Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய கண்கள் அவரது மக்கள்மீது பதிக்கப்பட்டிருக்கிறது!, செப்டம்பர் 23

    “அந்தப்படியே தேவன் தம்மைநோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்” என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்… - லூக்கா 18:7,8.Mar 531.1

    இக்கட்டுக்காலத்திலே பயத்தாலும், வேதனையாலும் அலைக்கழிக்கப்படும்பொழுது, அறிக்கைசெய்யப்படாத பாவத்தோடு இருப்பார்களேயானால், சோதனைகளில் விழுந்துவிடுவார்கள். நம்பிக்கையிழந்து விசுவாசத்தை விட்டுவிடுவார்கள். விடுதலைக்காக ஆண்டவரிடத்திலே விண்ணப்பஞ்செய்யும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமற்போய்விடும்; ஆனால், தங்களுடைய தகுதியற்ற நிலையைக் குறித்து ஒரு ஆழ்ந்த உணர்வு அவர்களுக்கு இருக்கும்போது, வெளிப்படுத்தத்தக்கதான அளவிற்கு மறைக்கப்பட தவறுகள் அவர்களிடத்தில் இருக்காது. நியாயத்தீர்ப்பிற்கு முன்னரே, அவர்களது பாவங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவைகளை அவர்கள் நினைவிற்குக்கூட கொண்டுவர முடியாது…Mar 531.2

    கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், ஆயத்தமில்லாதவர்களாக அந்தக் கடைசி பயங்கரமான போராட்டத்திற்குள் பிரவேசிக்கிறபொழுது, நம்பிக்கையை இழந்தவர்களாக, வேதனையோடு தங்கள் பாவங்களை அறிக்கையிடுவார்கள். துன்மார்க்கரோ, அவர்கள் படுகின்ற வேதனைகளைக்குறித்து எக்களிப்பார்கள்…Mar 531.3

    வஞ்சிக்கப்பட்டு — சோதிக்கப்பட்டு - பாவத்திற்குள்ளாகச் செல்லத்தக்கதாக ஏமாற்றப்பட்டவர்கள், உண்மையான பாவ அறிக்கையோடு அவரிடத்தில் திரும்புவார்களானால், அவர்களை அவர் தள்ளமாட்டார் என்பதற்கு யாக்கோபின் வரலாறும் ஒரு நிச்சயத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மக்களை அழித்துப்போட சாத்தான் வகைதேடும்போது, அத்தகைய ஆபத்து வேளையிலே அவர்களைப் பாதுகாத்துத் தேற்றுவதற்காக, தேவன் தம்முடைய தூதர்களை அனுப்புவார். சாத்தானுடைய தாக்குதல்கள் மூர்க்கமானதாகவும், திட்டமிடப்பட்டதாகவுமிருக்கும். அவனது வஞ்சகங்கள் பயங்கரமானதாயிருக்கும்; ஆனாலும், ஆண்டவருடைய கண்கள் அவருடைய பிள்ளைகள்மேல் வைக்கப்பட்டிருக்கும்; அவர் செவிகள் அவர்களுடைய கூக்குரலைக் கவனித்துக் கேட்கும். அவர்களுடைய உபத்திரவம் மிகவும் பெரியது. அவர்களைச்சுற்றி எரிகிற அக்கினி, அவர்களை முழுவதும் எரித்துப் போடுவதைப் போலத் தோன்றும்; ஆனால் அக்கினியால் புடமிடப்பட்ட தங்கத்தைப் போல, புடமிடுகிறவர் (தேவன்) அவர்களைப் புடமிட்டு வெளியே கொண்டு வருவார். பயங்கரமான அந்த சோதனையின் காலத்தில் அவர்கள்மேல் ஆண்டவர் பாராட்டுகிற அன்பு, அவர்களுடைய செழிப்பிலே அவர் காட்டின அன்பைப்போன்றதாகவே இருக்கும். புடமிடும் குகையிலேவைத்து, நெருப்பிலே அவர்களைப் புடமிட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்துவின் சாயல் அவர்களில் பரிபூரணமாகப் பிரதிபலிக்கத்தக்கதாக, இந்த பூமிசார்ந்த பற்றுகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட வேண்டும்; சுயம் அவர்களை விட்டுப் போகவேண்டும்.Mar 531.4

    சோர்வையும், தாமதத்தையும், பசியையும் தாங்கிக்கொள்கின்ற விசுவாசமே, நம்முன் இருக்கிற வேதனையான, சோதனை நிறைந்த காலத்திலே, நம்மிடம் இருக்கவேண்டிய விசுவாசம். அதாவது மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டாலும், தளராத விசுவாசமாக இருக்கும். அத்தகைய காலத்திற்கு நாம் ஆயத்தப்படும்படிக்கே கிருபையின் காலம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது… யாக்கோபைப்போல, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களைப் பிடித்துகொண்டு, உண்மையோடு விடாப்பிடியாக அவன் இருந்ததுபோல-அவன் வெற்றியடைந்ததுபோல-அவர்களும் வெற்றியடைவார்கள்.⋆Mar 532.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 532.2

    “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.” - சங்கீதம் 107:8,9.Mar 532.3