Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தவணையின் காலம் முடிவடையாமல் ஏன் தாமதித்துக் கொண்டிருக்கிறது? , மார்ச் 25

    “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்ததைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” - 2 பேதுரு 3:9.Mar 167.1

    ஒரு மக்கள் கூட்டமாக கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தோடு உலகமாக ஒன்றிப் போகின்ற ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்பது எனக்குக் காட்டப்பட்டது; இப்பொழுது, நித்தியமான உலகின் அந்த எல்லையோரத்திற்கு அருகிலே இருக்கிறோம்; ஆனால், ஆத்துமாக்களின் எதிராளியான சாத்தான், உலக முடிவின் நேரத்தை மேலும் அதிகமாகத் தள்ளிப்போடத்தக்கதாக, நம்மை வழிநடத்துகிறான். மகா வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்களிலே, இரண்டாம் வருகையிலே காணப்படப்போகின்ற மீட்பருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறோம் என்றும் சொல்லிக்கொண்டிருப்பவர்களை, எத்தகைய வழியிலாவது கடும் முயற்சியோடு சாத்தான் தாக்குகிறான். உலகத்தின் அழிவு நாளை மேலும் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கத்தக்கதாக, எத்தனை அதிகம்பேரை வழிநடத்த முடியுமோ, அத்தனைபேரையும் அவ்வாறு வழிநடத்தி, உலகத்தாரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிற குணத்தை உடையவர்களாகச் செய்துவிடுவான். சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்களாகத் தங்களை மிகவும் உயர்வாகவைத்து பேசிக்கொண்டிருக்கும் மக்களது இதயங்களையும் சிந்தனைகளையும் உலகத்தாரின் ஆவி அடக்கியாண்டுகொண்டிருப்பதை நான் கண்டபோது அதிர்ச்சியடைந்தேன்.Mar 167.2

    மிகக் குறுகிய காலம்மாத்திரமே உள்ளது என்பதை ஆராய்ந்து சிந்தித்தவர்களாக, ஒரு மக்கள் கூட்டமாக இருக்கின்ற நாம் விழிப்போடு ஜெபிக்கவேண்டும். நமக்கு முன்பாக இருக்கும் அந்த மாபெரும் சம்பவத்திற்கான ஆயத்தமாகுதல் எனப்படும் அந்த பக்திவிநயமான பணியினின்று விலகிச் செல்லத்தக்கதாக எந்தக் காரணத்தினிமித்தமும் நாம் நம்மை அனுமதிக்கக்கூடாது. காலநீட்டிப்புச் செய்யப்பட்டதுபோன்று தோற்றம் அளிப்பதால், அநேகர் தங்களது வார்த்தைகளைக்குறித்தும், செயல்களைக்குறித்தும் அக்கறையற்றவர்களாக மாறிவிட்டார்கள். தங்களது ஆபத்தை அவர்கள் இன்னும் உணரவில்லை. எதிர்காலத்திலே பெறப்போகும் அந்த நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, தங்களது குணங்களைச் சரியாக அமைக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கத்தக்கதாக, தேவனுடைய இரக்கத்தினால் தவணையின் காலமானது நீட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துப் புரிந்துகொள்ளக்கூடாத நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் மிகவும் உயர்ந்த மதிப்பு உடையது. தங்களுக்கான இன்ப அமைதியைப்பற்றிய காரியங்களை ஆராய நேரத்தைச் செலவிட்டவர்கள், இந்த பூமியிலே சஞ்சரிப்பவர்களாக மாறுவதற்காக, நேரம் கொடுக்கப்படாமல், தங்களது சொந்த குணங்களிலுள்ள ஒவ்வொரு குறையையும் மேற்கொள்ளும் பரிசுத்தத்தின் அழகைக் காணத்தக்கதாக, தங்களது முன்மாதிரியினாலும், சொந்த முயற்சியினாலும் மற்றவர்களுக்கு உதவிசெய்யவும் தக்கதாக நேரம் கொடுக்கப்பட்டுள்ளாது. துரிதமாக நிறைவேறிக்கொண்டிருக்கிற தீர்கத்தரிசனங்களின் வழித்தடங்களை அறிந்த பரிசுத்த விசுவாசமும் நம்பிக்கையுமுள்ள ஒரு மக்கள் கூட்டம் தேவனுக்கு இந்த பூமியில் உண்டு. கிறிஸ்து இரண்டாம்முறை வானத்திலே தோன்றும்போது, கல்யாணவஸ்திரம் இல்லாதவர்களாகக் காணப்படாதபடி, இத்தகைய மக்கள் சத்தியத்திற்குக் கீழ்படிந்து, தங்களது ஆத்துமாக்களைத் தூய்மைப் படுத்துபவரை நாடித் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.Mar 167.3

    தீர்க்கதரிசனத்திலே முன்னுரைக்கப்பட்ட அடையாளங்கள், நம்மைச்சுற்றிலும் துரிதமாக நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இந்தக் காரியமானது, ஒவ்வொரு உண்மையுள்ள கிறிஸ்துவின் பின்னடியாரையும் மிகவும் ஆர்வத்தோடு செயலில் ஈடுபடத்தக்கதாக விழிப்படையச் செய்யவேண்டும்.⋆Mar 168.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 168.2

    “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.” - ஏசாயா 12:3.Mar 168.3