Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புதிய பூமியில் நமது செயல்பாடுகள்!, டிசம்பர் 18

    “வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறிருவர் கனிபுசிக்கிறதுமாக இருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்க்களிருக்கும். நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” - ஏசாயா 65:21,22.Mar 703.1

    நாம் இறுதி வெற்றியை பெறும்பொழுது, நமக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட வாசஸ்தலங்களை நாம் பெற்றுக்கொள்ளும்பொழுது, நாம் சோம்பலாக, ஒரு வேலையும் செய்யாமல் ஓய்ந்து, இனிமையாக இளைப்பாறுவோம் என்று எண்ணக்கூடாது.Mar 703.2

    ஆதாமிற்கும் ஏவாளிற்கும் ஆதியில் மகிழ்ச்சியைக் கொடுத்த அந்த வேலையிலும் இன்பத்திலுந்தான், புதிய பூமியில் மீட்கப்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். தோட்டத்திலும், வயல்வெளிகளிலுமாயிருந்த ஏதேனின் வாழ்கை, மீண்டுமாக வாழப்படும். “வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சை தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறிருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல, என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளில் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்.” - ஏசாயா 65:21,22.Mar 703.3

    முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட, நாங்கு தூண்களை ஆதாரமாகக்கொண்ட, வெள்ளிபோன்று பிரகாசமான தோற்றமுடைய, மிகவும் மகிமையான வீடுகளை அங்கே நான் கண்டேன். பரிசுத்தவாங்கள் அவற்றைச் சுதந்தரிப்பார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு தங்க அலமாரி இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் வீடுகளுக்குள் சென்று, தங்கள் ஜொலிக்கும் கிரீடங்களை அந்த அலமாரியில் கழற்றிவைத்துவிட்டு, தங்கள் வீடுகளுக்கு அருகேயிருந்த வயல் வெளிகளில் வேலைசெய்யச் சென்றனர். நாம் இப்போது செய்கிற வேலையைப்போல் அல்ல; அல்லவே அல்ல. அவர்கள் தலைகளைச்சுற்றி மகிமையான ஒளி பிரகாசித்தது. அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுத்துக்கொண்டிருந்தார்கள்.Mar 703.4

    நமது ஒவ்வொரு செயல்திறனும் விருத்திசெய்யப்படும்; ஒவ்வொரு ஆற்றலும் வளர்ந்து பெருகும். அதிக அறிவாற்றல் பெறுவதால், நாம் களைப்படைவதுமில்லை; நாம் சக்தியிழந்து சோர்ந்துபோவதுமில்லை; அங்கே மகத்துவமான வேலைகள் நடத்தப்படும். உயரிய நாட்டங்கள் எட்டப்படும். மேலான நோக்கங்கள் நிறைவடையும்; தொடர்ந்து இதற்கும் மேலான புது உயரங்களை அடைய, புது மகத்துவங்களை இரசிக்க, இன்னமும் அறியாத உண்மைகளை விளங்கிக்கொள்ள, புதுப்புது காரியங்கள் சிந்தைக்கும்-ஆத்துமாவிற்கும்-சரீரத்தின் வல்லமைகளுக்கும் அழைப்புவிடுக்கும்.⋆Mar 704.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 704.2

    “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்ப்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” - தானியேல் 12:3.Mar 704.3