Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வுநாளை ஆசரிப்பதில் கவனம் தேவை!, ஜூன் 18

    “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல் வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.” -மத்தேயு 10:16.Mar 337.1

    மக்களின் பழக்கவழக்கங்களை தேவனுடைய பிரமாணத்தோடு முரண்படாவிட்டால், நீங்கள் அவைகளோடு இசைந்துபோகலாம். ஊழியர்கள் இதைச் செய்யத் தவறுவார்களானால், அவர்கள் தங்களது ஊழியஞ்செய்கிறார்களோ, அவர்கள் வழியிலும் முட்டுக்கட்டை போட்டு, அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதபடி தடை செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையில் இறைப்பணியாளர்களுக்கு மிகச்சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்நாளில் ஞாயிறு பள்ளிகள்வைத்து எளியமுறையில் மக்களண்டைவந்து, பாவிகளுக்காக இயேசு கொண்டிருக்கும் அன்பைப்பற்றிக்கூறி, அவர்களுக்கு வேத வாக்கியங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.Mar 337.2

    இப்பொழுது ஞாயிறு ஆசரிப்பு ஒரு பரீட்சையாக இல்லை. நேரம் வரும், அப்பொழுது மக்கள் ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்வதைத் தடுப்பதுமட்டுமல்ல, அவர்கள் ஓய்வுநாளில் அதாவது சனிக்கிழமையில், மக்கள் வேலைசெய்யவேண்டுமென்றும் கட்டாயப் படுத்த முயற்சிப்பார்கள்; மேலும், ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பிற்கு சம்மதியுங்கள்;அல்லது உங்களது சுதந்திரத்தையும் உயிரையும் இழக்கவேண்டுமென்று கூறுவார்கள்; ஆனால், அதற்கான வேளை இன்னும் வரவில்லை; ஏனெனில், மக்களுக்கு முன்பாக-சாட்சியாக சத்தியமானது முழுமையாக-கொடுக்கப்பட வேண்டும்.Mar 337.3

    தேவனுடைய ஊழியக்காரர்கள் அமைதியாக ஊழியஞ்செய்யச் செல்ல வேண்டும், வேதாகமத்தின் மகத்துவமான-அருமையான சத்தியங்களைப் பிரசங்கிக்கவேண்டும். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை-அவரது அன்பை-அவரது எல்லையற்ற தியாகத்தைப் பற்றிக் கூறவேண்டும். தேவனுடைய பிரமாணம் நிலையானது; மாற்றப்பட முடியாதது; நித்தியமானது. அந்தக் காரணங்களால்தான் கிறிஸ்து மரிக்கவேண்டியதாயிற்று என்பதைக் கூறவேண்டும். ஓய்வுநாளானது ஒரு தெளிவான முறையிலே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஞாயிறு என்ற அந்த விக்கிரகம்பற்றிய நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்கிறீர்கள் என்பதைக்குறித்து மிகவும் கவனமாகச் செயல்படுங்கள். ஞானமுள்ளவர்களுக்கு ஒரு வார்த்தையே போதுமானது. இதைக்குறித்த வெளிச்சம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.Mar 337.4

    ஞாயிற்றுக்கிழமையில் வேலைசெய்யாமல் இருத்தல் என்ற காரியமானது, மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுதல் என்று கருதப்படாது. எங்கு இந்தக் காரியமானது, நமது ஊழியத்தின் காரியங்களை முன்னேற்றுவிக்குமோ, அங்கு இது செய்யப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வேலைசெய்யவேண்டும் என்று அன்றாடப் பழக்கவழக்கத்தினின்று நாம் விலகிச் செல்லக் கூடாது…Mar 338.1

    ஓய்வுநாளைப்பற்றிய வெளிச்சத்தைக் கண்டு, கேட்டு தேவனுடைய பரிசுத்த நாளைக் கைக்கொள்ளவேண்டுமென்று, சத்தியத்திற்கு தங்களது பங்கைத் தெரிந்துகொள்பவருக்கு பிரச்சனை உண்டாகும். அவர்களுக்கு எதிராக முயற்சிகள் எடுக்கப்பட்டு, தேவனுடைய பிரமாணத்தை மீறத்தக்கதாக, ஆண்களும் பெண்களும் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இங்கு தேவனுடைய பிரமாணத்தை மீறமாட்டோம் என்பதில் உறுதியாக நிற்கவேண்டும். எதிர்ப்பும் உபத்திரவமும் தீர்மானமான முறையில் வைக்கப்படும் எனில், கிறிஸ்துவின் வார்த்தைக்குச் செவிகொடுக்க வேண்டும். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால, அடுத்த பட்டணத்திற்கு ஓடிப்போங்கள் (மத்தேயு 10:23) என்று கிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.⋆Mar 338.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 338.3

    “ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.” - புலம்பல் 3:31,32.Mar 338.4