Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இனி என்றுமே மரணமில்லை!, டிசம்பர் 10

    “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின” என்று விளம்பினது. - வெளிப்படுத்தல் 21:4.Mar 687.1

    நித்தியத்தை கழிப்பதற்காக, தேவனுடைய இராஜ்யத்தில் நாம் நுழையும்பொழுது, இவ்வுலகில் நாம் அனுபவித்த சோதனைகளும், பாடுகளும், வேதனைகளும், முக்கியதுவத்தை இழந்துவிடும். Mar 687.2

    மீட்கபட்டோரின் வீட்டில், கண்ணீரில்லை, இறுதி மரண ஊர்வலங்கள் இல்லை, துக்கத்தைக் காட்டும் அடையாளக் குறிகளில்லை; “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” -ஏசாயா 33:24. அங்கு நிறைந்த-ஆழமான-மகிழ்ச்சியின் அலையே என்றென்றும் சதாகாலமும் புரண்டுகொண்டிருக்கும். Mar 687.3

    பாக்கியமான நித்திய வாழ்வை மிகவும் கவனமாக கருத்தில் கொள்வோம். இருளின் ஒவ்வொரு மேகத்தின் வழியாகவும் நம் விசுவாசக் கண்களால் ஊடுருவி, உலகத்தின் பாவங்களுக்காக மரித்தவரை நோக்கிப் பார்ப்போம். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவருக்காக, பரதீசின் கதவுகளை அவர் திறந்திருக்கிறார். அவர்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஆவதற்கு அதிகாரமும் கொடுத்திருக்கிறார். நம்மை அதிகமாக வேதனைப்படுத்தும் பாடுகள், கிறிஸ்துவிற்குள் நாம் அழைக்கப்பட்ட உயரிய அழைப்பை நாம் சென்றடைவதற்கு, புகட்டும் பாடங்களாய் அமையட்டும். தேவன் சீக்கிரமாக வருகிறார் என்ற எண்ணம் நம்மை உற்சாகமூட்டட்டும். அந்த நம்பிக்கை நம் இதயங்களை மகிழ்ச்சியாக்கட்டும்...Mar 687.4

    நாம் நம் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். நம்மை அதிகமாக நேசித்து நமக்காக மரித்தவர், நமக்காக ஒரு நகரத்தைக் கட்டியிருக்கிறார். புதிய எருசலேம் நாம் இளைப்பாறும் இடமாகும். தேவனுடைய நகரத்தில் துக்கமேயில்லை; அலறுதலில்லை; ஒடுக்கப்பட்ட நம்பிக்கையாலும், புதைக்கப்பட்ட பாசத்தாலும் எழுகின்ற சோக கீதம் அங்கு கேட்கப்படுவதில்லை. பாரமான ஆடைகளுக்குப் பதிலாக, கலியாண வஸ்திரம் தரிப்பிக்கப்படும். நம் இராஜாதி இராஜாவின் முடிசூட்டு விழாவைப் பார்ப்போம். யாருடைய ஜீவியங்கள் கிறிஸ்துவில் மறைக்கப்பட்டிருந்ததோ, இந்த பூமியிலே யாரெல்லாம் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடியிருந்தார்களோ, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில், மீட்ப்பரின் மகிமையோடு பிரகாசிப்பார்கள்.Mar 687.5

    நமது நித்திய வாழ்வின் நம்பிக்கைக்குக் காரணகர்த்தாவான கிறிஸ்துவை நாம் தரிசிக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவரது சமூகத்தில், இந்த வாழ்க்கையின் துன்பங்களும் பாடுகளும் ஒன்றுமில்லாததைப்போலாகிவிடும்... மேல்நோக்கிப்பாருங்கள்! மேல்நோக்கிப்பாருங்கள்! உங்களது விசுவாசம் தொடர்ந்து பெருகட்டும். அந்த விசுவாசம் நம்மைக் குறுகலான பாதை வழியாக, தேவனுடைய நரகத்தின் வாசல்கள் வழியாக, பரந்து விரிந்து மீட்கப்பட்டவருக்காக காத்திருந்த, அந்த மகிமையான எதிர்காலத்திற்கு வழிநடத்திச் செல்லட்டும்.⋆Mar 688.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 688.2

    “தீங்கு நாளிலே அவர் என்னைத் தம்முடைய கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கண்மலையின்மேல் உயர்த்துவார்.” - சங்கீதம் 27:5.Mar 688.3