Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சுயத்தை மறத்தல் என்பது சிறந்த பண்பு! , ஏப்ரல் 22

    “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறைப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவ எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” - கலாத்தியர் 2:20.Mar 223.1

    விசுவாசத்தினாலே பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்துவின் கிருபையை தம்முடையதாக்கிக்கொண்டார். இந்தக் கிருபையானது அவரது ஆத்துமாவின் அத்தியாவசியத் தேவைகளையெல்லாம் வழங்கியது. அந்த பரலோக ஈவை அவர் விசுவாசத்தினாலே பெற்றுக்கொண்டார். வெளிச்சத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு அதைப் பங்காகக் கொடுத்தார். இதுவே நமக்குத் தேவையான அனுபவமாகும்…அந்த விசுவாசத்திற்காக ஜெபியுங்கள். அதற்காக முயற்சிசெய்யுங்கள்; அதை தேவன் உங்களுக்குக் கொடுப்பார் என்று நம்புங்கள்.Mar 223.2

    இந்த நம்முடைய உலகத்திலே ஒரு மாபெரும் ஊழியம் நடை பெற வேண்டியதிருக்கிறது. இது கனவுலகமல்ல. நமக்குமுன்பாக ஜீவனுள்ள உயிர்தோற்றங்கள் இருக்கின்றன. எங்கணும் சாத்தானுடைய வல்லமையின் வெளிப்படுத்தல்கள் காணப்படுகின்றன. நம்மை பழைய நிலைக்குக் கொண்டுவந்து, உயர்த்துவதற்காக நம்மை பழைய நிலைக்குக் கொண்டுவந்து, உயர்த்துவதற்காக உழைக்கின்ற அவரோடு, நாமும் இணைந்து வேலைசெய்வோம். கிறிஸ்துவிற்காக உழைக்கின்ற நபர், அனைத்து வல்லமைகளுக்கும் ஊற்றாகிய அவருடைய வல்லமையை புதிதாகப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது…கிறிஸ்தவர்கள் சிந்தனை ஆற்றலையும் திடமுள்ள சித்தத்தையும் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதினால் வருகின்ற அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். அவர்களுடைய உள்ளங்களை அற்பமான காரியங்களை வைத்து அவர்கள் நிரப்புவதுகூடாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆவிக்குரிய வல்லமையில் புதுப்பிக்கப்படவேண்டும்.Mar 223.3

    “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” என்று சொன்ன ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவரால் போதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனுடைய காரியங்களிலே ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். ஒவ்வொரு நாளும் அவருடைய மீட்பின் மகத்துவத்தையும் அவரோடுகொண்டிருக்கும் ஒரு ஐக்கியத்தினால் வரும் மகிமையையும் நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். கிறிஸ்துவைப்போன்று எப்படி வாழ்வது என்பதைத் தொடர்ந்து நன்றாகக் கற்றுக்கொள்வீர்கள். தொடர்ந்து நீங்கள் அதிகமாக மீட்பரைப்போன்று முதிர்ச்சியைப் பெற்றுக்கொள்வீர்கள்.Mar 224.1

    நாம் சுயத்திற்கு மரிப்போமானால், கிறிஸ்து நமக்கு எப்படிப் பட்டவராயிருக்கமுடியும். நாம் அவருக்கு எப்படிப்பட்டவர்களாக இருக்கமுடியும் என்ற நமது கருத்தை விரிவான கண்ணோட்டத்தோடு நோக்குமானால், கிறிஸ்தவ சகோதரத்துவ இணைப்புகளிலே நாம் ஒருவரோடொருவர் ஐக்கியப்படுவோமானால் மாபெரும் வல்லமையோடு நம்மூலமாக தேவன் கிரியைசெய்வார். அதன்பின்னர், சத்தியதின்மூலமாக நாம் பரிசுத்தமாக்கப்படுவோம். தேவனாலே நிச்சயமாக நாம் தெரிந்துதெடுக்கப்படுவோம். அவருடைய ஆவியினாலே நாம் கட்டுப்படுத்தப்படுவோம். வாழ்வின் ஒவ்வொருநாளும் நமக்கு மிகவும் அருமையானதாக இருக்கும்; ஏனெனில், மற்றவர்களை ஆசீர்வதிக்கத்தக்கதாக நமக்கு ஒப்படைக்கப்பட்ட ஈவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அதிலே நாம் காண்போம்.Mar 224.2

    மற்றவர்களோடு நாம் செய்கின்ற அன்பின் சேவையிலே, நாம் சுயத்தை மறந்துவிடவேண்டும்….நாம் செய்கின்ற சில இரக்கத்தின் செயல்களையும் நாம் நினைவில் வக்காதிருக்கலாம். ஆத்துமாக்களின் மீட்பிற்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு செயலையும், தேவனுடைய பிள்ளைகளின் ஆறுதலிற்காகப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும், நித்தியமானது அதன் அனைத்து பிரகாசத்தோடும் கொண்டுவரும். கிறிஸ்துவிற்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல்கள், நித்தியகால முழுவதும் நமது மகிழ்ச்சியின் ஒரு பங்காக இருக்கும்.Mar 224.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 224.4

    “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்…” - யாத்திராகமம் 14:14.Mar 224.5