Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தை அடைந்தவுடன் நமக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்...!, நவம்பர் 8

    “...மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்...” - 1 சாமுவேல் 16:7.Mar 623.1

    அநேக சமயங்களில், கிறிஸ்து தம்மிடம் ஈர்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர்களை, நம்பிக்கையற்றவர்களாக எண்ணி அவ்வாறு மதிப்பீடுசெய்கிறோம். இவர்களெல்லாம் பரலோகத்தாரைப்பற்றி யூகித்திருந்தோமோ அவர்களில் அநேகர் அங்கிருப்பார்கள். மனிதன் தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்கிறான். தேவன் இதயத்தைப் பார்த்து நியாயந்தீர்க்கிறார்.Mar 623.2

    மீட்கப்பட்டவர்களில் சிலர், தங்களுடைய வாழ்க்கையின் கடைசி மணி நேரங்களில் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டவர்களாக இருப்பார்கள். மரிக்கும்பொழுது, இரட்சிப்பின் திட்டத்தை பூரணமாகப் புரிந்துகொள்ளாத இவர்களுக்கு, பரலோகத்திலே போதனைகள் வழங்கப்படும்.Mar 623.3

    சிலுவையிலே கடுந்துயர் அனுபவித்துக்கொண்டிருந்த இயேசுவிற்கு ஒரு ஆறுதலின் ஒளிக்கதிர் கிடைத்தது. தவறுக்காக மனஸ்தாபப்பட்ட அந்தத் திருடனுடைய ஜெபந்தான் அது... நொறுக்கப்பட்டு-பரிகசிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவிலே, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை அவன் காண்கிறான். ஆதரவற்றவனாக, மரித்துக்கொண்டிருந்த அந்த ஆத்துமா, இரட்சகர்மேல் சாய்ந்துகொண்ட பொழுது, அந்த வேதனையான குரலிலும் நம்பிக்கை கலந்திருந்தது. “ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று கதறிய அவனுக்கு, “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசில் இருப்பாய்” என்கிற பதில் உடனடியாக வந்தது.Mar 623.4

    இந்த விசுவாசத்தை பதினொன்றாம் மணிநேரத்தில் வேலைக்கு வந்தவர்களுடைய விசுவாசத்தோடு ஒப்பிடலாம். அநேக மணி நேரங்கள் வேலைசெய்தவர்கள் பெற்றுக்கொண்ட சம்பளத்தைப்போலவே, பதினொன்றாம் மணிநேரத்தில் வந்தவர்களுக்கும் கிடைக்கும். அந்தத் திருடன் மனஸ்தாபப்பட்டவனாக, விசுவாசத்தோடு, இதயம் நொறுங்கியவனாக விண்ணப்பித்தான். கிறிஸ்து, அவருக்குச் சித்தமானால், அவனை இரட்சிக்கமுடியும் என்பதை முழுவதும் உணர்ந்தவன்போல, உண்மையாகக் கேட்டான்.Mar 624.1

    கிறிஸ்து யார் யாருக்காக நியாயத்தீர்ப்பிலே பரிந்துபேசுகிறாரோ, அவர்கள் இறையியல்பற்றி ஒரு சிறிதும் அறியாதிருந்தபோதிலும், அவருடைய கொள்கைகளை நெஞ்சார நேசித்திருக்கிறார்கள்... அஞ்ஞானிகளில், அறியாமலே ஆண்டவரைத் தொழுதுகொண்டவர்களும் இருப்பார்கள். மனிதர்கள்மூலமாக சத்தியத்தை ஒரு போதும் அறிந்திராதவர்கள் அழியாமல் காக்கப்பட்டிருப்பார்கள். எழுதப்பட்ட தேவனுடைய பிரமாணத்தை அறியாதவர்களாயிருப்பினும், இயற்கையின் வாயிலாக அவருடைய சத்தத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாணம் எதிர்பார்க்கிற கிரியைகளை அவர்கள் நடப்பித்திருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இதயங்களைத் தொட்டார் என்பதற்கு, அவர்கள் கிரியைகள் சாட்சிகளாக இருக்கின்றன. அவர்கள் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.Mar 624.2

    தாழ்நிலையிலுள்ள மக்களிடத்திலும் அஞ்ஞானிகளுக்கு மத்தியிலும், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்ற வார்த்தைகளை இரட்சகர் சொல்வதைக் கேட்கும்பொழுது, எத்தனை ஆனந்தமும் ஆச்சரியமும் அடைவார்கள். அவருடைய அங்கீகரிப்பைக் கேட்டு, மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் அவர்கள் அவரை பார்க்கும்பொழுது, அளவில்லாத அன்பான அவருடைய உள்ளம் எத்தனை ஆனந்தமடையும்!⋆Mar 624.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 624.4

    “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” - ஏசாயா 55:6.Mar 624.5