Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஏன் இந்த இக்கட்டுக்காலம்?, செப்டம்பர் 22

    “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” - சங்கீதம் 46:1.Mar 529.1

    ஆண்டவருடைய பிள்ளைகள், அவர்களை அழிக்கக்காத்திருக்கிற எதிரிகளால் சூழப்பட்டிருந்தாலும், அவர்கள் அடைகின்ற மனவேதனையானது சத்தியத்திற்காக அனுபவிக்கப்போகும் ஒரு துன்பத்தைக்குறித்த பயத்தினால் ஏற்பட்டதல்ல. நமது அனைத்துப் பாவங்களும் அறிக்கைசெய்யப்படவில்லையென்று பயப்படுகிறார்கள். (அறிக்கைசெய்யப்படாத பாவம் எதுவும் இருக்குமோ என்ற பயம்) மேலும் தங்களில் காணப்படும் சில பாவங்களால், “பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வெளிப்படுத்தல் 3:10) என்கிற இரட்சகருடைய வாக்குத்தத்தமானது நிறைவேறும் என்பதை உணர்ந்துகொள்ள அவர்கள் தவறிவிடுகிறார்கள். மன்னிப்பின் நிச்சயம் அவர்களுக்கு இருக்குமானால், உபத்திரவமானாலும் அல்லது மரணமானாலும் அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். தங்கள் குணக்கேட்டினாலே ஆண்டவருடைய இராஜ்யத்திற்குத் தாங்கள் தகுதியற்றவர்கள் என்று நினைத்து ஜீவனை இழப்பார்களேயானால், தேவனுடைய பரிசுத்த நாமம் தூஷிக்கப்பட்டுவிடும்.Mar 529.2

    நாற்புறமும் துரோகத்தின் சதித்திட்டங்களை அவர்கள் கேள்விப்படுகிறார்கள். கலகத்தின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளைக் காண்கிறார்கள். இவைகளினிமித்தம் அவர்கள் இதயத்திலே ஆத்துமாக்களைக்குறித்த ஒரு வாஞ்சையும் ஆவலுமே ஏற்பட்டவர்களாக, இந்த மாபெரும் மருளவிழுகையானது முடிவடைந்து, துன்மார்க்கரின் துன்மார்க்கமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று ஆத்தும ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கிறார்கள். கலகத்தின் இந்த வேலையானது நிறுத்தப்பட வேண்டுமென்று, தேவனிடம் அவர்கள் மன்றாடும்போது, தாங்களாகவே தீமையின் பயங்கரமான வல்லமையை எதிர்த்துப் போராடி விரட்டுவதற்கு தங்களுக்கு எந்த வல்லமையும் இல்லையென்று, கூரிய உணர்வோடு தங்களைத் தாங்களே நொந்து கொள்வார்கள். தங்களுடைய திறமைகளையெல்லாம் கிறிஸ்துவிற்குச் சேவை செய்வதற்காக எப்பொழுதும் உபயோகித்திருந்தால், பலத்தின்மேல் பலமடைந்து முன்னேறி இருப்போமே, தங்களை எதிர்க்க சாத்தானுக்கு இவ்வளவு பலம் இருந்திருக்காதே என்பதை உணருவார்கள்.Mar 529.3

    தேவனுக்கு முன்பாக தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்த்தி, தங்கள் பழைய பாவங்களைவிட்டு மனந்திரும்பினதைச் சுட்டிக்காட்டி, “அவன் என் பெலனைப் பற்றிக் கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும். அவன் என்னோட ஒப்புரவாவான்” (ஏசாயா 27:5) என்கிற இரட்சகரின் வாக்குத்தத்தத்திற்காக, தங்களுடைய ஆத்துமாக்களை வருத்தி, தேவனிடம் மன்றாடுவார்கள். அவர்கள் ஜெபத்திற்கு உடனே பதில் வராதபடியினால், அவர்கள் விசுவாசம் குறைந்துபோகாது. வேதனையும், கலக்கமும், பயமும், துன்பமும் உண்டாயிருக்கிறபோதிலும், தங்களது விண்ணப்பங்களை நிறுத்தமாட்டார்கள். தூதனானவரின் பலத்தை யாக்கோபு பற்றிக்கொண்டதுபோல, இவர்களும் தேவனுடைய தூதனானவரின் பலத்தை பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் இதயத்தின் எண்ணமெல்லாம், “நீர் என்னை ஆசீர்வதிக்காவிடில் நான் உம்மைப் போகவிடமாட்டேன்” என்பதே; இதுவே அவர்களது ஆத்துமாக்களின் மொழியாக அமைந்திருக்கும்.Mar 530.1

    கிறிஸ்துவைப்போன்ற குணங்களை உருவாக்குகிறதற்காக இக்கட்டுக்காலமானது புடம்போடும் ஒரு குகையைப்போன்று அமைந்திருக்கிறது. சாத்தானையும் அவனுடைய சோதனைகளையும் முற்றிலும் விட்டுவிடத்தக்கதாக-தேவன் தமது மக்களை வழிநடத்துவதற்காக-புடம்போடுதல் திட்டமிடப்பட்டிருக்கிறது.⋆Mar 530.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 530.3

    “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” - யோவான் 15:5.Mar 530.4