாக்கப்படுவோம்! உணவு, உடை, பதவி, சொத்து ஆகியவற்றிற்கு மதிப்பு உண்டு; ஆனால், தேவனோடு நமக்கு இருக்கும் தொடர்பு, அவரது தெய்வீக இயல்பில் நாம் ஒரு பங்காளியாவது என்பது விலைமதிப்புமிக்க ஒன்றாகும். கிறிஸ்துவோடு நமது ஜீவியங்கள் தேவனில் மறைந்திருக்க வேண்டும். “இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை” என்றாலும், “நம் ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது” அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம்! இராஜரீகமான கிறிஸ்தவ குணலட்சணங்கள் சூரியப்பிரகாசம்போல் ஜொலிக்கும். கிறிஸ்துவின் முகத்திலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள், அவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, தங்களைச் சுத்திகரித்துக்கொண்ட மக்களின் முகங்களிலும் பிரதிபலிக்கும். தேவனுடைய பிள்ளைகளாகும் சிறப்புரிமையைப் பெறுவதற்கு நாம் செலுத்தும் விலை-நம் ஜீவன் உட்பட, நமக்குண்டான யாவற்றையுமே நாம் தியாகஞ் செய்திருந்தாலும், அது மிகவும் அற்ப-சொற்பமானதே!Mar 681.3

    யோவான் மனுஷீகத் தன்மையில், தேவ மகிமையைக் கண்ட பொழுது, அந்தக் காட்சியைக் காணமுடியாதவனாக, செத்தவனைப்போல விழுந்தான்; ஆனால், தேவனுடைய பிள்ளைகள் சாவாமையைத் தரித்துக்கொள்ளும்பொழுது, அவர் இருக்கிறவண்ணமாகவே அவர்கள் அவரைத் தரிசிப்பார்கள். தங்கள் பிரியமானவர்களுக்கு இசைவாக, அங்கீகரிக்கப்பட்டவர்களாக, சிங்காசனத்திற்குமுன் அவர்கள் நிற்பார்கள். அவர்களின் பாவங்கள் அகற்றப்பட்டுவிட்டன; அவர்களது மீறுதல்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டாயிற்று; தேவ சிங்காசனத்தின் பூரண மகிமையை அவர்களால் இப்பொழுது காணமுடியும். அவர்கள் கிறிஸ்துவோடு அவரது பாடுகளுக்குப் பங்காளிகளாகவும், மீட்பின் திட்டத்தில், அவரது உடன் ஊழியர்களாகவும், தேவ இராஜ்யத்தில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களைக் கண்டு, அவரோடு மகிழ்வும், நித்திய நித்தியமாக தேவனைத் துதிக்கவும், பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.⋆Mar 682.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 682.2

    “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரியதாயிருக்கிறது!” - சங்கீதம் 31:19.Mar 682.3