Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மே

    தேவன் தமது மக்களை வழிநடத்துவார்! , மே 1

    “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது.”- ஏசாயா 43:2.Mar 241.1

    தேவனுக்கு பூமியிலே ஒரு சபை இருக்கிறது. அவர்கள் அவரது கற்பனைகளைக் கைக்கொள்கிற - அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாவர். இங்கொன்றும், அங்கொன்றுமாக நெறிகெட்டு அலைந்துதிரிபவர்களை அல்ல, ஒரு கூட்டம் மக்களை அவர் வழிநடத்துகிறார். Mar 241.2

    வேலை வெற்றி பெறாதோவென்று பயப்படவும், சந்தேகிக்கவும் அவசியமில்லை. ஊழியத்திற்கு தேவனே தலைமை வகிக்கிறார்; அவர் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி நிலைப்படுத்துகிறார். ஊழியத்தின் தலைமைப் பொறுப்பிலே, ஏதாவது சரிப்படுத்த வேண்டியது அவசியமானால், அவர் அதைக் கவனித்துக்கொள்வார்.ஒவ்வொரு தவறையும் சரிப்படுத்தும் பணியைச் செய்வார். தேவனுடையது அவசியமானால், அவர் மக்களை ஏற்றிச்செல்லும், அந்த மேன்மையான கப்பலை தேவன் துறைமுகத்திற்கு பத்திரமாகக் கொண்டுசேர்ப்பார் என்ற விசுவாசம் நமக்கிருக்கட்டும்.Mar 241.3

    அநேக ஆண்டுகளுக்கு முன்னர், மெயின் எனப்பட்ட இடத்திலுள்ள போர்ட்லேண்டிலிருந்து, பாஸ்டனுக்குக் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எங்கள்மீது புயல் வீசியது. பிரம்மாண்டமான அலைகள் எங்களை அங்குமிங்குமாக அலைக்கழித்தன. தொங்கிக்கொண்டிருந்த கொத்து விளக்குகள் கீழேவிழுந்தன. பெட்டிகள் பந்துகளைப்போன்று ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு உருண்டோடின. பயணிகள் பயந்து நடுங்கினார்கள். அநேகர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களாக அலறிக்கொண்டிருந்தார்கள்.Mar 241.4

    சற்று நேரம் சென்றபின்னர் மாலுமி உள்ளே வந்தார். மாலுமி ஓட்டுகின்ற சக்கரத்தை கையால் தொட்டு இயக்க ஆரம்பிக்கின்ற போது, கப்பல் தலைவன் அருகில் நின்று, அந்தக் கப்பல் வழி நடத்துகின்ற பாதைக்குறித்து தமது பயத்தை வெளிப்படுத்தினார். மாலுமி கப்பல் தலைவனை நோக்கி, கப்பலை ஓட்டுகின்ற இயக்கும் கருவியை நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளமுடியுமா? என்று வினவினார். கப்பல் தலைவன் அதற்கிணங்க அனுபவமில்லை என்று அவருக்கு தெரியும்; பின்னர், பிரயாணிகளில் சிலர் கவலைப்பட்டு, மாலுமி தங்களது கப்பலைப் பாறையின்மீது மோதியடித்துவிடுவார் என்று தாங்கள் பயப்படுவதாகக் கூறினார்கள். நீங்கள் கப்பலை ஓட்டுகிறீர்களா என்று மாலுமி அவர்களைக் கேட்டார்; ஆனால், அந்தக் கப்பலை ஓட்டும் கருவியை இயக்கி, தங்களாலும் கட்டுப்படுத்தமுடியது என்று அவர்களுக்குத் தெரியும்.Mar 241.5

    ஊழியம் ஆபத்திலிருப்பதாக நீங்கள் நினைக்கும்பொழுது, “ஆண்டவரே இயக்கம் கருவிக்கு அருகில் நின்று, குழப்பமான இந்த நிலையினுடாக எங்களை அழைத்துச் செல்லும். துறைமுகத்திற்கு பத்திரமாக எங்களைக் கொண்டு சேர்த்தருளும்” என்று ஜெபியுங்கள். ஆண்டவர் நம்மை வெற்றிகரமாக நடத்திச்செல்வார் என்று விசுவாசிப்பதற்கு நமக்குக் காரணம் இல்லையா?...Mar 242.1

    தேவனுடைய அனைத்து அருட்செயல்களாலும், எப்படி அவர் காரியங்களை நடப்பிக்கிறார் என்பதை, எல்லைக்குட்பட்ட உங்களது மனங்களால் விளங்கிக்கொள்ளமுடியாது. தேவனே தமக்குச் சொந்தமான வேலையைப் பொறுப்பேற்று நடத்தட்டும்.⋆Mar 242.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 242.3

    “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்…” - உபாகமம் 31:8.Mar 242.4