Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவே நியாயாதிபதி!, நவம்பர் 29

    “...பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச்செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” - யோவான் 5:22.Mar 665.1

    கிறிஸ்து தாம் செய்து போதனைகளால், வரப்போகிற நியாயத்தீர்ப்பின் நிச்சயத்தை அனைவரும் அறியச்செய்யும் நோக்கத்தோடு, மனிதரின் மனங்களிலே பதியவைக்க விரும்பினார். இது ஒரு சில நபருக்கு மாத்திரமோ, அல்லது ஒரு நாட்டுக்கு மாத்திரமோ நடக்கப்போகிற நியாயத்தீர்ப்பு அல்ல. முழு உலகத்திற்கும், கணக்குக் கொடுக்கத் திராணியுள்ள மனித குலத்துக்கே நடக்கவிருக்கிற நியாயத்தீர்ப்பாகும். மனிதன் தேவன்மேல் வைத்த அன்பு, அவனுடைய நேர்மை, அவன் செய்த ஊழியம் எல்லாம் உச்சநிலை அளவிற்கு கனப்படுத்தப்ப்படும்படிக்கு, அனைத்து உலகங்களின் முன்பாகவும் இந்த நியாயத்தீர்ப்பு நடைபெறும். கணத்திற்கும் மகிமைக்கும் குறைவிருக்காது...தேவனுடைய கற்பனைகள் அதின் கெம்பீரத்தோடு வெளிப்படுத்தப்படும். பரிசுத்த பிரமாணங்களுக்கு எதிராக அவைகளை ஏற்க மறுத்து கலகஞ்செய்துவந்தவர்கள், தாங்கள் புறக்கணித்தது-கனவீனப்படுத்தினது-காலின்கீழ் போட்டுமிதித்தது-தேவனுடைய பத்துக்கட்டளைகளே. அதாவது, தேவனுடைய நிரயாயப்பிரமாணமே! அதுதான் அவரது குணத்தின் படித்தரமாகவும் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வார்கள்...Mar 665.2

    இந்த உலகத்தின் காரியங்களில், பரலோக அண்டசராசரமும் மிகவும் கவனஞ்செலுத்திக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இயேசு, இந்த உலகத்தின் ஆத்துமாக்களை-குடிமக்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றுவதற்காக, விலைமதிக்கமுடியாத கிரையத்தைச் செலுத்தியிருக்கிறார்...Mar 665.3

    தேவன் நியாயத்தீர்ப்பின் வேலை அனைத்தையும் தமது குமாரனிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். எந்த விவாதங்களுக்கும் இடமின்றி, அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக இருக்கிறார்.Mar 665.4

    மனித சரித்திரத்திலே அதிகமான பாடு அனுபவித்தவரே, உலகம் முழுவதையும் நியாயந்தீர்க்கவேண்டுமென்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அவர்தான் மனிதனை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றும்படி, பரலோக மன்றத்திலிருந்து இறங்கிவந்தவர்... பூமியிலுள்ள நீதிமன்றத்தின்முன் நிற்கத்தக்கதாக தம்மை ஒப்புக்கொடுத்து, சிலுவை மரணத்தின் அவமானத்தை அனுபவித்த அவர் மாத்திரமே, வெகுமதி அல்லது தண்டனை என்ற தீர்ப்பை அறிவிக்கத் தகுதிபெற்றவர். துன்பத்திற்கும், சிலுவையின் அவமானத்திற்கும் இந்த பூமியிலே தம்மை ஒப்புக்கொடுத்தவர்; அதற்கான முழு ஈட்டையும் தேவனுடைய ஆலோசனைக் கூட்டத்தில் பெற்றுக்கொள்வார். பரிசுத்தவான்களின் இராஜா என்று பரலோகம் அனைத்தும் அண்டசராசரமும் அவரை அங்கீகரிக்க, அவர் சிங்காசனத்தில் அமருவார். இரட்சிப்பின் வேலையை அவர் துவக்கிவைத்தார். தாம் துவக்கின வேலையை அவரால் முடிக்க முடியும் என்பதை பரலோகக் குடும்பத்துக்கும், விழுந்துபோகாத உலகங்களுக்கும் அவர் காட்டினார்...Mar 666.1

    கடைசி நியாயத்தீர்ப்பு நாளிலே, பரிசுத்தவான்களும் பாவிக்களுமாக அனைவரும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை உயிருள்ளோர் அனைவருடைய நியாயாதிபதியாகவும் அங்கிகரிப்பார்கள்... கடைசி நியாயத்தீர்ப்பின் நாளாகிய அந்நாள் பயங்கரமாக இருக்கும்... மேலும் நம்முடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயப்படுத்திக்கொள்வதற்கான கிருபையின் காலமும், சந்தர்ப்பங்களும், சிறப்புரிமைகளும் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நம்மேல், நாம் உண்மையான எஜமானர்களாயிருக்க, தேவன் நமக்குச் கொடுத்திருக்கிற தாலந்துகள் அனைத்தையும், இத்தகைய அருமையான நேரத்தையும், நாம் எப்படிப்பட்ட விதத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்.⋆Mar 666.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 666.3

    பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்...” - மத்தேயு 12:50.Mar 666.4