Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இயேசு பெருமான் குழந்தையாக பிறந்தபொழுது...!, ஜனவரி 3

    “...பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே...?”என்றார்கள். - மத்தேயு 2:1,2.Mar 5.1

    மகிமையின் இராஜா மானிடனாவதற்காக, மிகவும் மதிப்பற்ற நிலைக்கு தம்மைத் தாழ்த்தினார். பரலோக சேனை அனைத்திலும் தொழப்படும் அந்த நிலையில், பரலோக மன்றங்களில் அவரது மாட்சிமையையும் மேன்மையையும் ஏற்கனவே கண்டிருந்த தூதர்கள், மிகவும் அவலமான தாழ்நிலையில் தங்களது தெய்வீகத் தளபதியைக் கண்டபோது, பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள்.Mar 5.2

    யூதர்கள் தங்களது துன்மார்க்கமான செயல்களினால், தேவனை விட்டுப்பிரிந்து, வெகுதூரம் சென்றுவிட்ட படியினால், இரட்சகர் பாலகனாக வருகைதரப் போகும் செய்திகளை, தூதர்கள் அவர்களுக்கு அறிவிக்கமுடியாமற்போய்விட்டது. தேவன் தம்முடைய சித்தத்தைச் செயல்படுத்தத்தக்கதாக, கிழக்கிலுள்ள ஞானிகளைத் தெரிந்துகொண்டார்...Mar 5.3

    வானங்கள் வெளிச்சமிகுதியினால் ஒளிர்ந்தது. அந்த ஒழி வெள்ளமானது, தாழ்மையான மேய்ப்பர்களுக்கு, கிறிஸ்துவின் வருகையைக் கூறியறிவித்த பரலோக சேனையை, முழுவதுமாகப் போர்த்தியிருப்பதை ஞானிகள் கண்டார்கள்.Mar 5.4

    வெகுதூரத்தில் காணப்பட்ட-சுடரோளியாகப் பிரகாசிக்கின்ற தூதர்களின் குழு, ஒரு ஒளிர்கின்ற நட்சத்திரம்போல் தோன்றியது. தங்கள் இதற்குமுன் என்றும் கண்டிராத-வானங்களிலே ஓர் அடையாளம்போன்று தொங்கிக்கொண்டிருந்த-வழக்கத்திற்கு மாறாகத் தோற்றமளித்த-அம்மாபெரும் பிரகாசமான நட்சத்திரமானது அவர்களது கவனத்தை ஈர்த்தது...அந்த நட்சத்திரம் அவர்களை எங்கு வழிநடத்திச்செல்வதுபோலத் தோன்றியதோ, அந்த வழியிலே அந்த ஞானிகள் பயணித்தார்கள். எருசலேம் பட்டணத்தை அவர்கள் நெருங்கியபோது, அந்த நட்சத்திரம் இருளினால் மறைக்கப்பட்டுப்போனதால், அதன்பின்னர் அது அவர்களை வழிநடத்தவில்லை. அவர்கள் மேசியாவின் வருகையைக்குறித்து தங்களுக்குள் விவாதித்து, இந்த மாபெரும் சம்பவத்தைப்பற்றி, யூதர்கள் நிச்சயம் அறியாதிருக்கமுடியாது; அதாவது, நிச்சயம் அறிந்திருக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்தார்கள். அதைக்குறித்து எருசலேமின் சுற்றுப்புறங்களில் அவர்கள் விசாரித்தனர்.Mar 5.5

    மேசியாவின் வருகையைக்குறித்த காரியத்தில், வழக்கத்திற்கு மாறாக, எவ்விதமான ஆர்வமும் அங்கு காணப்படாததால், அதைக் குறித்து ஞானிகள் ஆச்சரியமடைகிறார்கள்... கிறிஸ்துவின் வருகை பற்றிய இம்மாபெரும் சம்பவத்தின் வாய்ப்புநலன்களைக்குறித்து, யூதர்கள் எவ்விதமான அக்கறையும் மகிழ்ச்சியுமின்றிஇருப்பதைப் பார்த்து ஞானிகள் வியந்தனர்.Mar 6.1

    நமது காலத்திலுள்ள சபைகள் உலகப்பிரகாரமான செல்வாக்கை நாடித்தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்குரிய காரியங்களில் யூதர்கள் எப்படியிருந்தனரோ அதே போன்று, இப்பொழுது கிறிஸ்து சீக்கிரம் மறுபடியும் வரப்போகிறார் என்பதைக் காட்டுகின்ற தீர்க்கதரிசனங்களின் வெளிச்சத்தைக் காணவும், அவைகள் நிறைவேறுதலை அடைந்ததற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளவும் மனதில்லாதிருக்கிறார்கள். எருசலேமிலே மேசியாவின் உலகியல் சார்ந்த-வெற்றிவாகை சூடுகின்ற-ஆளுகையை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள். இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டிருப்பவர்கள், சபையின் உலகப்பிரகாரமான வாய்ப்புவளங்களையும், இவ்வுலகின் மனந்திரும்புதலையும், இந்த உலகம் சார்ந்த ஆயிரம் ஆண்டுகளின் சந்தோஷத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.⋆Mar 6.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 6.3

    “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். — லூக்கா 2:14.Mar 6.4