Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மீதியானவர்களும் முத்திரையிடப்படுதலும்!, ஜூலை 24

    “அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி : கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா” என்றார். — சகரியா 3:2.Mar 409.1

    மாபெரும் இக்கட்டிற்குள்ளும் வேதனைக்குள்ளும் மீதமான சபை கொண்டுவரப்படும். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மீதுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொண்டவர்கள் வலுசர்ப்பம், அதின் கூட்டம் அனைத்தின் கோபத்தையும் உணருவார்கள். சாத்தான் இந்த உலகின் குடிமக்களை தன்னுடையவர்கள் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறான். மருளவிழுந்துபோன சபைகள் அனைத்தின்மீதும் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டுவிட்டான்; ஆனால் அவனது ஆளுகையை சிறு கூட்டம் எதிர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களை இந்த பூமியினின்று அகற்றிப் போட்டானானால், அவனது வெற்றி நிறைவைப் பெற்றுவிடும். இஸ்ரவேலரை அழித்துப்போடுவதற்காக, அஞ்ஞான சாதிகளின்மீது அவன் செல்வாக்கைப்பயன்படுத்தியதுபோல், வெகுசீக்கிரத்தில்-வருங்காலத்தில் தேவனுடைய மக்களை அழித்துப்போடுவதற்காக, துன்மார்க்கமான வல்லமைகளை கிளர்ந்தெழச்செய்வான். தெய்வீகப்பிரமாணத்தின் மீறுதலாக, மானிடச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியத்தக்கதாக, அனைவருக்கும் கட்டளை பிறப்பிக்கப்படும். தேவனுக்கும் கடமைக்கும் உண்மையாக இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுக்கப்படும்; பழித்துரைக்கப்பட்டு, விலக்கிவைக்கப்படுவார்கள். அவர்கள் பெற்றோராலும் சகோதரர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள்.Mar 409.2

    கிறிஸ்துவின் இரத்தத்தில் மாத்திரமே அவர்களது ஒரே நம்பிக்கை இருக்கும். அவர்களது ஜெபமே அவர்களது ஒரே பாதுகாப்பு. யோசுவா தூதனுக்கு முன்பாகக் கெஞ்சி மன்றாடியது போல, மீதியான சபையும் நொறுங்குண்ட இருதயத்தோடும், ஊக்கமான விசுவாசத்தோடும் தங்களது வழக்கறிஞகரான இயேசுவின்மூலமாக, மன்னிப்பிற்காகவும் விடுதலைக்காகவும் கெஞ்சி மன்றாட வேண்டும்...தேவனுக்குமுன்பாக சாத்தான் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வலியுறுத்துகிறான், அவர்கள் தங்களது பாவங்களினால் தெய்வீகப் பாதுகாப்பை இழந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் மீறுதல்களுக்கு உட்பட்டவர்களாதலால் அவர்களை அழிப்பதற்கான உரிமையை அவரிடம் வேண்டுகிறான். Mar 409.3

    கிறிஸ்துவின் பின்னடியார்கள் பாவஞ்செய்திருந்தபோதிலும், தீமையின் கட்டுப்பாட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் தங்களது பாவங்களை அறிக்கைசெய்து, அகற்றிவிட்டார்கள். பாவத்திற்காக மனம்வருந்தி-தாழ்த்தி ஆண்டவரைத் தேடினார்கள்; எனவே, தெய்வீக வழக்கறிஞர் அவர்களுக்காக மன்றாடுகிறார்...Mar 410.1

    தேசத்திலே நடக்கின்ற அருவருப்புகளுக்காக, தேவனுடைய மக்கள் பெருமூச்சுடன் அழுதுகொண்டிருக்கிறார்கள். தெய்வீகப்பிரமாணத்தை காலின்கீழ்போட்டு மிதிப்பதினால் வரும் ஆபத்தைப்பற்றி துன்மார்க்கருக்குக் கூறி, அழுகையோடு எச்சரிக்கிறார்கள். தங்களது சொந்த மீறுதலிற்காக, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத துக்கத்தோடு, ஆண்டவருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறார்கள். துன்மார்க்கர் அவர்கள் அனுபவிக்கும் துக்கத்தைப்பார்த்து கேலிசெய்கிறார்கள். அவர்களது பக்திவிநயமான வேண்டுதல்களைக் கேட்டு, பரிகசிக்கிறார்கள். இவைகளையெல்லாம் அவர்களது பெலவீனம் என்று சுட்டிக்காட்டி, ஏளனமாக இகழ்ச்சிசெய்கிறார்கள் ஆனால், தேவனுடைய மக்கள் அனுபவிக்கும் கடுந்துயரும் அவர்களது தாழ்ச்சியும், அவர்கள் பாவத்தின் பலநாள் இழந்துபோன மேன்மையான குணத்தையும் வல்லமையையும் மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கும். சாத்தான் தனது குற்றச்சாட்டுகளை வலியுறுத்திக் கூறும்பொழுது, கண்ணுக்கு மறைவாக இருந்த பரிசுத்த தேவதூதர்கள், அங்குமிங்கும் நடந்துசென்று, ஜீவனுள்ள தேவனின் முத்திரையை அவரது மக்கள்மீது வைத்தார்கள்.⋆Mar 410.2

    வாக்குத்தத்த வசனம் : Mar 410.3

    “உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம் பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்ல வேண்டும்,” - உபாகமம் 20:4.Mar 410.4