Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆசரிப்புக்கூடாரம் என்ற பொருளைப்பற்றி நீங்கள் கவனமாகப் படியுங்கள்!, ஆகஸ்டு 27

    “அவன் என்னை நோக்கி: இரண்டாயித்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்றான். - தானியேல் 8:14.Mar 477.1

    தீர்க்கதரிசனத்தைப் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் உள்ள மாணவர்களாக நாம் இருக்க வேண்டும். ஆசரிப்புக்கூடாரம் என்ற பொருளைக்குறித்து தெளிவாக அறிந்து கொள்ளும்வரை நாம் இளைப்பாறக்கூடாது. இந்த ஆசரிப்புக்கூடாரம் பற்றிய காரியமானது தானியேல், யோவான் ஆகியோரது தரிசனங்களிலே கொண்டு வரப்பட்டிருக்கிறது. நமது தற்கால நிலைபற்றியும் ஊழியம்பற்றியும் இந்த ஆசரிப்புக்கூடாரம் என்ற பொருளானது அதிக வெளிச்சத்தைக் கொடுக்கிறது. கடந்தகால அனுபவங்களில் தேவன் நம்மை வழிநடத்தியிருக்கிறார் என்பதற்கான, தவறாத ஒரு சான்றை நமக்குக் கொடுக்கிறது. 1844-இல் நமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப்பற்றி விளக்கிக்காட்டுகிறது. நாம் முன்பு யூகித்தது போல், ஆசரிப்புக்கூடாரம் சுத்திகரிக்கப்படுவது என்பது, இந்த பூமியைச் சுட்டிக்காட்டவில்லை என்றும், பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலே மகா பரிசுத்தஸ்தலத்திற்குள், கிறிஸ்து பிரவேசித்திருக்கிறார் என்றும், தானியேல் தீர்க்கதரிசிக்கு தூதன் கூறிய வார்த்தையின் நிறைவேறுதலாக, அவர் தமது ஆசாரிய ஊழியத்தின் இறுதி வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் என்றும் காட்டுகிறது.Mar 477.2

    எருசலேமை எடுப்பித்துக்கட்டுவதற்கான அர்தசஷ்டாவின் கட்டளையானது, கி.மு. 457-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது; அதுவே, 2,300 நாட்களின் ஆரம்பம் என்று கண்டறியப்பட்டது; அதுவே, துவக்கக் குறியீடாக எடுக்கப்பட்டு, தானியேல் 9:25-27 ல் கூறப்பட்ட காலகட்டத்தைபற்றிய விளக்கத்தில் முன்னூரைக்கபட்ட சம்பவங்கள் பூரண இசைவோடு அதின் வழியிலே அமைந்தது; 70 வாரங்கள் அல்லது 490 ஆண்டுகள் குறிப்பாக யூதர்களைப்பற்றியதாகும். இந்த காலகட்டம் முடிவடையும்போது, அவர்களது சீடர்களை உபத்திரவத்திற்கு உட்படித்தி, கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, அந்த ஜாதி (யூதர்கள்) முடிவைத் தீர்மானித்துக்கொண்டது; அதன் பின்னர், அப்போஸ்தலர்கள் கி.பி. 34-ல் புறஜாதிகளிடத்தில் திரும்பினார்கள். 2300-ல், முதல் 490 ஆண்டுகள் அப்பொழுது முடிவடைந்து; மீதமுள்ளது 1810 ஆண்டுகளாகும். கி.பி. 34-ல் இருந்து 1810 ஆண்டுகள் விரிந்து, 1844-ஐ எட்டியது; “பின்பு ஆசரிப்புக்கூடாரம் சுத்திகரிக்கப்படும்” என்று தூதன் கூறினான்.Mar 477.3

    முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதனுடைய தூதுகள்பற்றிய காரியத்தில், நம்முடைய விசுவாசம் சரியாக இருந்தது. நாம் கடந்து சென்றிருக்கிற மாபெரும் வழிகாட்டும் குறிகள் அசைக்க முடையாதவை. பாதாளத்தின் சேனைகள் அதின் அடித்தளத்தினின்று அதைப் பிடிங்கிப்போட முயற்சித்தாலும், தாங்கள் வெற்றி பெற்றோம் என்ற நினவில் களிகூர்ந்தாலும், அவர்கள் வெற்றிபெறவில்லை. நித்தியமான மலைகளைப்போன்று இந்த சத்தியத்தின் தூண்கள் திடமாக நிற்கின்றன. சாத்தானும் அவனது சேனைகளோடு மனிதரும் சேர்ந்து, செய்யப்பட்ட முயற்சிகளினால் அசையவில்லை. இதைக்குறித்து நாம் அதிகமாகக் கற்றுக் கொள்ளலாம்; இந்த காரியங்கள் இப்படி இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு, தொடர்ந்து வேதவாக்கியங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.⋆Mar 478.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 478.2

    “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்” - சங்கீதம் 119:1.Mar 478.3