Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நான்கு காற்றுகளும் அவிழ்த்துவிடப்படுதல்!, செப்டம்பர் 15

    “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் திருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள்” என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். - வெளிப்படுத்தல் 7:3.Mar 515.1

    சாத்தானுக்கு ஆதரவாக பெருந்திரளான மக்கள் கூட்டம் இருப்பதினாலே, இந்த உலகத்தில் அவன் சர்வாதிகாரம் செலுத்துவதை உரிமைகொண்டாடாதபடிக்கு, அதை மறுத்தவர்களாக தேவ தூதர்கள் உலகத்தைச் சுற்றிவளைக்கிறார்கள். அவர்களது குரல்களை நாம் கேட்கிறதில்லை. நம்முடைய மானிட கண்களால் அந்தத் தூதர்களை நாம் காணமுடிகிறதில்லை. எனினும், அவர்களுடைய கரங்கள் உலகத்தைச் சுற்றிலும் இணைக்கப்பட்டிருக்குக்கின்றன. நித்திரையற்ற ஜாக்கிரதையோடு, தேவனுடைய மக்கள் முத்திரையைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும், சாத்தானுடைய சேனைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.Mar 515.2

    இயற்கையின் மூலக்கூறுகளான நிலநடுக்கம், புயல் மற்றும் அரசியல் சச்சரவு ஆகியவற்றை நான்கு தூதர்களும் பிடித்திருப்பதாக யோவான் காண்கிறார். அவைகளை விட்டுவிடும்படிக்கான கட்டளையை ஆண்டவர் கொடுக்கும்வரை. அந்தக் காற்றுகள் தேவனுடைய கட்டுப்பாட்டிற்கடியிலே இருக்கும். அங்கேதான் தேவனுடைய சபையின் பாதுகாப்பு இருக்கிறது. அவருடைய சித்தத்தின்படிசெய்கிற தேவதூதர்கள், ஊழியக்காரர்கள் நெற்றியிலே முத்திரையப் பெற்றுக்கொள்ளும்வரைக்கும், பூமியின் மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது காற்றுவீசாத படிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கிறார்கள்.Mar 515.3

    உயிரோடிருக்கிற அனைவருக்கும், இந்தக் காலம் திணரடிக்கும் அளவிற்கு, கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு முக்கியமான காலமாகும். ஆளுநர்களும் அரசியல் வல்லுநர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பொறுப்பிலும் அதிகாரத்திலுமிருக்கும் மனிதரும், அனைத்து வகுப்பையும் சார்ந்த சிந்திக்கும் ஆண்களும் பெண்களும், நம்மைச்சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலே தங்களது கவனத்தை பதித்திருக்கிறார்கள். நாடுகளுக்கிடையே நிலவுகிற இறுக்கமான-அமைதியற்ற உறவுகளை அவர்கள் விழிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பூமியின் ஒவ்வொரு மூலக் கூறையும் மும்மரமாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் காரியங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இறுதியாக-நிச்சயமாக-ஏதோ ஒரு மாபெரும் சம்பவம் நடைபெறவிருக்கிறது என்பதையும், இந்த உலகமானது ஒரு மாபெரும் சம்பவம் நடைபெறவிருக்கிறது என்பதையும், இந்த உலகமானது ஒரு மாபெரும் நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது என்பதையும், நன்றாக விளங்கிக்கொள்கிறார்கள்.Mar 515.4

    உலகத்தின்மேல் வரவிருக்கும் அழிவைக்குறித்து எச்சரிக்கப்படும்படி, தூதர்கள் அழிவின் காற்றுகளை இப்பொழுது பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும், ஒரு பெரிய புயல், பூமியின் மேல் மோதத்தக்கதாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. காற்றுகளை அவிழ்த்துவிடுமாறு தேவன் தமது தூதர்களுக்கு கட்டளை இடும்போது, எந்த பேனாவினாலும் விவரிக்கமுடியாத அளவிற்கு, மகா பயங்கரமான குழப்பங்களும் கலகங்களும் இவ்வுலகில் எழும்பும்…Mar 516.1

    தேவன் ஒரு சிறிய இடைவெளியின் நேரத்தை கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். பரலோகத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வோரு திறமையையும் அறியாமையிலே அழிந்து கொண்டிருக்கிற மக்களுக்காக, நாம் ஊழியஞ்செய்யும்படி, ஆண்டவர் நியமித்திருக்கிற ஊழியத்தைச்செய்ய, நாம் பயன்படுத்த வேண்டும்… இந்த எச்சரிப்பின் செய்தி உலகம் முழுவதிலும் தொனிக்க வேண்டும்…ஒரு பெரிய ஊழியம் நடை பெற வேண்டும். இந்தக் காலத்திற்கான சத்தியத்தை அறிந்த மக்களிடம், இந்த ஊழியத்தின் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.⋆Mar 516.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 516.3

    “எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உன்க்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.” - சங்கீதம் 91:9,10.Mar 516.4