Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஜீவனுக்கான வழி! , ஏப்ரல் 12

    “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரியும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறார்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” - மத்தேயு 7:13,14.Mar 203.1

    நெருக்கமான பாதையிலே பிரவேசிக்கவேண்டுமென்று கிறிஸ்து நம்மை அழைக்கிறார். அந்தப் பாதையிலே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு தன்னலத்தை ஒறுத்தல் என்பதாகும். நித்திய சத்தியம் என்ற தளமேடையிலே நிற்கவேண்டுமென்று அவர் நம்மை அழைக்கிறார். போராட வேண்டும்; ஆம் பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக ஊக்கமாகப் போராட வேண்டும்…Mar 203.2

    உலகத்தின் முடிவை நாம் நெருங்கிகொண்டிருகும்பொழுது, துரைத்தனங்களும் அதிகாரங்களும் உயர்ந்த இடங்களிலே காணப்படுகின்ற, ஆவிக்குரிய துன்மார்க்கமும் சத்தியதிற்கெதிரான போராட்டத்தில் முழுமையாகக் கொண்டுவரப்படும்பொழுது, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதான அளவிற்கு சாத்தானின் வஞ்சிக்கும் வல்லமையானது மிகவும் அதிகரிக்கும்பொழுது, நாம் சாத்தானின் உபாய தந்திரங்களைப் பற்றி அறிவற்றவர்களாயிராதபடி, தெய்வீக அறிவின் ஒளியூட்டுதலின் மூலமாக,.நமது பகுத்தறிவானது கூர்மையாக்கப்பட வேண்டும். தேவன் பரிசுத்த தூதர்களின் ஒத்துழைப்பை நமக்குக் கொடுப்பதின் மூலம், நமது ஊழியமானது.. ஒரு மகிமையான வெற்றியை அடைவதை சாத்தியமாக்கியிருக்கிறார்; ஆனால், சிதறிக்கிடக்கும் ஒரு முயற்சியின்மூலம் வெற்றி கிடைக்காது. சபையிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் இணைந்து செயல்படும் செல்வாக்கே தேவையாயிருக்கிறது.Mar 203.3

    ஏனோக்கைப்போல் தேவனோடு நடந்து, கிறிஸ்துவ உலகிற்கு எடுத்துக்காட்டுகிற மனிதர்களே சபையின் இன்றையத் தேவையாகும். மேலான ஒரு படித்தரத்தை சபையின் அங்கத்தினர் அடைவது ஒரு அவசியமான காரியமாகும். சுயம் கண்ணிற்குக் காணப்படவே கூடாத அளவிற்கு முழ்கடிக்கப்பட வேண்டும். மேலும், அவர்களது ஜீவியங்களானது பின்வரும் பவுலாரின் வசனத்தை நிறைவேற்றுவதாக இருந்தது; “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20) என்ற காரியத்தை நிறைவேற்றுவதாயிருந்தால், அவர்களோடு தொடர்புகொள்ள பரலோகத்தின் தூதர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சபையின் வெளிச்சமானது உலகத்திற்கு தெளிவான ஒளிக்கதிர்களால் பளிச்சென்று கொடுக்கப்டுமுன்னர், சபையானது மேற்கூறப்பட்ட வகைச்சார்ந்த ஆண்களாலும் பெண்களாலும் இணைந்து உருவாக்கப்பட்டதாயிருக்க வேண்டும். நீதியின் சூரியனைப் பற்றிய நமது கருத்துக்கள், சுயத்தை நாடித்தேடுவதால் இருண்டு மங்கிகிடக்கின்றன. அநேகர் சுயத்தில் திளைப்பதால், தங்கள்மீது சாத்தானின் அடக்கியாளுதலை அனுமதித்து, இவ்வாறு கிறிஸ்து மறுபடியும் புதிதாக சிலுவையில் அறையப்படுகிறார்.Mar 203.4

    பரலோக இராஜ்ஜியத்தை ஆளுகின்ற பிரமாணங்களுக்கு உண்மையாயிருக்கிறார்களா அல்லது உண்மையற்றவர்களாக இருக்கிறார்களா என்பதை அவர் காணத்தக்கதாக, அனைவரும் சோதிக்கப்பட்டு, புடமிடப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாகும். இறுதிவரை சாத்தான் தன்னை ஒரு பொய்யான், ஒரு குற்றஞ்சாட்டுகிறவன், ஒரு கொலைகாரன் என்பதை வெளிப்படுத்தத்தக்கதாக தேவன் அனுமதிக்கிறார்; இவ்வாறு, தமது மக்களின் இறுதி வெற்றியானது மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும், மிகவும் மகிமை பொருந்தியதாகவும், நிறைவானதாகவும், முழுமை பெற்றதாகவும் தீர்மானிக்கப்படுகிறது.⋆Mar 204.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 204.2

    “நீ வருகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.” - உபாகமம் 28:6.Mar 204.3