Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    யாக்கோபின் இக்கட்டுக்காலம்!, செப்டம்பர் 21

    “ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.” - எரேமியா 30:7.Mar 527.1

    இயேசு தமது ஆசாரிய ஊழியத்தை முடிக்கும்வரையிலும் நான்கு தூதர்களும் காற்றுகளைப் பிடித்திருப்பார்கள் என்று நான் கண்டேன். அதற்குப்பின்னர், கடைசி ஏழுவாதைகள் தொடர்கின்றன. இந்த வாதைகள் நீதிமான்களுக்கு எதிராக துன்மார்க்கரை வெகுண்டெழச்செய்தது. நாங்கள்தான் அவர்கள் மேல் அந்த ஆபத்துகளை வரவழைத்தோம் என்று நினைத்தார்கள்; எனவே, எங்களை இவ்வுலகத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டால், வாதைகள் நிறுத்தப்படும் என்று நினைத்தார்கள். பரிசுத்தவான்களைக் கொலைசெய்யும்படிக்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சட்டம் பரிசுத்தவான்களை இரவும் பகலும் விடுதலைக்காகக் கதறச் செய்தது; இதுவே யாக்கோபின் இக்கட்டுக்காலம்.Mar 527.2

    யாக்கோபிற்கு விரோதமாக படையெடுக்க ஏசாவை சாத்தான் தூண்டியதுபோலவே, யாக்கோபின் இக்கட்டுக்காலத்தில் தேவனுடைய மக்களை அழிக்கும்படி துன்மார்க்கரை சாத்தான் தூண்டி விடுவான். அன்று யாக்கோபைக் குற்றப்படுத்தினது போலவே, தேவனுடைய மக்கள்மேல் குற்றஞ்சாட்ட மக்களை ஏவுவான். இவ்வுலகவாசிகளை அவனுடைய மக்களாக அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்; ஆனால், தேவ கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற சிறிய கூட்டத்தார் அவனுடைய அதிகாரத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பூமியிலிருந்து அழித்துவிட்டால், அவனுடைய வெற்றி முழுமைபெற்றுவிடும். அவர்களைப் பரிசுத்த தூதர்கள் பாதுகாக்கிறார்கள்; எனவே, அவர்கள் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று அனுமானிக்கிறான். பரலோகத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்தில் அவர்களுடைய நித்தியம் தீர்மானிக்கப்பட்டது என்பதை அவன் அறியாமலிருக்கிறான். அந்த மக்களை எவ்வாறெல்லாம் பாவஞ்செய்யத் தூண்டினான் என்கிறதைக்குறித்த மிகச் சரியான அறிவு அவனுக்கு இருப்பதினால், அவர்கள் செய்த தவறுகளை மிகைப்படுத்தி, தன்னைப்போலவே அவர்களும் தேவனுடைய தயவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ஆண்டவரிடம் சுட்டிக்காட்டுகிறான். அவர்களை மன்னிக்கிற ஆண்டவர் தன்னையும் தன் தூதர்களையும் மன்னிக்காமல் அழிக்கப்போவது நியாயமில்லை என்பான். அவர்கள் தனது இரை என்று உரிமை கோரி, அவர்களை தனது இரை என்று உரிமை கோரி, அவர்களை அழித்துப்போடத்தக்கதாக, அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுப்பான்.Mar 527.3

    பாவங்களைச் சுட்டிக்காட்டி, சாத்தான் தேவனுடைய மக்களை குற்றஞ்சாட்டுகிறதினால், அவர்களை உச்சக்கட்ட நிலைவரை சோதிக்க, ஆண்டவர் அவனை அனுமதிக்கிறார். ஆண்டவர்மேல் அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை, அவர்கள் விசுவாசம், உறுதி எல்லாம் பயங்கரமாகச் சோதிக்கப்படும். தங்களுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் நம்பிக்கையெல்லாம் அமிழ்ந்துபோய்விடும்; ஏனெனில், தங்கள் வாழ்க்கை முழுவதிலும் எந்த நன்மையான காரியங்களையும் தாங்கள் செய்ததாக அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடைய பலவீனங்களையும் தகுதியின்மையையுங்குறித்து முற்றிலுமாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் என்கிற எண்ணத்தினாலே அவர்களைப் பயமுறுத்த சாத்தான் முயற்சிக்கிறான். அவர்களுடைய பாவக்கறை ஒருபோதும் கழுவப்பட முடியாதது என்பான்; இப்படியாக, அவர்கள் விசுவாசத்தைக் குலைத்தால், அவர்கள் அவன் கண்ணியிலே விழுந்து, தேவனுக்கு உண்மையாயிருப்பதிலிருந்தும் விழுந்துவிடுவார்கள் என்று நம்புகிறான்.⋆Mar 528.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 528.2

    “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; ஏன் நாமத்தை அவன் அறிந்திருக்கிற படியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” — சங்கீதம் 91:14.Mar 528.3