Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாழ்க்கையில் எதற்கு மிகவும் முக்கிய முன்னுரிமை கொடுக்க வேண்டும்?, மார்ச் 4

    “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” - மத்தேயு 6:33.Mar 125.1

    இதுவே முதல் மாபெரும் இலக்காகும்; அதாவது பரலோக இராஜ்யமும் கிறிஸ்துவின் நீதியுமாகும்; அடைந்துகொள்ளவேண்டிய மற்ற இலக்குகள் இரண்டாந்தரமானவைகளே.Mar 125.2

    பரிசுத்தத்தின் பாதை கடினமானதுபோன்றும், உலகத்தின் சிற்றின்பங்களின் பாதையோ, மலர் தூவப்பட்டதுபோன்றும் சாத்தான் நமக்குமுன் காட்டுவான். பொய்யான-பகட்டான வண்ணங்களில் உலகத்தையும் அதைச்சார்ந்த சிற்றின்பங்களையும் சோதனைக்காரன் உங்களுக்குமுன்பாக வரிசையில்வைத்து அழகு படுத்திக்காட்டுவான். நமது கீழ்த்தரமான குணங்களின் வீண் பெருமையானது, வலிமையான பண்புகூறுகளில் ஒன்றாகும். அந்தக் குனதின்மூலமாக, கவர்ச்சித்து வெற்றிகொள்ளமுடியும் என்பது அவனுக்குத் தெரியும்.Mar 125.3

    அவனுடைய பிரதிநிதிகள்மூலமாக உங்களை முகஸ்துதி செய்வான். நீங்கள் பெற்றுக்கொள்கின்ற புகழ்ச்சியானது, உங்களது வீண் பெருமை என்னும் குணத்தை திருப்திப்படுத்தி, உங்களிலே பெருமையையும் சுயமதிப்பையும் வளரச்செய்யும். உலகத்திலே இத்தகைய அனுகூலங்களும், கவர்ச்சியான காரியங்களும் இருக்கும்போது, இவைகளைவிட்டு வெளியேறி, பிரிந்துவந்து ஒரு கிறிஸ்தவனாக மாறுவது உண்மையிலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய காரியம் என்று நீங்கள் நினைக்கலாம்...ஆனால் இந்த உலகத்தின் சிற்றின்பங்களுக்கு ஒரு முடிவு உண்டு என்பதனையும், நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே நீங்கள் கண்டிப்பாக அறுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்துபாருங்கள். நீங்கள் ஜீவனோடு இருப்பதற்கு ஆரம்பமாக, ஆதியாக இருக்கின்றவராக ஒவ்வொரு கணமும் உங்கள்மீது அக்கறைகொண்டவராக விழிப்புடன் உங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கும், தேவனுக்கு பக்தி செலுத்தகூடாத அளவிற்கு, உங்களது தனிப்பட்ட கவர்ச்சிகளும், திறமையும் அல்லது தாலந்தும் அவ்வளவு மதிப்புவாய்ந்தவைகளா? உங்களது தகுதிச் சான்றுகள் அவருக்கு உங்களை அர்ப்பணிக்கக் கூடாத அளவிற்கு அவ்வளவு விலையேறப் பெற்றவைகளா? Mar 125.4

    வாலிபர்கள் தங்களுக்கு எழுச்சியூட்டத்தக்கதாகவும், தங்களது மனிதன் போக்கை மாற்றுவதற்காகவும் ஏதாவது ஒன்று அவசியம் என்று வற்புருத்துகிறார்கள். கடின உழைப்பில் ஒரு மகிழ்ச்சி உண்டென்பதையும், பயனுள்ள ஒரு வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதிலும் ஒரு திருப்தி இருக்கிறதென்பதையும் நான் கண்டேன். கவலைகள் உடலைச் சோர்வடையச்செய்யும். கடுமையான வேலைகளுக்கு மத்தியில், பாரத்தைக் குறைத்துகொள்வதர்க்கும், புது மலர்ச்சி பெறுவதற்கும், மனதைத் திருப்புவதற்கும் ஏதோ ஒன்று கண்டிப்பாக வேண்டுமென்று சிலர் தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். கிறிஸ்தவனின் நம்பிக்கையே தேவையான ஒன்றாகும். மார்க்கமானது ஒரு விசுவாசிக்கு தேற்றரவாளனாகவும், உண்மையான மகிழ்ச்சியின் ஊற்றிற்கு வழிநடத்தும் உறுதியான ஆலோசகராகவும் இருப்பதை மெய்ப்பித்துக்காட்டும். வாலிபர்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து படிக்கவேண்டும். தங்களை ஜெபத்திலும், தியானத்திலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் வசமிருக்கும் மீதமான நேரங்களை இதைவிட சிறந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்.Mar 126.1

    வாலிப நண்பர்களே, தேவனுடைய அன்பில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா என்பதை நேரமெடுத்து-சிந்தித்து-நீங்களே உங்களை நிரூபித்துக் காட்டுங்கள். உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயபடுத்திகொள்ளத்த்க்கதாக கடுமையாக முயற்சிசெய்யுங்கள்.Mar 126.2

    முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அதையே உங்களது வாழ்க்கையில் முதலாவதாகவும் கடைசியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அவரை அறிவதற்காக, அதிக ஊக்கமாக முயற்சிசெய்யுங்கள். அவரை சரியாக அறிந்துகொள்வதே நித்தியஜீவன். கிரிஸ்துவும் அவருடைய நீதியுமே ஆத்துமாவின் இரட்சிப்பாகும்.⋆Mar 126.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 126.4

    “அவன் சந்ததி பூமியில் பலந்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.” - சங்கீதம் 112:2.Mar 126.5