Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அன்பினால் தூண்டப்படுதல்! , ஏப்ரல் 3

    “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.” - 1 யோவான் 4:21.Mar 185.1

    கடவுள் பற்றிற்கான அடித்தளம் அன்பே. ஒரு மனிதனுடைய சமய நம்பிக்கை எதுவாயிருப்பினும், அவனுக்கு அவனுடைய சகோதரனிடத்தில் சுயநலமற்ற அன்பு இருந்தாலொழிய தேவனிடத்தில் அவனுக்கு தூய்மையான அன்பு இருக்க முடியாது; அதாவது, ஒரு மனிதன் தனது சகோதரனை சுயநலமற்ற அன்போடு நேசித்தால் மாத்திரமே, அவன் தேவனிடத்தில் காட்டும் அன்பு தூய்மையாக இருக்க முடியும்…சுயமானது கிறிஸ்துவிலே கலந்துவிடும்போது, அன்பானது இயல்பாகவே ஊற்றாகப் பெருக்கெடுத்து வெளிப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும், மற்றவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்ற உந்துதலானது. இதயத்திலிருந்து நிலையாகப் பெருக்கெடுத்து வரும்பொழுது கிறிஸ்தவ குணத்தின் முழுநிறைவையும் அடைய முடிகிறது. அந்த சமயத்தில் பரலோக ஒளியானது இதயத்தை நிரப்பி, முகத்திலே வெளிப்படுகிறது…..Mar 185.2

    கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறதால், அன்பெனும் சங்கிலியின் பொற்கண்ணிகளால் நமது உடன்மனிதரோடு நாம் இணைக்கப்பட்டிருக்கின்றோம்; அப்பொழுது, கிறிஸ்துவில் காணப்படும் பரிவும் இரக்கமும் நமது வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரியும். தேவையிலிருப்போரும், வாழ வசதியற்றவர்களும் நம்மிடத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாம் காத்திருக்கமாட்டோம். மற்றவர்களின் துன்ப துயரங்களை உணர்ந்து கொள்ளத்தக்கதாக, நம்மை யாரும் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்து எங்கணும் நன்மைசெய்பவராக எப்படி இயல்பாகவே சுற்றித்திரிந்தாரோ அதேபோன்று, தேவையிலிருப்பவர்களுக்கும் துன்பம் அனுபவிப்பவர்களுக்கும் உதவிசெய்வது நமக்கு ஒரு இயல்பான குணமாக இருக்கும்….Mar 185.3

    விழுந்துபோனவர்களை தூக்குவதிலும், துயரத்திலிருப்போரைத் தேற்றுவதிலுமே, பரலோகத்தின் மகிமை காணப்படுகிறது… நாடு, இனம் அல்லது ஜாதிபோன்ற வேறுபாடுகளை தேவன் எவ்விதத்திலும் அங்கீகரிப்பதில்லை. பிரிக்கும் ஒவ்வொரு சுவரையும் இடித்துத் தகர்க்கவும், ஒவ்வொரு ஆத்துமாவும் தாராளமாக தேவனிடத்திற்குச் செல்வதற்கான நுழைவுரிமையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும், ஆலயத்தின் ஒவ்வொரு அறையையும் வெளியரங்கமாகும்படி திறந்தார். அவரது அன்பு மிக விசாலமானதாகவும், மிகவும் ஆழமானதாகவும் அதிக நிறைவோடும் இருப்பதால், அந்த அன்பானது எங்கனும் ஊடுருவிச்செல்கிறது. சாத்தானின் வஞ்சகங்களால், அவனது வளையத்திற்குள் இருக்கின்ற, இரங்கத்தக்க நிலையிலிருக்கும் அந்த ஆத்துமாக்களை அன்பானது தூக்கி வெளியே கொண்டுவருகிறது. வாக்குத்தத்தம் எனப்படும் வானவில்லால், சூழப்பட்டிருக்கும் தேவசிங்காசனத்திற்கு அருகில், அன்பானது அவர்களைக் கொண்டுவந்து வைக்கிறது.Mar 185.4

    கிறிஸ்து பிதாவோடு ஒன்றாக இருப்பதுபோல், நாமும் அவரோடு ஒன்றாக இருக்கத்தக்கதாக, அவர் அனைவரும் தம்மோடு தோழமை கொள்ளத்தக்கதாக உயர்த்தப்படும்படி, நாடித் தேடிக்கொண்டிருக்கிறார். நமது தன்னலத்தினின்று நம்மை வெளியேற்றுவதற்கான அழைப்பைக் கொடுப்பதற்காக, துன்பங்களையும் பேரிடர்களையும் சந்திக்கத்தக்கதாக, நம்மை அனுமதிக்கிறார். இரக்கம், கனிவு மற்றும் அன்பு ஆகிய அவரது குணநலக் கூறுகளை நம்மிலே பெருகும்படிச்செய்ய விரும்புகிறார்.Mar 186.1

    “...நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறது இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்” (சகரியா 3:7) என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். பரலோக தூதர்கள் பூமியில் செய்கின்ற ஊழியத்திற்கு நாம் ஒத்துழைப்பு தருவதின்மூலமாக, பரலோகத்தில் அவர்களது தோழமையைப் பெற்றுக்கொள்ள நாம் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.⋆Mar 186.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 186.3

    “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” - நீதிமொழிகள் 19:17.Mar 186.4