Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஏதேன் தோட்டம் மீட்டளிக்கப்பட்டது!, டிசம்பர் 12

    “...ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்...” - வெளிப்பருத்தல் 2:7.Mar 691.1

    மனிதன் ஏதேனின் இனிமையிலிருந்து துரத்திவிடப்பட்ட பின்பும், வெகுநாட்கள் அத்தோட்டமானது பூமியிலிருந்தது. அதின் வாசல் தூதர்களால் காக்கப்பட்ட நிலையில், விழுந்துபோன மானிடர், பாவமற்ற நிலைமையில் தங்கள் குடியிருப்பாக இருந்த அந்த தோட்டத்தை, ஆவலாக நோக்கிப்பார்ப்பதற்காக வெகுகாலம் தேவன் அனுமதித்திருந்தார். கேரூபிங்களால் காவல் காக்கப்பட்ட அந்தப் பாரதீசின் வாசலில் தேவமகிமை வெளிப்பட்டது. அங்கே ஆதாமும் அவன் குமாரரும் தேவனைத் தொழுதுகொண்டனர். எந்த தேவனுடைய கற்பனைய மீறியதால் ஏதேனைவிட்டுத் தாங்கள் துரத்தப்பட்டார்களோ, அந்த கற்பனைக்குக் கீழ்ப்படிவோம் என்ற தங்கள் உறுதிமொழியை அவ்விடத்திலே புதுப்பித்துக்கொண்டார்கள். அக்கிரமம் இவ்வுலகை நிரப்பி, மனிதனின் துன்மார்க்கம் மிகவும் பெருகியதால், ஜலப்பிரளயத்தால் உலகம் அழிக்கப்பட நேர்ந்தபொழுது, ஏதேனை இப்பூமியில் வைத்த ஆண்டவரின் கரம், அதனை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டது; ஆனால், இறுதியில் எல்லாவற்றையும் மீட்டு மனிதனிடம் ஆண்டவர் ஒப்படைக்கும்பொழுது, “புதிய வானமும் புதிய பூமியும்” (வெளிப்படுத்தல் 21:1) உண்டாகும்பொழுது, ஆதியில் இருந்ததைவிட, மிகவும் அதிக மகிமையோடு அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் ஏதேன் தோட்டம் திரும்பக்கொடுக்கப்படும்.Mar 691.2

    அப்பொழுது தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொண்டவர்கள், ஜீவவிருட்சத்தின் கீழே, சாவாமை என்னும் புதிய ஆற்றலோடு சுவாசிப்பார்கள். யுகங்கள் நெடுகிலும், பாவமற்ற ஏனைய உலகங்களில் வாழ்பவர்களும் நோக்கிப்பார்க்கும் வண்ணம் இந்த மனமகிழ்ச்சியின் தோட்டம், பாவத்தின் சாபமில்லாமல் தேவனுடைய சிருஷ்டிப்பின் பரிபூரணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும். சிருஷ்டிகளின் மகிமையான திட்டத்தை மனிதன் நிறைவேற்றியிருந்தால், பூமி அனைத்தும் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும்.Mar 691.3

    ஆதியில் பெற்றிருந்த ஆளுகையை ஆதாம் மீண்டும் பெற்றான். தனக்கு முன்பு இன்பமளித்த மரங்களை ஆனந்தத்தோடு அவன் நோக்கினான். அவன் பாவமற்ற நிலையில் இருந்த பொழுது, அம்மரங்களின் கனிகளை அவன் பறித்ததை நினைவுகூர்ந்தான். தன் கரங்களால் பண்படுத்துப் பாதுகாத்த திராட்சைக் கொடிகளையும், தான் ஒரு காலத்தில் அன்போடு பராமரித்துவந்த அதே மலர்களையும் பார்த்தான். மீட்டளிக்கப்பட்ட ஏதேன் இதுதான் என்பதையும், எல்லா நிகழ்வுகளின் உண்மை நிலையையும் அவன் புரிந்துகொள்ளலானான்.Mar 692.1

    வெகுகாலமாக இழந்திருந்த ஏதேனின் ஜீவவிருட்சத்தை மீண்டும் பெற்றபின்பு, மீட்கப்பட்டவர்கள் ஆதியிலிருந்த மகிமைக்கு ஒப்பாக, மானிட இனத்தின் முழு வளர்சியைப் “பெறுவார்கள்” - மல்கியா 4:2. பாவத்தின் சுவடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, கிறிஸ்துவின் உண்மையான மக்கள், நம் கர்த்தரின் பூரண சாயலைப் பிரதிபலிப்பவர்களாக, ஆத்துமா, சரீரம், சிந்தை ஆகியவற்றில் நம் கர்த்தராகிய ஆண்டவரின் அழகோடும் மிளிருவார்கள். நீண்டகாலமாக பேசப்பட்ட-நீண்ட காலமாக நம்பியிருந்த-ஆவலாக எதிர்பார்த்து வாஞ்சித்திருந்த-ஒருபோதும் முற்றுமாக புரிந்துகொள்ளப்படாதது-மீட்பு. ஆ எத்தனை! அற்புதமான மீட்பு!⋆Mar 692.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 692.3

    “சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.” - ஏசாயா 29:19.Mar 692.4