Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!, ஏப்ரல் 30

    “... பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்...” - யோவான் 20:21.Mar 239.1

    “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூட கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” (மாற்கு 16:20) என்று அப்போஸ்தலர்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்து அவரது சீடர்களை வெளியே அனுப்பியதுபோல, இன்றும் அவர் தமது சபையின் அங்கத்தினர்களை ஊழியஞ்செய்வதற்காக வெளியே அனுப்புகிறார். எந்த வல்லமை அப்போஸ்தலர்களுக்குக் கிடைத்ததோ, அதே வல்லமை இவர்களுக்கும் கிடைக்கும். இவர்கள் தேவனை தங்கள் பெலனாக வைத்துக்கொள்வார்களானால், அவர்களோடு அவர் வேலைசெய்வார்; அவர்கள் வீணாக வேலைசெய்ய மாட்டார்கள். தாங்கள் ஈடுபட்டிருக்கிற இந்த வேலையின்மீது ஆண்டவர் தமது முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளட்டும். “ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளை என்று சொல்லாதே; நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ பொய், நான் உனக்கு கட்டளையிடுகிறவைகளை எல்லாம், நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,” “கர்த்தர் தமது கரத்தை நீட்டி, அவரது ஊழியக்காரனின் வாயைத்தொட்டு, இதோ, என் வாயின் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்” என்றார் - எரமியா 1:7-9. நமது உதடுகளின்மீது அவரது பரிசுத்தத் தொடுதலை உணர்ந்தவர்களாக, அவர் கொடுக்கின்ற வார்த்தைகளைப் பேசுவதற்காகப் புறப்பட்டுச்செல்லும்படி நம்மிடம் வேண்டுகிறார். Mar 239.2

    சபைக்கு ஒரு பரிசுத்தப் பொறுப்பை கிறிஸ்து கொடுத்திருக்கிறார், கிறிஸ்துவின் கிருபையின் பொக்கிஷங்களையும், ஆராய்ந்து முடியாத ஐசுவரியத்தையும் தேவன் உலகிற்கு எடுத்துச்செல்லத்தக்கதான வாய்க்கால்களாக, ஒவ்வொரு சபை அங்கத்தினரும் இருக்கவேண்டும். கிறிஸ்துவின் குணத்தையும், அவரது ஆவியானவரையும் உலகிற்கு எடுத்துக்காட்டத்தக்கதான செயல் துணிகளை அவர் அதிகமாக விரும்புவது கிடையாது. மீட்பவரின் அன்பை மனித இனத்துன் மூலமாக வெளிப்படுத்துவதைவிட, வேறு எதுவுமே அவ்வளவு அதிகமான அளவிற்கு இந்த உலகத்துக்கு அவசியமில்லை. தேவன் எத்தகைய ஆண்கள், பெண்கள் மூலமாக கிறிஸ்துவத்தின் வல்லமையை வெளிப்படுத்தக் காத்திருக்கிறாரோ, அவர்களுக்காக பரலோகம் முழுவதுமே காத்துக்கொண்டிருக்கிறது. Mar 239.3

    சத்தியத்தை கூறியறிவிப்பதற்காக, சபை ஒரு முகவராக, செயல்துணையாக இருக்கின்றது. ஒரு சிறப்பான பணியைச் செய்யவதற்காக, சபை அவரால் அதிகாரம் பெற்றிருக்கிறது. சபையானது அவருக்கு உண்மையாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாசஞ்செய்யும். சபையானது பற்றுறறுதியில் உண்மையாக இருக்குமானால், இஸ்ரேலின் தேவனாகிய ஆண்டவரை கனப்படுத்துமானால், அந்த சபைக்கு எதிராக எந்த வல்லமையும் நிற்கமுடியாது.Mar 240.1

    தேவனுக்காகவும் அவரது ஊழியத்திற்காகவும் கொண்ட பற்றார்வமே, சுவிசேஷத்திற்காக சாட்சி கொடுக்கத்தக்கதாக சீடர்களை அசைத்தது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய-அவரது மீட்பின் அன்பைப்பற்றிய கதையையும் சொல்வதற்கான தீர்மானத்தோடு, அதே பற்றார்வத்தோடு, நமது இதயங்கள் கொழுந்துவிட்டு எரியாதா? மீட்பின் வருகையை எதிர்பார்த்தவர்களாக மட்டுமல்ல, வருகையைத் துரிதப்படுத்த வேண்டுமென்பதும், ஒவொரு கிறிஸ்துவனுக்கும் அளிக்கப்பட்ட சிறப்புரிமையாகும்.⋆Mar 240.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 240.3

    “ஒரு மனிதனின் தன பிள்ளையைச் சுமந்துகொண்டு போவது போல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டுவந்ததைக் கண்டீர்களே.” - உபாகமம் 1:31.Mar 240.4