Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அபாயத் தொனியை முழக்க வேண்டும்!, ஆகஸ்டு 19

    “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” - நீதிமொழிகள் 3:6.Mar 461.1

    நமது எல்லா வழிகளிலும் நாம் தேவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நமது வழிகளை நடத்துவார். தாழ்மையான இதயத்தோடு அவரது வார்த்தையின் அறிவுரையைக் கேட்டு, அவரது ஆலோசனையை வேண்டி, அவர் சித்தத்திற்கு நம்முடைய சித்தத்தை ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவன் இல்லாமல் நாம் எதையும் செய்யமுடியாது.Mar 461.2

    தேவனுடைய மக்களை உலகத்தினின்று பிரித்துக்காட்டுகின்ற ஒரு அடையாளமாக ஓய்வுநாள் இருக்கிறது. எனவே, அந்த உண்மையான ஓய்வுநாளை மதித்து, அதன் பாதுகாப்பிற்காக நாம் நிற்பது நமக்கு ஒரு மேன்மையான காரணமாக அமைந்திருக்கிறது. இந்த உலகமானது இந்த ஓய்வுநாளைப் பயனற்றதாக ஆக்கியதால், அந்த ஒரே காரணத்தினால், தேவனுடைய மக்கள் அதிக மேன்மையைக் கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தையின்மீது அவிசுவாசமுள்ளோர் நிந்தனைகளை வாரி வீசும்பொழுது, விசுவாசமுள்ள காலேபுகள் அழைக்கப்படுகிறார்கள்; அப்பொழுது, அவர்கள் தங்களது கடமையின் பணி நிலையிலே, உறுதியாக-பகட்டான விளம்பரமின்றி, இகழப்பட்டாலும் விலகிச்செல்லாமல் நிற்பார்கள். விசுவாசமற்ற வேவுகாரர்கள் காலேபை தீர்த்துக்கட்டி விடவேண்டுமென்று ஆயத்தமாக நின்றார்கள். பொய்யான தகவலைக்கொண்டு வந்தவர்களின் கரங்களிலே கற்கள் இருப்பதைக் கண்டார்; ஆனால், அந்தக் காரியம் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அவரிடத்தில் ஒரு தூது இருந்தது; அதை அவர் எடுத்துச்செல்வார். தேவனுக்கு உண்மையாக இருப்பவர்கள் இதைப்போன்ற குணத்தையே வெளிப்படுத்துவார்கள்.Mar 461.3

    சங்கீதக்காரன்: “நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்” (சங்கீதம் 119:126,127) என்று கூறுகிறார். மனிதர் இயேசுவின் பக்கத்தில் நெருங்கிச் சேரும்பொழுது, விசுவாசத்தினாலே கிறிஸ்து அவர்களின் இதயங்களில் வாசஞ்செய்யும்போது, தேவனுடைய கற்பனைகளுக்காக அவர்கள் கொண்ட அன்பானது, அவரது பரிசுத்தக் கட்டளைகளின் மீது, இந்த உலகம் எவ்வளவு அவமதிப்பைக் குவிக்கின்றதோ, அந்த விகதத்தின்படி வலிமையாக வளரும். இந்தச் சமயத்தில் தான் எழுத்துக்கள்மூலமாகவும் பிரசங்கங்கள் மூலமாகவும் உண்மையான ஓய்வுநாளைப்பற்றிய செய்தியானது, மக்கள் முன்பாகக் கொண்டு வரப்படவேண்டும். நான்காம் கட்டளையும் அதை ஆசரிப்பவர்களும் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்படும்பொழுது, விசுவாசமுள்ளவர்கள் தங்களது விசுவாசத்தை மூடிமறைக்க இது வேளையல்ல என்பதை உணர வேண்டும்; மேலும், மூன்றாம் தூதனின் தூதும் தேவனுடைய கட்டளைகளும் இயேசுவின்மேலுள்ள விசுவாசமும் பதித்துவைக்கப்பட்டுள்ள அந்தக் கொடியை, விரித்துப் பறக்க வைப்பதின்மூலம், யேகோவாவின் பிரமாணத்தை உயர்த்தவேண்டும்.Mar 461.4

    இயேசுவில் இருப்பதுபோன்று, சத்தியத்தை வைத்திருப்பவர்கள், அக்கிரமத்தின் இரகசியத்தால் செய்யப்படும் வேலைக்கு மெளனத்தால்கூட ஒப்புதல் தெரிவிக்காமல் இருக்கவேண்டும். அபாயத் தொனியை தெரிவிக்கும் முழக்கத்தை ஒருபோதும் நிறுத்தாமல் இருக்கவேண்டும்…சத்தியம் மறைத்துவைக்கப்படக்கூடாது; அது மறுக்கப்படவுங்கூடாது. அது மாறுவேடத்திலும் காட்டப்படவுங்கூடாது. பதிலாக, சத்தியத்தை முழுநிறைவோடு ஒத்துக்கொள்ள வேண்டும்; மேலும் அதை தைரியமாகக் கூறியறிவிக்கவும் வேண்டும்.⋆Mar 462.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 462.2

    “பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானை கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.” - நீதிமொழிகள் 19:25.Mar 462.3