Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாழ்க்கையில் விதைப்பதும்-அறுப்பதும்! , மார்ச் 15

    “அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அசையும்படி நாடு.” - 2 தீமொத்தேயு 2:22.Mar 147.1

    அன்புள்ள இனிய நண்பர்களே! உங்களது இளமைப் பருவத்தின் இன்பக்களியாட்டுக்களில் செலவிடுடப்படும் சிறிதளவு நேரம் உங்களது வாழ்க்கை முழுவதையும் கசப்பாக மாற்றத்தக்கதான விளைவுகளைக் கொண்டுவந்துவிடும். சிந்தனையற்ற விதத்தில் செலவிடப்பட்ட ஒரு மணி நேரம், சோதனைக்கு ஒரே ஒரு முறை இசைந்துகொடுத்தல் ஆகியவை உங்களது வாழ்க்கையின் முழு போக்கையுமே மாற்றி, தவறான வழியில் செலுத்திவிடும். நீங்கள் வாலிபப் பருவத்தை அனுபவிப்பது ஒருமுறை மாத்திரமே. அதை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் அந்தப் பகுதியை கடந்துசென்றுவிட்டீர்களானால், உங்களது தவறுகளைச் சரிப்படுத்தத்தக்கதாக, மீண்டும் ஒருபோதும் திரும்பிவரத் தேவையில்லை. Mar 147.2

    சாத்தான் ஒளியின் தூதனுடைய வேடத்தைத் தரித்துக்கொண்டு, தனது புறப்பகட்டான சோதனைகளோடு வாலிபர்களிடத்திற்கு வந்து, அவர்கள் தங்களது கடமையைச் செய்யாதபடி, படிப்படியாக அவர்கள்மீது வெற்றிகொள்கிறான். அவன் குற்றஞ்சாட்டுகிறவன், வஞ்சிக்கிறவன், பொய்யன், உபத்திரவங்கொடுக்கிறவன், கொலை பாதகன் என்று வருணிக்கப்படுகிறான்... உங்களைச் சோதிப்பது சாத்தானின் செயல்; ஆனால், அதற்கு விட்டுக்கொடுப்பது உங்களது சொந்தத் செயலே ஆகும். சோதனையால் சத்திக்கப்படும் ஒருவனை மீறுதலிற்குட்படுத்த, சாத்தானின் சேனை அனைத்தும் சேர்ந்த வல்லமையினாலும் செய்யமுடியாது. பாவஞ்செய்வதற்கு எந்தச் சாக்குப்போக்குமே கிடையாது. சோதனை ஒரு பாவம் அல்ல. இயேசு பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்தார். அவரும் நம்மைப்போல எல்லாவகைகளிலும் சோதிக்கப்பட்டார்; மேலும், மனிதன் ஒருபோதும் அவ்வாறு சகிக்கப்பட அழைக்கப்படாத அளவிற்கு, அத்தகைய பலமும் வல்லமையுமுள்ள சோதனைகளால் சோதிக்கப்பட்டார். நாம் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றிப் போகத்தக்கதாக, நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார். நம் சுயத்தின்மீது நம்பிக்கைவைத்து, அல்லது சுயநீதியுடையவர்களாகவே இருப்போமானால், அந்த சோதனைக் கடியில் விழும்படி விட்டுவிடப்படுவோம்; ஆனால் இயேசுவை நோக்கிப்பார்த்து, அவரில் நம்பிக்கை வைப்போமானால், யுத்த களத்திலே எதிரியை மேற்கொண்ட வல்லமையை நமது உதவிக்கு அழைத்துக்கொள்வோம். அவர் ஒவ்வொரு சோதனையோடும் அதினின்று தப்பித்துக் கொள்வதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுப்பார். ஒரு வெள்ளத்தைப்போன்று சாத்தான் வருகின்ற போது, ஆவியின் பட்டயத்தொடு அவனுடைய சோதனைகளை நாம் சந்திக்க வேண்டும். இயேசு நமக்கு உதவியாளராக இருந்து, அவனுக்கு எதிராக ஒரு கொடியை உயர்த்துவார். Mar 147.3

    நம்மிலுள்ள ஒரு தவறான குணக்கூறு, நெஞ்சார நேசிக்கப் பட்ட பாவம் நிறைந்த ஒரு விருப்பம், சுவிசேஷத்தின் அனைத்து வல்லமையையும் இறுதியிலே பயனற்றதாக்கிவிடும்...கடமையின் வேதனைகள், பாவத்தினால் கிடைக்கும் சந்தோஷங்கள் ஆகிய கயிறுகளால் சாத்தான் மனிதரைக் கட்டி வைக்கிறான். ஒரு தவறான செயலைச் செய்வதைவிட, மரிப்பதே நல்லது எனத் தெரிந்துகொள்பவர்கள் மாத்திரமே உத்தமமானவர்களாக இருப்பார்கள்.Mar 148.1

    சாத்தானின் மாபெரும் சக்தியுள்ள சோதனைகள்கூட வாலிபர்களை தங்களது பற்றுறுதியினின்று இழுத்துக்கொள்ளாத அளவிற்கு, வாலிபர்கள் திடமான கொள்கையுடையவர்களாக இருக்க முடியும்.⋆ Mar 148.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 148.3

    “நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்.” -- நீதிமொழிகள் 11:27.Mar 148.4