Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வானத்தில் தேவனுடைய நியாயப்பிரமாணம் காணப்படுகிறது!, அக்டோபர் 5

    “வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.” - சங்கீதம் 50:6.Mar 555.1

    மேகங்கள் விலகின, இருபக்கமும் நிலவிய இருண்ட சீற்றத்தோடுகூடிய ஆகாய விரிவிற்கு நேர்மாறாக, மிகுந்த மகிமையோடு நட்சத்திரங்கள் நிறைந்த வானம் காணப்பட்டது. பரலோகப் பட்டணத்தின் மகிமை, பாதி திறந்த அதன் வாசல்கள் வழியாகக் கடந்துவந்தது.Mar 555.2

    ஆலயத்தினுள்ளே, தேவனுடைய கைவிரலினால் எழுதப்பட்ட பத்துக்கற்பனைகள் அடங்கிய கற்பலகையையுடைய உடன்படிக்கைப்பெட்டி காணப்படும். இந்தக் கற்பலகைகள் தங்கள் மறைவிடத்திலிருந்து எடுத்துவரப்படும்; அதிலே, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பத்துக்கற்பனைகளும் காணப்படும். உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருக்கிற இந்த கற்பலகைகள், சத்தியத்திற்கும், தேவனுடைய சட்டங்களுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கும்.Mar 555.3

    புனித காரியங்களின் மதிப்பைப் குலைத்துப்போட்ட எண்ணங்களும் இதயங்களும் தாங்கள் யேகோவாவின் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற வல்லமை படைத்தவர்கள் என்று எண்ணிக்கொண்டார்கள்; ஆனால், ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகள் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டு, தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியினுள், பரலோக ஆவணக்கூடத்திலே பத்திரமாக இருக்கிறது. கிருபாசனத்திற்குக் கீழிருக்கிற அந்த பரிசுத்தமான மறைவிடத்திலிருந்து, பூமியிலிருக்கிற எந்த வல்லமையும் அவைகளை எடுக்கமுடியாது.Mar 555.4

    மடிக்கப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் பிடித்திருக்கிற ஒரு கை வானத்திலே காணப்படுகிறது. “வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி” (சங்கீதம் 50:6) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். இடிமுழக்கங்களுக்கும் அக்கினியின் சீற்றத்திற்கும் நடுவே, வாழ்க்கையின் வழிக்காட்டியாக, சீனாய் மலையிலே கொடுக்கப்பட்ட தேவனுடைய நீதியாகிய அந்த பரிசுத்த கற்பனைகள் இப்போது நியாயச் சட்டமாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அந்தக் கரம் அந்தக் கற்பலகைகளைத் திறக்கிறது. அக்கினியினாலே எழுதப்பட்ட பத்துக்கற்பனைகளும் அங்கே காணப்படுகின்றன. எல்லோரும் வாசிக்கத் தகுந்தவிதத்தில் அதன் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன. அவர்களுடைய நினைவின் சக்திகள் எழுச்சியடைகின்றன. முரணான சமயக் கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய இருள் அவர்கள் மனதிலிருந்து அகன்று போகிறது. அங்கே, புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில்-சுருக்கமாக-அதிகாரத்தோடு-ஆண்டவருடைய பத்துக்கற்பனைகளும், பூமியின் குடிகள் அனைவருக்கும் முன்பாக காண்பிக்கப்படுகிறது.Mar 555.5

    தேவனுடைய பரிசுத்த கட்டளைகளை மிதித்துப்போட்ட மக்களுடைய பயத்தையும், அவர்கள் மனம் உடைந்த விதத்தையும் விவரிக்க இயலாது.Mar 556.1

    ஊழியக்காரரிலிருந்து கடைசி மனிதன்வரை ஆண்டவருடைய கற்பனைகளுக்கு எதிரிகளாயிருந்தவர்கள் அனைவரும் சத்தியம் என்றால் என்ன? அதற்கு நாம் செய்யவேண்டிய கடமை என்ன? என்கிறதை உணருகிறார்கள். எழாம் நாள் கற்பனையாகிய ஓய்வுநாளே, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையாயிருக்கிறது என்பதை மிகவும் தாமதமாகவே புரிந்துகொள்கிறார்கள்.⋆Mar 556.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 556.3

    “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசந்த்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.” - வெளிப்படுத்தல் 3:21.Mar 556.4