Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சகிப்புத்தன்மை இல்லாத நிலையும் உபத்திரவமும்!, ஜனவரி 23

    “.....அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.” - யோவான் 15:20.Mar 45.1

    எவ்வளவு காலம் சாத்தான் நிலைத்திருக்கிறானோ, எவ்வளவு காலம் கிறிஸ்தவம் உயிர்த்துடிப்பான வல்லமையோடு நிலைபெற்றிருக்குமோ, அவ்வளவு காலத்திற்கு உபத்திரவமானது, அதின் பலதரப்பட்ட வடிவங்களில் முன்னேற்றமடைந்த ஒரு கொள்கையாக இருக்கும். இருளின் சேனைகளுக்கு எதிரான அணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத எந்த நபரும், தேவனைச் சேவிக்க முடியாது. தீய தூதர்கள் தங்கள் கரங்களில் பற்றிப்பிடித்திருக்கும் இரையை, இத்தகைய நபரின் செல்வாக்கு பறித்துக்கொண்டு விடுமோ என்று பயந்து, குழப்பமடைந்து, அந்த நபரைத் தாக்குகிறார்கள். தீய மனிதர்கள் அந்த நபரின் முன்மாதிரியினால், கண்டனஞ்செய்யப்பட்ட நிலையில், தீய தூதர்களுடன் இணைந்து, கவர்ச்சியான சோதனைகளைக் கொடுத்து, தேவனிடமிருந்து அந்த நபரைப் பிரித்துவிட முயற்சிப்பார்கள். இவர்கள் வெற்றியடையாத நிலையில், மனசாட்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வல்லமையானது பயன்படுத்தப்படும்.Mar 45.2

    இயேசு மனிதனுக்ககப் பரிந்துபேசுபவராக, பரலோக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கியிருக்கும்வரை, பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்படுத்தும் செல்வாக்கானது, ஆளுகை செய்வோராலும் மக்களாலும் உணரப்படுகிறது; மேலும், ஆவியானவர் நாட்டின் சட்டங்களை ஓரளவிற்கு மேலும் அடக்கியாளுகிறார். இந்த சட்டங்கள்மட்டும் இல்லாதிருக்குமானால், இப்பொழுது இருப்பதைவிட உலகம் மேலும் படுமோசமான நிலையில் இருக்கும். நம்மை ஆளுகை செய்பவர்களில் அநேகர் சாத்தானின் சுறுசுறுப்பான எடுபிடிகளாக இருந்து செயல்படும்போது, நாட்டைத் தலைமை தாங்கி நடத்துபவர்கள் மத்தியில் தேவனுக்காக செயல்படத்தக்கதாக சில முக்கியமான பிரதிநிதிகள் இருக்கிறார்கள். எதிராளி தேவனுடைய வேலையைத் தடை செய்யத்தக்கதாக, அவனுக்காக உழைப்பவரின் மனதை ஏவி, சில நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, அவைகளை எடுத்துக்கூறச் செய்கிறான்; ஆனால் தேவனுக்குப் பயப்படுகின்ற அரசியல் வல்லுநர்கள் பரிசுத்த தூதர்களால் தூண்டப்பட்டு, எவரும் பதில்கூறமுடியாத அளவிற்கு, விவாதங்களை நடப்பித்து, அவ்வாறு முடிவு செய்யப்படும் கருத்துக்களை எதிர்க்கிறார்கள்; இவ்வாறாக, வல்லமையோடு கிரியை செய்யும் தீய சக்திகளின் போக்கை, ஒரு சில மனிதர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிடுவார்கள். மூன்றாம் தூதனின் தூது அதன் வேலையைச் செய்யத்தக்கதாக, சத்தியத்தின் விரோதிகளால் கொண்டுவரப்படும் எதிர்ப்புகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும். இறுதி எச்சரிப்பு கொடுக்கப்படும்போது, தலைமை தாங்கி நடத்தும் எந்த முக்கிய தலைவர்களைக் கொண்டு, ஆண்டவர் இப்பொழுது ஊழியத்தை நடப்பிக்கின்றாரோ, அந்த முக்கியத் தலைவர்களது கவனமாவது ஈர்க்கப்படும். அவர்களில் சிலர் அந்தத் தூதை ஏற்றுக் கொண்டு, இக்கட்டுக் காலம் நெடுகிலும் தேவனுடைய மக்களோடு இணைந்து நிற்பார்கள்.Mar 45.3

    “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்” - யோவேல் 2:23.Mar 46.1

    “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.” “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” என்பர் தேவன் உரைத்திருக்கிறார். - அப். 2:17,21.Mar 46.2

    இந்த மாபெரும் சுவிசேஷ ஊழியமானது, அதின் ஆரம்பக் கட்டத்தில் குறிப்பிடத்தகுந்த விதத்தில் காணப்பட்டதைவிட, அந்த ஊழியம் முடிவுபெறும் வேளையில், தேவனுடைய வல்லைமையானது எந்த விதத்திலும் குறைந்த வெளிப்பாட்டோடு காணப்படாது.⋆Mar 46.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 46.4

    உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுவார்.” - சங்கீதம் 103:4.Mar 46.5