Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவைபோன்று சாத்தான் தோற்றமளித்தல் — 1, ஜூலை 16

    “நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு; ‘ நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும்’ சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.” — இயேசு, லூக்கா 21:8.Mar 393.1

    இந்தக் களத்திலே, அந்திக்கிறிஸ்து உண்மையான கிறிஸ்துவைப்போன்று தோன்றுவான். நமது உலகத்திலுள்ள நாடுகளிலே, தேவனுடைய பிரமாணமானது முற்றிலும் வெறுமையாக்கப்பட்டுவிடும். தேவனுடைய பரிசுத்தப் பிரமாணத்திற்கு விரோதமான கலகம் முற்றிலும் முதிர்ந்திருக்கும்; ஆனால், இந்தக் கலகத்தின் உணமையான தலைவனான சாத்தான், ஒரு ஒளியின் தூதனுடைய உடையைத் தரித்திருப்பான். மனிதர் வஞ்சிக்கப்பட்டு, அவனை தேவனுடைய இடத்தில் உயர்த்திவைத்து, அவனை தேவனாக்கி விடுவார்கள்; ஆனால், சர்வவல்லவர் குறுக்கிடுவார். மருள விழுந்துபோன சபைகள் சாத்தானை உயர்த்துவதிலே இணையும் பொழுது, அவர்கள் மீது பின்வரும் தீர்ப்பு அறிவிக்கப்படும்; “ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்” - வெளிப்படுத்தல் 18:8.Mar 393.2

    ஒளியின் தூதனைப்போன்று மாறுவேடத்தில் அவன் ( சாத்தான்) பூமி முழுவதும் அதிசயங்களை நடப்பிக்கிறவனாக நடந்துதிரிவான். அவனது மொழிநடையிலே மிக உயர்ந்த ஆர்வமூட்டும் கருத்துக்களை மக்கள்முன் வைப்பான். அவனால் நல்ல வார்த்தைகள் பேசப்படும; நல்ல செயல்கள் செய்யப்படும்; கிறிஸ்துவைப் போன்று தன்னை அப்படியே உருவகப்படுத்திக் காட்டுவான்; ஆனால், ஒரு காரியத்தில் ஒரு குறிப்பிட்ட வித்தியாசம் காணப்படும்; அதாவது, தேவனுடைய பிரமாணத்தினின்று மக்களை விலகச்செய்வான்.Mar 393.3

    ஓய்வுநாளானது வாரத்தின் ஏழாம் நாளினின்று முதலாம் நாளுக்கு மாற்றப்பட்டாயிற்று என்று வலியுறுத்திக் கூறுவான். வாரத்தின் முதல் நாளின் ஆண்டவனான அவன் ( சாத்தான்), தனக்கு உண்மையாக இருப்பவர்களைக் கண்டறியத்தக்கதாக-ஒரு பரீட்சையாக-போலியான ஓய்வுநாளை முன்னிலைப்படுத்துவான்.Mar 394.1

    பரலோகத்தின் மகிமையும் கடந்த களத்தில் நடைபெற்ற உபத்திரவங்களும் மீண்டும் வந்து ஒன்றாக இணையும்போது, பூமியிலே அப்பொழுது உயிரோடு இருக்கும் தேவனுடைய மக்களின் அனுபவம் எப்படி இருக்குமென்று, அதைப்பற்றிக் கருத்துக் கூறுவது கூடாத காரியமாகும். தேவ சிங்காசனத்தினின்று புறப்பட்டு வருகிற வெளிச்சத்திலே அவர்கள் நடப்பார்கள். பரலோகத்திற்கும் இப்பூவுலகத்திற்கும் இடையே தூதார்களின்மூலமாக தொடர்பு, தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். தீயதூதர்களால் சூழப்பட்டிருக்கும் சாத்தான் தன்னை தேவனென்று உரிமைகோரிக் கொண்டு, கூடுமானால் தெரித்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்துப்போடத்தக்கதாக, அனைத்துவகையான அற்புதங்களையும் செய்வான். தேவனுடைய மக்கள் அற்புதங்களைச் செய்வதின்மூலம், தங்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏனெனில், செய்யப்படுகின்ற அற்புதங்களுக்குப்பதிலாக, சாத்தான் அதுபோலவே ஒரு போலியைச் செய்துகாட்டிவிடுவான். சோதிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்ட மக்கள் யாத்திராகமம் 31:12-18ல் சொல்லப் பட்டுள்ள அடையாளத்தில், தங்களது வல்லமையைக் கண்டு கொள்வார்கள். ” எழுதப்பட்டிருக்கிறதே என்ற ஜீவனுள்ள வார்த்தையிலே தங்களது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த இரு அடித்தளத்தில் மாத்திரமே அவர்கள் பாதுகாப்பாக நிற்க முடியும்.”⋆Mar 394.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 394.3

    ” இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துக்கொள்வேன்” - ஏசாயா 54:7.Mar 394.4