Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கடைசிவரை விழிப்பாயிருத்தல்! , பிப்ரவரி 17

    “அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.” - மாற்கு 13:35,36Mar 95.1

    ஒரு மக்கள் கூட்டம் எனக்கு முன்பாக காண்பிக்கப்பட்டது... அவர்கள் கண்கள் பரலோகத்தை நோக்கியிருந்தது. “நான் உங்களுக்கு சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்கிறேன், விழித்திருங்கள்” என்கிற ஆண்டவருடைய வார்த்தைகள் அவர்களின் உதடுகளின் மேல் இருந்தன... இறுதியாக காலை விடிவதற்கு முன்னர், ஒரு தாமதத்தை கர்த்தர் தெரிவிக்கிறார். தாங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு சீக்கிரம் பகல் அவர்கள் மேல் உதிக்காததால், அவர்கள் சோர்வுற்று, உண்மையாக விழித்திருப்பதிலிருந்து சிறிது ஓய்ந்திருப்பதை அவர் அனுமதிக்கிறதில்லை...Mar 95.2

    பிணைப்புகளிலும் ஆசைகளிலும் இவ்வுலகிற்க்கு அடுத்த காரியங்களிலும் இருந்துகொண்டு, இவ்வுலகில் செல்வங்களை சேர்த்துக்கொண்டும், அதே சமயத்தில் நமது இரட்ச்சகரின் கட்டளைக்கிணங்க விழித்திருந்து காத்துக்கொண்டிருப்பதும் முடியாத காரியம் என்பதை கண்டேன். “அவர்கள் ஏதேனும் ஒரு உலகத்தை சுதந்தரித்துக்கொள்ளலாம். (ஒன்று இவ்வுலகம் அல்லது பரலோகம்) பரலோகப்பொக்கிஷங்களை அடைவதற்கு அவர்கள் இந்த உலகத்திற்க்குரியவைகளை தியாகம்செய்ய வேண்டும். அவர்கள் இரு உலகங்களையும் பெற்றுக்கொள்ள முடியாது” என்று தேவதூதன் கூறினான்...Mar 95.3

    கடந்த காலங்களில் விழிப்புடனிருத்தல் தொடர்ந்து நடைபெற்றதை நான் கண்டேன்; இதனால், எச்சரிக்கை குறைவுடன் இன்று காணப்படலாமா? அல்ல; ஆ! அப்படி அல்ல! இடைவிடாமல் விழித்திருத்தல் மிகவும் அவசியமாகிறது; ஏனெனில், முதலாவது விழித்திருந்ததைக்காட்டிலும் இப்பொழுது நேரம் குறைவாகவே காணப்படுகிறது... மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் விழித்திருந்தால், இரண்டாவது முறையாக விழித்திருக்கும்பொழுது, இரண்டுமடங்கு எச்சரிக்கை அவசியம் அல்லவா? இரண்டாவதான விழித்திருத்தலும் கடந்துபோய், நாம் மூன்றாவதற்குள் வந்திருக்கிறோம்; இப்பொழுது நாம் எச்சரிக்கையுடன் விழித்திருத்தலைக் குறைத்துக்கொள்வது மன்னிக்க முடியாதது. மூன்றாவதான விழித்திருத்தலில் மூன்று மடங்கு ஊக்கம் இருக்கவேண்டும்; இப்பொழுது பொறுமை இழந்தால், நமது அனைத்து முயற்சிகளும் இதுவரை காத்திருந்தும் வீணாகப்போய்விடும். இந்த நீண்ட, இருண்ட இரவு துன்பமானதது தான்; ஆனால் இரக்கத்தின் நிமித்தமாகவே காலைப்பொழுது தள்ளிப்போடப்பட்டுள்ளது; ஏனெனில், இப்போது ஆண்டவர் வந்தால், பலர் அதற்கு ஆயத்தமின்று காணப்படுவார்கள். இந்த நீண்ட தாமதத்திற்கு காரணம், “தேவன் தமது ஜனங்கள் அழிவதை விரும்புவதில்லை” என்பதேயாகும்.Mar 95.4

    உலகத்தை நேசிப்பவர்களுக்கும், கிறிஸ்துவை நேசிப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், நாம் தவறாகப் புரிந்துகொள்ளமுடியாதப்படி மிகவும் தெலிவாக உள்ளது. இவ்வுலகத்தின் பிள்ளைகள், உலக ஆஸ்திகளைச் சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாக மிகவும் ஊக்கமாகவும் பேராவலுடனும் செயல்படுகின்றனர்; ஆனால், தேவ மக்கள் இவ்வுலகிற்கு கட்டுப்பட்டவராயிராமல், மறுரூபம் அடைந்து, இவ்வுலகம் அல்லாத — தங்கள் வீடாகிய — பரலோக நாட்டைத் தேடுகிறவர்களாக, ஊக்கத்தோடும் விழிப்புடனும் காத்திருக்கிறவர்களாகக் காணப்படுவார்கள்.⋆Mar 96.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 96.2

    “பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.” - சங்கீதம் 146:9Mar 96.3