Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்து ஏன் தமது வருகையை தாமதிக்கிறார்?, பிப்ரவரி 22

    “மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குருகினதானபடியால்...” -1 கொரிந்தியர் 7:29.Mar 105.1

    தேவதூதர்கள் மனிதர்களுக்கான தங்கள் தூதுகளில் காலத்தை மிகவும் குருகியதாகக் காட்டுகின்றனர். எப்பொழுதும் எனக்கு அவ்வாறே காட்டப்பட்டது. இத்தூதின் ஆரம்ப காலத்தில் நாம் எதிர்பார்த்ததைவிட, காலம் நீண்டு தொடர்ந்தது உண்மை தான். நமது இரட்சகர் நாம் எதிர்பார்த்த அளவு சீக்கிரம் வரவில்லை. கர்த்தருடைய வார்த்தை பொய்த்துவிட்ட்தா? ஒருக்காலும் இல்லை. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மற்றும், ஆபத்து வருமெனக்கூறி கொடுக்கப்படும் எச்சரிக்கைகள் ஆகிய இரண்டுமே நிபந்தனைக்குட்ப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.Mar 105.2

    தேவன் தம் மக்களுக்கு இப்பூமியில் நிறைவேற்ற ஒரு வேலையைக் கொடுத்துள்ளார். மூன்றாம் தூதனின் தூது கொடுக்கப்பட வேண்டும். தம் மக்களுக்கு பாவ நிவாரணம் செய்யத்தக்கதாக கிறிஸ்து பிரவேசித்துள்ள பரலோக ஆசரிப்புக்கூடாரத்திற்க்கு நேராக விசுவாசிகளின் மனம் திருப்பப்பட வேண்டும்; ஓய்வு நாள் சீர்திருத்தம் முன்னே கொண்டுசெல்லப்பட வேண்டும். நிறைவேற்றப்படாமல் இருந்த தேவனுடைய பிரமாணத்தில் ஏற்பட்டுள்ள திறப்பானது அடைக்கப்பட வேண்டும். பூமியின் குடிகளெல்லாம் எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, இந்தத் தூது மிகவும் சத்தமாக பறைசாற்றப்பட வேண்டும். தேவ மக்கள் சத்தியத்திற்க்கு கீழ்ப்படிவதின்மூலம், தங்கள் ஆத்துமாக்களைச் சுத்திகரித்து, அவரது வருகையின்போது, குற்றமற்றவர்களாக அவர்முன் நிற்ப்பதற்க்கு ஆயத்தப்பட வேண்டும்.Mar 105.3

    அட்வெந்து மக்கள் (இரண்டாம் வருகைக்காக காத்திருப்போர்) 1844-ன் மாபெரும் (Great Disappointment) ஏமாற்றத்திற்குப் பிறகு, தங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு, வெளிப்படும் தேவனின் அருட்செயலிற்காக ஒன்றுபட்டு இணைந்தவர்களாக முன்னேறி, மூன்றாம் தூதனின் தூதைப்பெற்று, அதைப் பரிசுத்த ஆவியின் வல்லமையைக்கொண்டு இவ்வுலகிற்குப் பறைசாற்றி இருந்திருப்பார்களேயானால்... கர்த்தர் அவர்களது முயற்சிகளோடு கூட வல்லமையாக கிரியைசெய்திருப்பார். இந்த வேலையும் முடிவடைந்திருக்கும், கிறிஸ்து தம் மக்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பலனளிக்க இதற்கு முன்னரே வந்திருப்பார்.Mar 105.4

    அந்த மாபெரும் ஏமாற்றத்தை பின்தொடர்ந்து, சந்தேகம் நிறைந்த, நிச்சயமற்ற காலகட்டத்திலே, அநேக அட்வெந்து விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிட்டனர்... இவ்வாறாக தேவனது ஊழியம் தாமதப்படுத்தப்பட்டு, உலகம் இருளில் விடப்பட்டது...Mar 106.1

    அவிசுவாசம், முறுமுறுப்பு, கலகம் ஆகியவைகள் ஆதி இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்க்குள் பிரவேசிக்கமுடியாதபடி நாற்பது ஆண்டுகாலம் தடுத்துவிட்டது. அதே பாவங்களே, தற்போதைய இஸ்ரவேலர்கள் பரலோக கானானுக்குள் பிரவேசிப்பதை தாமதப்படுத்தியிருக்கிறது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் தேவ வாக்குத்தத்தங்களில் எந்த தவறும் இல்லை. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் அவிசுவாசம், உலகப்பற்று, ஒப்புக்கொடாதிருத்தல், கலகம் ஆகியவைகளே நம்மை பாவமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் இத்தனை நீண்டகாலம் வைத்துள்ளது.⋆Mar 106.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 106.3

    “அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஊரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக்காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.” - எரேமியா 17:8.Mar 106.4