Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞானமுள்ளவரா? அல்லது மதியீனமானவரா?, பிப்ரவரி 15

    “அப்போழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.” - மத்தேயு 25:1,2.Mar 91.1

    நாம் சபை அங்கத்தினராக இருப்பதினால் இரட்சிக்கப்பட்டுவிடுவோம் என்ற எண்ணத்தில் ஓய்ந்திருக்கமுடியாது. நாம் கிறிஸ்துவின் சாயலில் உறுதிபெற்றிருக்கிறோம் என்று எந்த அத்தாட்சியும் இல்லை. நான் இன்னும் நமது பழைய குணங்களைப் பற்றிக்கொண்டு, நமது துணியை உலக சிந்தைகள், பழக்க வழக்கங்கள் ஆகிய நூல்களைக்கொண்டு நெய்கிறோம்...Mar 91.2

    இப்பூமியின் வரலாற்றின் அந்திநேரத்திலே, பத்து கன்னிகைகள் விழிப்போடு மணவாளனை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்; அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாரட்டுகின்றனர்; அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்; அனைவருக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது; ஒரு விளக்கு இருக்கிறது. அனைவரும் தேவனுக்கு ஊழியஞ்செய்துகொண்டு இருப்பதாக உரிமை கோருகின்றனர்; அனைவரும் அவரது வருகையை எதிர்நோக்கியிருப்பதுபோன்று வெளிப்படையாகக் காணப்படுகின்றனர்; ஆனால் ஐந்து கன்னியர்களும் குறைவுள்ளவர்களாகக் காணப்படிகின்றனர். அந்த ஐந்து கன்னியரும் அதிர்ச்சியும் அச்சமும் நிறைந்தவர்களாக விருந்துசாலைக்கு வெளியில் நிற்கின்றனர்.Mar 91.3

    நாம் புத்தியுள்ள கன்னிகைகள் அல்லது புத்தியில்லாத கன்னிகைகளால் சுட்டிக்காட்டப்படுகிறோம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரைக்குறித்து அறிந்துகொள்ளாமல் பலர் இருக் கின்றனர். அவரது விழிகளை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர் வருகைக்கு அவர்கள் ஆயத்தமாக இல்லை. அவர்கள் தங்கள் கர்த்தருக்காகக் காத்திருப்பதாக ஒரு பாவனையை உருவாக்கி உள்ளனர். அன்பால் இயங்கக்கூடியதும், ஆத்துமாவை சுத்திகரிக்கக்கூடியதுமான விசுவாசத்துடன் அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் ஜெபிக்கவும் இல்லை. அவர்கள் கவனமில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் சத்தியத்தை கேட்டும், ஏற்றுக்கொண்டும் இருக்கிறார்கள்; ஆனால், அதை அவர்களது நடைமுறை வாழ்வினில் ஒருக்காலும் கொண்டுவரவில்லை. அவர்களது விளக்குகளை கிருபையின் எண்ணெய் எரியவைக்கவில்லை. அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் பிரவேசிக்க ஆயத்தப்படவில்லை.Mar 91.4

    கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றாமல் இருந்துகொண்டு, தேவனது வாக்குதத்தங்கள் தங்களுக்காக அருளப்பட்டவை என எடுத்துக்கொள்ளும் புத்தியில்லாத கன்னிகைகளைப்போல இருக்க வேண்டாம். வெளித்தோற்றம் ஒன்றுமில்லை என கிறிஸ்து கற்பிக்கிறார். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவான்”” என்கிறார்...Mar 92.1

    சுத்தப்படுத்துகிற, தூய்மைப்படுத்துகிற செயல்முறையான தேவனுடைய சோதனையில் நிலைநிற்கும்பொழுது, சூளையின் அக்கினியால் கழிவுகள் எரிக்கப்பட்டு, பரிசுத்தமான தன்மையுள்ள உண்மையான தங்கம் வெளிப்படும்போது, பவுலோடுகூட நாமும் சேர்ந்து: “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்... ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று கூறுவோம்.⋆Mar 92.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 92.3

    “கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்ச்சிப்பினால் அலங்கரிப்பார்.” - சங்கீதம் 149:4.Mar 92.4