Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீங்களே ருசித்துப்பாருங்கள்! , மார்ச் 7

    “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்...” - சங்கீதம் 34:8.Mar 131.1

    நமக்கு நாமே தேவன் நல்லவர் என்பதயும், அவரது அன்பையும் எப்படி அறிந்துகொள்வது? சந்கீதக்காரன், கேள்விப் பட்டு அறிந்துகொள்ளுங்கள்; வாசித்து அறிந்துகொள்ளுங்கள்; அல்லது விசுவாசித்து அறிந்துகொள்ளுங்கள் என்று நமக்குக் கூறாமல், “தேவன் நல்லவர் என்பதி ருசித்துப்பாருங்கள்” என்று கூறுகிறார். இன்னொருவரது வார்த்தையில் நம்பிக்கை விபத்தைவிட, நீங்களாகவே ருசித்துப்பாருங்கள்.Mar 131.2

    பரிசோதனையினின்று பெற்றுக்கொள்ளும் அறிவே அனுபவமாகும். அனுபவத்தை அடிப்படையாகக்கொண்ட மார்க்கமே இன்று நமக்குத் தேவைப்படுகிறது... சிலர் ஆம், அநேகருக்கு, மார்க்கசம்பந்தமான சாத்தியங்கள், ஏட்டளவில் இருக்கும் ஒரு அறிவாகவே இருக்கிறதேயொலிய அவர்களது சொந்த இருதயங்களில் தெய்வீக கிருபையையும் புதிப்பிக்கும் வல்லமையும் அவர்கள் ஒரு போதும் உணர்ந்ததில்லை... தேவனது உக்கிர கோபத்தைப்பற்றிய காரியத்தை நம்புகிறார்கள்; ஆனால், அதிதினின்று தப்புவதற்காக எத்தகைய ஊக்கமான முயற்சிகளையும் எடுக்கிறதில்லை. பரலோகம் ஒன்று உண்டு என்று விசுவாசிக்கிறார்கள்; ஆனால், அதைப் பெற்றுக்கொள்வதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்கிறதே இல்லை... பாவத்திற்காக ஒரு பரிகாரமுண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்; ஆனால், அதைப் பயன்படுத்துவது இல்லை. சரியானது எது என்பது அவர்களுக்குத் தெரியும்; ஆனால், அதில் எத்தகைய விருப்பமோ, ஈடுபாடோ கிடையாது. அவர்களது அத்தனை அறிவும் அவர்களுக்கு தண்டனையைத் தான் அதிகரிக்கச்செய்யுமேதவிர, வேறு எந்த பலனுமில்லை. தேவன் நல்லவர் என்பதை அவர்கள் ஒருபோதும் ருசித்துப்பார்த்ததுமில்லை; அனுபவத்தின்மூலமாகக் கற்றுக்கொண்டதுமில்லை.Mar 131.3

    கிறிஸ்துவின் சீடனாக வேண்டுமானால் சுயத்தை வெறுத்து, நன்மை, தீமை ஆகியவைகளினூடே கிறிஸ்துவைப் பின்பற்றிச் செல்லவேண்டும்... ஒவ்வொரு சிற்றின்பத் திளைப்பும், அது எவ்வளவு பிரியமானதாக இருந்தாலும், நமது மார்க்க சம்பந்தமுள்ள வாழ்க்கைக்குத் தடங்கல்செய்வதால், அது நமது வாழ்க்கையினின்று முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்... நாம் அடையவேண்டிய இலக்கின் தகுதிக்கு ஏற்றபடி, அதே விகித அளவிற்கு முயற்சிகள் எடுத்து தியாகங்கள் செய்வோமா?Mar 131.4

    நாம் அமைக்கின்ற ஒவ்வொரு தோழமையும் எவ்வளவுதான் அது ஒரு வரையறைக்கு உட்பட்டிருந்தாலும், அது நம்மீது அதின் செல்வாக்கை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த செல்வாக்கிற்கு நாம் எந்த அளவிற்கு விட்டுகொடுக்கிறோம் என்ற காரியமானது உறவு நெருக்கத்தின்-கூட்டுறவின் உறுதி நிலையினால் நாம் யாருடன் தோழமைகொண்டிருக்கொன்றோமோ, அவர்களிடத்தில் நாம் கொண்டிருக்கிருக்கும் அன்பு, ஆழ்ந்த மதிப்பு ஆகியவையே தீர்மானஞ்செய்யும். இவ்வாறு, கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் அறிமுகம், தோழமை ஆகியவைகளின்மூலம், பழுதற்ற “முன்மாதிரியாக” இருக்கின்ற, அவரைபோல ஆகமுடியும். கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் ஆன்மீக உறவு சொல்லொண்ணாத அளவிற்கு எத்தனை அருமையானது! அத்தகைய உறவை நாம் தேடுவோமானால், அதைப் பெற்றுக்கொள்ளததக்கதாக எந்தவிதமான தியாகத்தையும் தக்க சிறப்புரிமையாக இருக்கும்.Mar 132.1

    எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாக, “தேவன் சாதியமுள்ளவர் என்று முத்திரைபோட்டு நிச்சயப்படுதமுடியும்” -யோவான் 3.33; “எனக்கு உதவி தேவையாக இருந்தது. அந்த உதவியை இயேசுவில் நான் கண்டடைந்தேன். ஒவ்வொரு தேவையும் வழங்கப்பட்டது. எனது ஆத்துமப் பசியானது திருப்தியாக்கப்பட்டது... நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்; ஏனெனில், அவர் எனது தெய்வீக மீட்பராக இருக்கிறார். நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன்; ஏனெனில், வேதாகமம் எனது ஆத்துமாவிற்கான தேவனின் குரலாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறேன்” என்று அவர் உறுதியாகக் கூறமுடியும்.⋆Mar 132.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 132.3

    “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமனவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.” - சங்கீதம் 9:9.Mar 132.4