Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வரவிருக்கும் காரியங்களுக்கான ஆயத்தங்கள்!, ஜூன் 2

    “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” - செப்பனியா 2:3.Mar 305.1

    மீறுதலானது ஏறக்குறைய அதின் எல்லையைத் தொட்டுவிட்டது. உலகம் குழப்பத்தால் நிறைந்திருக்கிறது. மானிடர்மீது ஒரு மாபெரும் பயங்கரம் வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிறது. முடிவு வெகு சமீபம்; திணறடிக்கின்ற ஓர் அதிர்ச்சியைப்போன்று பூமியின்மீது திடீரென்று தாக்கப்போகின்ற அந்தக் காரியத்திற்காக, தேவனுடைய மக்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கவேண்டும்.Mar 305.2

    ஒருபோதும் இருந்திராத உபத்திரவக்காலம் வெகு சீக்கிரத்தில் நம்மீது வரவிருக்கின்றது; அச்சமயத்தில் இப்பொழுது, நமக்கு இராத ஓர் அனுபவம் நமக்குத் தேவையாக இருக்கும். அதைப் பெற்றுக்கொள்ளமுடியாதபடி அநேகர் சோம்பேறிகளாக இருக்கின்றனர். துன்பமானது உண்மையிலேயே அது நடைபெருவதைவிட அதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது அதிகமான துன்பமாக இருக்கும்; ஆனால், நமக்கு முன்பாக இருக்கும் நெருக்கடியைக் குறித்த காரியத்தில் அது உண்மையல்ல; மிகத் தெளிவாகக் கொடுக்கப்படும் விளக்கங்கூட, அந்தக் கடுமையான துன்பத்தின் பரிமாணத்தை நெருங்கவே முடியாது. அந்த கடுமையான உபத்திரவத்தின் நேரத்திலே, ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கு முன்பாக தனக்காக நிற்க வேண்டும். “நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்க மாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்” - எசேக். 14:20.Mar 305.3

    உண்மைக்கும் பொய்க்கும் இடையேயுள்ள கடைசிப்பெரும் மோதலானது, தேவனுடைய பிரமாணத்தைப்பற்றிய நீண்டகால எதிர்வாதத்தின் இறுதிப்போராட்டமாகும். இந்தப் போராட்டத்திலே நாம் பிரவேசித்துக்கொள்கிறோம். இது மனிதரின் சட்டங்களுக்கும், யேகோவாவின் பிரமாணங்களுக்கும், வேதாகம் மார்க்கத்திற்கும், கட்டுக்கதைகள், பாரம்பரியங்கள் ஆகியவைகளைக் கொண்ட மார்க்கத்திற்கும் இடையேயுள்ள போராட்டமாகும்.Mar 306.1

    நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இக்காலத்தைச் சுட்டிக்காட்டும் மாபெரும் பாதைக் குறியீடுகளை நாம் படிக்கவேண்டும்...தேவனுடைய ஆயத்தத்தின் அந்த மகா நாளின் போராட்டங்களுக்காக, ஆயத்தமாக இருப்பதற்காக, இப்பொழுது நாம் அதிக ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும்.Mar 306.2

    தேவனால் வழிகாட்டப்பட்டு நடத்தப்பட அவருடைய கட்டுப்பாட்டிற்குள் தங்களை வைத்துக்கொள்பவர்கள் மட்டுமே நடைபெறவேண்டுமென்று அவரால் வகுத்து ஒழுங்குசெய்யப்படுகின்ற அந்த வழிமுறையைத் திடமாகப் பற்றிக்கொள்வார்கள். இந்த உலகத்தினரின் வாழ்விற்காக, தமது ஜீவனை தத்தஞ்செய்தவருடைய ஆவியினால் தூண்டப்பட்டு, தாங்கள் இதைச் செய்ய முடியாது என்று சுட்டிக் காட்டிக்கொண்டு, இனி ஒருபோதும் ஆற்றலற்றவர்களாக நின்று கொண்டிருக்கமாட்டார்கள். பரலோகத்தின் போர்க் கவசத்தை அணிந்தவர்களாக, யுத்தஞ்செய்யப் புறப்பட்டு வெளியே செல்வார்கள். அவர்கள், சர்வவல்லமையுள்ள தேவன் தங்களது தேவையை வழங்குவாரென்று அறிந்தவர்களாக, தேவனுக்காக துணிவுடன்-பயமின்றி-யுத்தஞ்செய்ய விருப்பத்தோடு செல்வார்கள்.⋆Mar 306.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 306.4

    “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:...பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” - ஏசாயா 43:1.Mar 306.5